உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, February 18, 2012

இங்கிலாந்தின் இன்னொரு அவதாரம் - லோட்டஸ் அணி
இங்கிலாந்தின் மூன்று அணிகளில் இரண்டாம் அணியான லோட்டஸ் அணியை பற்றி நாம் பார்க்க போகிறோம் .இந்த அணியின் லோட்டஸ் E20 காரின் அறிமுகம் ,கடந்த 5 - 2 - 2012 அன்று ஆன்லைனில் நடந்தது .நாம் இதுவரை பார்த்த அணிகளில் இது ஒரு வித்தியாசமான அணி.

லோட்டஸ் அணியின் வரலாறு .


முதன் முதலில் பெனட்டேன்( Benetton ) என்ற பெயரில் 1981 - 1985 வரையிலும் அதற்கடுத்து 1986 - 2001 வரை டோல்மான் ( Toleman Motorsport )என்ற பெயரிலும் போட்டியிட்டு இருக்கிறது .ஆனால் ரெனால்ட் என்ற பெயரில் இந்த அணி 1977 - 1985 வரையிலும் அடுத்து 2002 - 2011 வரையிலும் செயல் பட்டது .இந்த ஆண்டு போன ஆண்டில் இருந்த சிறு குழப்பம் மறைகிறது .அது லோட்டஸ் -ரெனால்ட் என்ற பெயருக்கும் ரெனால்ட் என்ற பெயரிலும் இருந்தது .இன்று கேட்டர்ஹாம் என்றும் ரெனால்ட் அணி இன்று லோட்டஸ் என்றும் மாறிவிட்டது .ஆனால் லோட்டஸ் அணி 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டில் உருவாக்குனர் மற்றும் ஓட்டுனருக்கான சாம்பியன் பட்டதை வென்று இருப்பது குறிப்பிட வேண்டியது முக்கியம் .கடந்த ஆண்டு 73 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் பெற்றது .

காரின் மாற்றங்கள் 
காரின் முன்பகுதி சஷ்பென்சன் பகுதிகள் காற்றியக்கவியல் திறனை மேம்படுத்தும் பொருட்டு மிக கணிசமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது .அடுத்து முந்தய R31 காரின் முன்னோக்கிய அமைப்பில் இருந்த எக்ஸ்சாஸ்ட் அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .அடுத்து நோஸ் கோன் பகுதி மாற்றம் .

ஓட்டுனர்கள் .

பின்னிஷ் தேசத்தின் - கிமி ரைக்கொணன் 2001 ஆண்டில் சப்பர் ( Sauber ) அணியில் பார்முலா 1 களத்தில் அடியெடுத்து வைத்தவர் .அடுத்து வாய்பளித்தது மெக்லரண் மேர்சீடிஸ் அணி 2002 - 2006 வரை இருந்தார். பெராரி அணியில் 2007 - 2009 வரை இருந்தார் .அப்போது 2007 ல் ஓட்டுனருக்கான  சாம்பியன் பட்டதை வென்றார் . இதில் ஒரு விசேசம் என்ன வென்றால் 2010 - 2011 ஆம் ஆண்டில் எவரும் கண்டுகொள்ளவில்லை .இப்போது அவருக்கு மறுவாய்ப்பு லோட்டஸ் E20 மூலம் கிடைத்திருக்கிறது .

அடுத்தவர் ,பிரென்ச் டிரைவர் - ரொமைன் கோர்ச்ஜியன் ( Romain Grosjean ) 2009 ல் Renault F1 அணிக்காக நான்கு சுற்றுகளில் கலந்து கொண்டு 23 புள்ளிகளை பெற்றார் .மற்றபடி 2010: GT1 & Auto GP (Champion) 2011: GP2 Asia (Champion) & GP2 (Champion) இந்த ஆண்டில் 2010 - 2011 ல் இவரும் இங்கு ஒதுக்கப்பட்டவர் .அதர்க்கு அடுத்தவர் பெல்ஜிய நாட்டை சேர்ந்த ஜெரோமே அம்ப்ரோசியோ .இவர் கடந்த ஆண்டில் விர்ஜின் காஷ்வோர்த் அணிக்காக ஒரு புள்ளிகூட எடுக்காமல் ஆண்டை நிறைவு செய்தவர் .இங்கு ரிசர்வ்  டிரைவர் .


எதிர்பார்ப்போம் இதன் அணி தலைவர் Eric Boullier அதிக கடின உழைப்பை நாங்கள் முதலீடு செய்து இருப்பதாக தெரிவிக்கிறார் .மேலும் அதிக அனுபவ பதிவுகளை கொண்ட இந்த அணி மிக அமைதியாக இந்த ஆண்டும் சாதிக்கும் என எதிர்பார்ப்போம்


இந்த ஆண்டின் மிக சிறப்பான துவக்கம் ரெனால்ட் எஞ்சின் மூலம்தான் இருக்கும் என்பதர்க்கு மிக சிறந்த உதாரணம் இந்த ஆண்டில் இந்த என்ஜினை நான்கு அணிகள் பயன்படுத்துகின்றன என்பதுதான் .


ஆம். முதல் நிலையில் இருக்கும் ரெட்புல் முதல் ,லோட்டஸ் ,வில்லியம்ஸ் கேட்டர்ஹாம் போன்ற அணிகள் பயன்படுத்த போகிறது .இந்த ஆண்டில் அதிகம் பயன்படுத்தும் என்ஜினில் ரெனால்ட் முதலிடத்தில் இருப்பதால் எனவே நம் இதயத்தில் ரெனால்ட் எஞ்சின் இந்த பெண்மணியின் இதயத்தில் இருப்பது போல !,எல்லோரின் இதயத்தில் இடம் பிடிக்கும் என நம்பலாம் .

No comments: