உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, November 19, 2011

பாலைவன சோலையில் ஒரு பகலிரவு யுத்தம்.

அபுதாபியின் யாஷ் மெரீனா.


ஐக்கிய அரபு எமிரேகத்தின் தலை நகரான அபுதாபியின் யாஷ் மெரீனா சர்குயூட்டில் ( ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX) நமது பார்முலா 1 ன் பதினெட்டாவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை(13-11-2011) அன்று 6:30 க்கு முதல் முறையாக இரவு பகல் போட்டியாக இந்த ஆண்டில் நடந்தது .(கவனிக்கவும், சிங்கப்பூரின் Marina Bay Street போட்டி நடந்தது முழு இரவு நேரப்போட்டி )

அபுதாபியின் அழகிய இருப்பிடம் .
ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும்.ஐக்கிய அரபு எமிரேகம் அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள பாலைவனமும் ,பாரசீக கடலும் கொண்ட வித்தியாசமான இயற்கையை சீராட்டும் அழகிய நாடாகும்.

ஐக்கிய அரபு எமிரேகம் என்பது அபுதாபி, அச்மான், துபாய், புச்செய்ரா, ராசு அல் கைமா, சார்ச்சா மற்றும் உம் அல் குவெய்ன் ஆகிய எழு எமிரேகம் ஐக்கியமானது .இதன் தலை நகரம் நம் அபிதாபி . இங்குதான் ஐக்கிய எமிரேககங்களின் மன்னர்- மன்னர்கள் வசிக்கும் இடமாகும் .


பாலைவனம் மிகுந்த நாடா?


பொதுவாக ஒட்டகங்களும் ,பேரிச்சம்பழமும் ,எண்ணை கிணறுகள் பற்றி அறியும் போது ஐக்கிய அரபு எமிரேகத்தினை பாலைவனம் மிகுந்த நாடாக கற்பனை செய்யலாம் .ஆனால் இங்குள்ள ஒரே ஒரு எபிரேகத்தை தவிர மற்ற அனைத்து நகரங்களும் கடற்கரை கொண்டதாகும் .மற்றபடி கட்டிட கலையாகட்டும் ,அழகிய வேலைப்பாடுகள் ஆகட்டும் அரேபியர்கள் ரசனை உலகே அறிந்ததாகும் .எதிலும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் அவர்களிடம் என்ன வளம் இல்லை ?இன்னொரு சிறப்பு .


யாஸ் மரினா சர்க்யூட் ,இன்னொரு சிறப்பு கொண்டுள்ளது .ரேஸ் நடக்கும் நேரம் மட்டுமல்ல வருடத்தின் சகல நாட்களிலும் மக்கள் வந்து போகிறார்கள் .காரணம் இங்குள்ள பெர்ரரியின் தீம் பார்க்கை ,அனுபவிக்க!


உலகின் மிக பெரிய உள்அரங்க தீம் பார்க் 2.20,0000 சதுர அடியில் சகல பொழுது போக்கு அம்சத்துடன் பெர்ராரி நிறுவனத்தால் - செதுக்கி உருவாக்கபடுத்த்ப்பட்டுள்ளது .ஆம் ஒரு மணி நேரத்தில் 240 கி .மீ கடக்கும் வகையில் இயங்கும் ரோலர் கோஸ்டர் ,பெர்ரரியின் உருவாக்க வரலாறு ,அந்த அணியில் இதுவரை வெற்றிபெற்றவர்களுடன் சிமுலேட்டர் பயணம் என இருபது (உணவு விடுதியுடன் ) பிரிவுகளை கொண்டது .

நேரடியாக அனுபவிக்க முடியாவிட்டாலும் அனுபவிப்பவர்களின் பரவசத்தை இந்த தொடர்பில் காணுங்களேன்- http://www.ferrariworldabudhabi.com

இம்மாதிரியான ஒரு தீம் பார்க்கைத்தான் இந்திய இரண்டாவது களத்தில்,மும்பையில் உருவாக்க திட்டமிடுகிறார்கள் -அதாவது வருடம் முழுவதும் வருமானம் பெறுவதற்கு!யாஷ் மெரீனா களம் 


சீனாவின் Suntech Power Holdings Co., Ltd. (NYSE: STP), நிறுவனம் சூரிய சகத்தினை மின்சக்தியாக்கும் தொழில் நுட்ப மந்திரத்தை தன்னுடைய 1120 சூரிய  சக்தியை கிரகித்து மின்சக்தியாக்கும் (Panels)   படிக சிலிக்கான் ஒளிமின்னழுத்த தொகுதிகளை நிறுவி சுமார் 292 கிலோ வாட் சக்தியை உற்பத்தி பண்ணுவதன் மூலம் களத்தின் Shams Tower ஐ ஒளிர செய்கிறார்கள்.கடந்த 2009 ஆண்டிலிருந்து பயன்பாட்டுக்கு வந்தது .ஹெர்மன் தில்கேவால் வடிவமைக்கப்பட்ட அழகிய களம் .போட்டிக் களத்தின் நீலம் 305.355 கி.மீ
ஆகும் ..இருபத்தி ஒரு வளைவுகளை கொண்டது .


களத்தின்வேக நாயகன் 


இந்த களத்தின் வேக நாயகனாக இன்றும் திகழ்பவர் நம் சென்ற மற்றும் இந்த ஆண்டின் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல்.அதிக பட்ச வேகத்தின் அளவு1:40.279  நிமிடமாகும் .இந்த வேகம் இந்த ஆண்டில் கூட அந்த வேகம் தாண்டப்படவில்லை (1:42.612)


அபுதாபியின்  போட்டிக்கு போவோம் !
முதல் சுற்று...

 செபாஸ்டியன் வெட்டலின் வேகம் ஆரம்பிக்க ,அவருக்கு அடுத்து லீவிஸ் ஹேமில்டன் தொடர ,அவரை தொடர வேண்டிய மார்க் வெப்பரை பின்னுக்கு தள்ளி பெனாண்டோ அலோன்சா நான்காவதாக தொடர ,பிலிப் மாசா ஐந்தாம் இடமும் ,ஆறில் நிக்கோ ரோஷ்பெர்க்கும் ஏழில் மைகேல் ஷூமேக்கரும் ,எட்டில் இந்திய அணியின் -ஆண்ட்ரியன் சட்டிலும் ஒன்பதில் பால்டி ரெஷ்டாவும் ,பத்தில் செபாஸ்டியன் ப்யுமியும் தொடர்ந்தார்கள் ...


செபாஸ்டியன் வெட்டல் ரேசிலிருந்து வெளியேறினார் .


முதல் வளவு அனல் பறக்க கார்கள் கடந்து ,அடுத்த வளவில் யார் ,யாரை முந்தி வர போகிறார்கள் என இரண்டாவது வளைவில் எதிர்பார்க்கும்போது ,முதலில் சென்றுகொண்டு இருந்த வெட்டலின் கார் பின்புறமாக இழுத்து கொண்டு சென்றது போல சற்றும் எதிர்பாராமல் புள் வெளிக்குள் ஒரு சுற்று சுற்றி, நின்றது .

வலது பின்பக்க டயர் பஞ்சர் .

அப்படியே கார், பிட் லேன் வர, வலது பின்பகுதி சஸ்பென்சன் பாதிக்கவே வெட்டல் இந்த ஆண்டில் முதன் முறையாக வெளியேறும்படி ஆகி விட்டது .

மூன்றாம் சுற்று ...

செர்ஜியோ பெரஸ் பாதிக்க பட்ட முன்பகுதி விங் மாற்ற பிட் லேன் வந்தார் . 

ஐந்தாவது சுற்று ...

 வெப்பர் தன்னுடைய அற்புதமான DRS  (Drag Reduction System)தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மூன்றாம் இடத்தை பிடிக்க பிரயர்த்தனம் பண்ணிக்கொண்டு இருந்தார் .

எழாம் சுற்று ...

ஷூமேக்கர் -ஆண்ட்ரியன் சட்டிலின் காரின் தொழில் நுட்பத்துடன் பல பரீட்சை நடத்தி கொண்டு இருந்தார் .மெர்சிடிஸ் இன்னும் தொழில் நுட்ப வளர்ச்சியில் பின்னுக்கு இருப்பது தெளிவாக தெரிந்தது .

பதிமூன்றாம் சுற்று ...

முதலிடத்து ஹெமில்டனும் இரண்டாம் இடத்து ஆலோன்சாவும் இழுத்தல் தள்ளல் கோட்பாட்டின் படி முன்னுக்கும் பின்னுக்குமாக வேக நாடகம் செய்து கொண்டு இருக்க ,

பதினைந்தாம் சுற்று ...

பத்தாம் இடத்தில் இருந்த செபாஸ்டியன் ப்யுமி மி சாதுர்யமாக ஒன்பதாம் இடத்தில் இருந்த சாஹரா போர்ஸ் இந்தியாவின் பால்டி ரெஷ்டாவின் டயர் பிரச்சனையை தனக்கு சாதகமாக்கி கொண்டு ஒன்பதாம் இடத்தை தக்க வைத்து கொள்ள , அதே சமயத்தில் மூன்றாம் இடத்தில் வந்து கொண்டு இருந்த ஜென்சன் பட்டன் தன்னுடைய KERS-(Kinetic Energy Recovery Systems ) தொழில் நுட்பம் ஒத்துழைக்கவில்லை என்பதை தன் அணிக்கு தெரியபடுத்த அதை அறிந்த ரெட்புல்லின் அணி வெப்பரை முந்திசெல்ல அறிவுறுத்த- அங்கு புதிதாய் வெளியான படத்தின் டிக்கட் கவுண்டர் போல ஆனது .

சர்ச்சை 


இந்த மாதிரி களத்தில் இருக்கும் டிரைவர் தன்னுடைய அணியோடு தொடர்பு கொள்வது அனைவரும் அறிவது பார்முலா போட்டியில் சில சட்ட சிக்கலை தருகிறது .எதிர் அணிக்கு இது சாதகமாக ஆகி விடுகிறது .இது பற்றி சர்ச்சை தீரவேண்டும் .டிரைவரின் உரையாடல் அவர்கள் அணிக்கு மட்டுமே கேட்க வேண்டும் ,பேசவேண்டும் .அது மட்டுமே நல்லது .


பதினெட்டாவது சுற்று ...

விர்ஜின் காஷ்வோர்த் அணியின் பெல்ஜியன் ஜெரோ மீ d'அம்ப்ரோசியோ பிரேக்கில் ஏற்பட்ட கோளாறினால் வெளியேறினார் .

பத்தொன்பதாவது சுற்று ...

டோரோ ரோஷோ அணியின் சுவிஸ் நாட்டின் டிரைவர் செபாஷ்டியேன் ப்யுமி காரின் ஹைட்ராலிக் பழுதினால் தொடரமுடியாமல் வெளியேறிவிட்டார் .

இருபதாவது சுற்று ...

ஒன்பதாம் இடத்தில் இருந்து ஷூமேக்கர் ,அப்போதுதான் மாற்றிய சாப்ட் டயரின் பலனால் பால்டி ரெஷ்டாவை எளிதாக முந்தி எட்டாம் இடம் பிடிக்க ,

இருபத்தி ஐந்தாவது சுற்று ...

பிலிப் மாசா - ஜென்சன் இடத்தை பிடிக்க முயன்று தாற்காலிக வெற்றி மட்டுமே பெற்றார் .ஆனால் மீண்டும் ஒரு வளைவில் ஜென்சனே ஆதிக்கம் செய்தார் .

முப்பதாவது சுற்று ...

வில்லியம்ஸ் அணி ஏற்கனவே கோஷ்வோர்த் எஞ்சின் பயன்பாட்டில் எட்டுக்கும் கூடுதலாக பயன்படுத்தும் அனுமதி கேட்டதனால் ரேஸின் ஆரம்ப நிலையில் பத்து இடம் தள்ளி ஆரம்பித்தது .இது பத்தாது என்பது போல அந்த அணியின் பாஷ்ட்டர் மால்டோனா ,நீலக்கொடியை மதிக்காமல்-பின்னால் வரும் முன்னணி கார்களுக்கு வழிகொடுக்கமால் வந்ததுக்காக அபராதிக்க பட்டார் .

முப்பத்தி ஏழாவது சுற்று ...

ரெனால்ட் அணியின் புருனே சென்னாவும் நீலக்கொடி அசைவுக்கு மதிப்பு அளிக்க தவறினார் 
.
நாற்பத்தி ஒன்றாவது சுற்று ...

வெப்பர் தன்னுடைய DRS தொழில் நுட்பத்தால் பட்டனை பின்னுக்கு தள்ள மிகவும் முயற்சித்து கொண்டு இருந்தார் .

நாற்பத்தி மூன்று ...

ஒரு வேடிக்கை நடந்தது .


ஹேமில்டன் மிக வேகமாக தன்னுடைய முதலிடத்து தொடரலை வில்லியம்சின் -ரூபன் பேரிகொலோவை முந்த முயற்சிக்க அவர் தாமதிக்க செய்ததை கண்டித்து ஹேமில்டன் கை அசைத்து வலிகொடுக்க வேண்டியதுதானே என்றார் .

பெர்ராரி அணியில் இருந்தபோது 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டில் (அதே அணியில் இருந்த ) ஷூமேக்கருக்கு இணையாக இரண்டாம் இடம் - இரண்டு முறையும் வந்தவர் இதே ரூபன் பேரிகொலோதான் .(யாரும் இருக்கும் இடத்தில் இல்லாததால் மதிப்பு குறையத்தான் செய்கிறது )


ஐம்பதாவது சுற்று ...

எட்டாமிடத்தையும் ,ஒன்பதாம் இடத்தையும் மிக பல சோதனைகளுக்கு பிறகு சஹாரா போர்ஸ் இந்திய அணி தக்க வைத்துகொண்டது .அருமையான அடித்தளம் 2012 போட்டிக்கு .

ஐம்பத்திரெண்டாவது சுற்று... 

ஹிஸ்பானிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் ,அந்த அணியின் செல்வத்தை ரெட்புல்லிடமிருந்து பெற்று தந்த டானியல் ரிகார்டியோ ஆல்ட்ரநேட்டர் பழுதினால் (அவரே நம் நாராயண் கார்த்திகேயனுக்கு ஆல்டர நேட்டராக வந்தவர்தானே ! ) ரேசை விட்டு விலகினார் .

ஐம்பத்தி ஐந்தாவது கடைசி சுற்று...

10.9 வினாடி இடைவெளியில் மூன்றாம் இடத்தில் தொடர்ந்து கொண்டு இருந்த மார்க் வெப்பர் தன்னுடைய கடைசி பிட் ஸ்டாப்பை நிறைவு செய்ய விரும்ப அங்கு ஒரு திருப்பம் ஏற்ப்பட்டது .அந்த நேரத்தை பயன்படுத்தி சிக்கலே இல்லாமல் மெர்ஷீடிசின் ஜென்சன் பட்டன் மூன்றாம் இடத்தை கைப்பற்றி கொண்டார் .


முதல் இடம் 

லீவிஸ் ஹெமில்டன்

லீவிஸ் ஹெமில்டனின் கார் MP4 - 26 ,1:37:11.886 மணி நேரத்தில் கடந்து வெற்றிகோட்டை முத்தமிட்டது .இந்த வெற்றியோடு- இந்த ஆண்டில் மூன்றாம் முறையாக முதலிடத்தில் வந்து

அசத்துகிறார்... அம்மாவின் பிறந்தநாள் 

இந்த வெற்றியில் மேலும் ஒரு சுவாரஷ்யம் இருக்கிறது.இன்று ஹெமில்டனின் அம்மாCarmen Brenda Larbalestier பிறந்தநாள் .இரண்டாம் இடம் 

பெர்னாண்டோ அலோன்சா 

மூன்றாம் இடம் 

ஜென்சன் பட்டன் .

 இரண்டாம் இடத்திற்கு இன்னும் பதில் கிடைக்க வில்லை .
ஜென்சன் பட்டன் .                    - 255
பெர்னாண்டோ அலோன்சா - 245 (வித்தியாசம் 10 புள்ளிகள் )
                           மார்க் வெப்பர் -  233 (வித்தியாசம் 22 புள்ளிகள் )

அடுத்த பிரேசில் போட்டியில் ஜென்சன் பட்டன் -இரண்டாம் இடத்தில் வந்தாலே போதும் ( 255 + 18 = 273 )

அலோன்சா முதலிடம் வந்தால்கூட,பட்டனுக்கு இரண்டாம் இடம் உறுதி. ஆனால் இதில் மார்க் வெப்பர் முதல் இடம் வந்தால் அவரே இரண்டாம் இடம் உறுதி (பட்டன் எந்த புள்ளியும் எடுக்காத பட்சத்தில்) .

வேறு விசயங்களும் நடக்கலாம் .பார்ப்போம்

மெக்லேறேன் மேர்சீடிஸ்அணி -482
                  பெர்ராரி அணி அடுத்த - 353

ரேசில் முதல் இரண்டு இடத்திலும் பெர்ராரி  அணியே வந்தால் ! (25 + 18)  -353 + 43 =396.


இந்த நாளின் பிறந்த தினம் .


இன்றுபார்முலா 1 ன் சவுத் ஆப்ரிக்காவின் ட்ரைவர் - Jackie Pretorius   
77 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூர்வோம் .

கடந்த 2009 மார்ச் மாதம் 30 ஆம் நாள் அவர் இறந்துவிட்டார் .
அடுத்த நம் சந்திப்பு .கால் பந்து விளையாட்டுக்கு பிரசித்தம் பெற்ற பிரேசில் நாட்டில் நம் பார்முலா 1 போட்டிAutódromo José Carlos Pace களத்தில்  நடைபெறுவதோடு மட்டுமல்ல இந்த ஆண்டில் இறுதி சுற்று போட்டி என்பதால் விடைபெறும் போட்டி .போட்டிகள் மட்டும்தான் அடுத்த ஆண்டு மார்ச் 18. ஆனால் நம் சந்திப்பு மேலே உள்ள பிரேசில் மக்களை போல எப்போதும் மலர்ந்த வண்ணமாகவே இருக்கும் !.
 (இதுபோல் தாமதமாக வந்தாலும்)  

2 comments:

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Sugumarje said...

போட்டியை நேரில் பார்ப்பது போன்ற வர்ணணை அருமை. நல்லவேளையாக எல்லா கார்களும் சதி செய்யாமல் சில போட்டியில் தொடர்ந்தது நல்லது :)

அபுதாபி களத்திற்கு வந்த சோதனையா? இல்லை போட்டியாளர்களுக்கு வந்த சோதனையா?

சில மாற்றங்கள் செய்தால், பதிவு இன்னமும் அருமையாக இருக்கும்.

நல்ல, தொடர்ந்த எழுத்தாக்கம் அருமை... தொடரட்டும் பணி