உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Tuesday, January 22, 2013

மைக்கேல் ஷூமேக்கருக்கு ( இரண்டாவது முறையாக )வழியனுப்பும் போட்டி !.


கடந்த 25 டிசம்பரில் பிரேசிலிலுள்ள - Interlagos களத்தில் நடந்தது .ஃ பார்முலா 1 போட்டியின் சாம்பியனை முடிவு பண்ணவேண்டிய போட்டி என்பதால் மிக கடுமையான எதிர்பார்ப்பு களத்தில் மட்டுமல்ல உலக ஃ பார்முலா 1 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - இந்த ஆண்டின் கடைசி( 20 ஆவது )போட்டி ..


 இந்த விசயத்தை அவர்கள் பேசிகொண்ட மாதிரியே இருந்தது !

ஆரம்பம் முதலே மெக்லரண் மெர்சடீசின் கை ஓங்கியிருந்தது .காரணம் அணியின் சாம்பியன்ஷிப்புக்கான இரண்டாம் இடம்
முதல் இரண்டு பயற்சி போட்டியிலுமே லீவிஸ் ஹெமில்டனும் ,கடைசி ப.போ ஜென்சன் பட்டனும் பகிர்ந்து கொண்டார்கள் .தகுதி சுற்றில் மீண்டும் லீவிஸ் ஹெமில்டனே வந்தார் நேர நிர்ணயம் 107% அவரே செய்தார் (1:15.075 + 0:5.255 =1:20.330 ) மேலும் கடந்த பல போட்டிகளில் மெக்லரண் மெர்சடீசின் இரு வீரர்களும் ரெட்புல்லின் செபாஷ்டியனால் பலமுறை வார்த்தை பிரோயோகத்தால் காயப்பட்டு  இருப்பதுவும் சுலபமாக அவருக்கு தனி வீரருக்கான சாம்பியன்ஷிப் பட்டதை எளிதில் தட்டி செல்ல கூடாது எனும் பழிவாங்கலும் இருந்தது .
    
நான்காம் இடத்தில வெட்டல் போட்டியை துவங்குவது ஒருவிதத்தில் மெக்லரண் அணிக்கு சற்று அழுத்தம் தந்தாலும் எதிர்கொள்ள காத்து இருந்தார்கள் .


போட்டி துவங்கியது ..

வேகத்தின் மொத்த கோபத்தையும் முதல் துவக்கத்தில்   மெக்லரண் அணியிடம் இருந்தது .

யாரும் எதிர்பாராத விதமாக வெட்டலின் கார் மோதலில் சில பாகங்களை பறக்கவிட்டது .


வில்லியஸ் - ப்ருனே சென்னா ,சாபெர் அணியின் செர்ஜியோ பெரேஸ் மோதல் குழப்பத்தில் வெளியேறினார்கள் .நல்லவேளை வெட்டல் தனது சமயோகிதத்தால் தப்பித்தார் .

எட்டாவது இடத்தில ஆரமிபித்த ஃபெராரி - பெர்னாண்டோ அலோன்சா ...இப்போது இந்த குழப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மூன்றாவது இடத்தை மிக எளிதாக பிடித்தார் .

இரண்டாவது சுற்று ஆரம்பிக்கும்போது வில்லியசின் - அடுத்த காரும்  வெளியேறியது .

ஐந்தாவது சுற்று
லோட்டஸ் ரெனால்டின் - ரோமின் க்ரோஜியன் காரும் வெளியேறியது ஆக மொத்தம் 5 சுற்றுக்குள் 4 கார்கள் அவுட் !
இந்த சமயத்தில் ஆலோன்சாவின் கார் கட்டுபடுத்த முடியாத வேகத்தில் களத்தை விட்டு வெளியேறி போட்டியில் தனது காதலர் சாம்பியன்சிப் பெறுவார்  என காத்திருந்த ஆலோன்சாவின் காதலி - Dasha Kapustina, ஏறக்குறைய  கத்திவிட்டார் ( அம்மணி ,போட்டி அலோன்சா  போல மென்மையாக இருக்காது - பயப்படாதீர்கள் )

8 ஆவது சுற்றில்
வீரர்களின் நிலை ..
1.ஜென்சன் பட்டன் 2. ஹெமில்ட்டன் 3.ஹுல்கேன்பர்க் 4.அலோன்சா 5. மாசா 6.வெட்டல் 7.டி ரெஸ்டா 8.ரோஷ்பெர்க் 9.வெர்ஜின் 10.ரிகார்டியோ

மாசாவின் சேவை ஃ பெராரிக்கு தேவை என்பது போல அலோன்சாவை யாரும் கடந்து விடகூடாது என்பதில் கவனமாக கேட் கீப்பர் போல செயல்பட வெட்டல் பொறுக்கமுடியாமல் புகார் செய்ய ..
11 ஆவது சுற்று
அலோன்சா டயர் மாற்றம் வர பின்னாலேயே வெட்டலும் ..மீண்டும் அலோன்சா 9 ஆம் இடம் ,வெட்டல் 14.

16 ஆவது சுற்று
மாசா டயர் மாற்றம் வர தற்போது 6 ஆம் இடதிலிருந்த அலோன்சாவை ஐந்தாம் இடத்திற்கு வந்து துரத்த ..

18 ஆவது சுற்று
ஹுல்கேன் பெர்க் - ஜென்சனை பின்னுக்கு தள்ளி அசத்தினார் ..

24 ஆம் சுற்று
வெட்டல் கார் மீண்டும்

25 ஆம் சுற்று ..
மீண்டும் வீரர்களின் நிலை .
1.ஹுல்கேன்பர்க் 2.ஜேன்சன் 3.ஹேமில்டன் 4.அலோன்சா 5.வெட்டல் 6.கோபயாஷி 7.வெப்பர் 8.டி ரெஷ்டா 9.ரிக்கர்டியோ 10.ரைகொணன்

27 ஆவது சுற்று
மீண்டும் ஆலோன்சாவின் கார் மீண்டும் களத்தில் ஒரு சுற்று ஸ்பின் ஆனது .களத்தில் வழுக்கள் அதிகரித்தது .இதை பயன்படுத்திகொண்ட வெட்டல் நான்காம் இடம் .
34 ஆவது சுற்று
இப்போது அலோன்சா 3 ஆம் இடம் .வேட்டல் 6. ஒருவேளை அலோன்சா வெற்றி பெற வேண்டும் என்றால் ,இந்த போட்டியில் இந்த நிலைமைக்கு வெட்டல் ஒரு புள்ளி கூட பெறாமல் இருக்கவேண்டும் அத்தகு சாத்தியமில்லை .இந்து வேட்டலின் வேகத்தை பார்த்தால் காரே இல்லாவிட்டாலும்கூட வெறும் ஸ்டீயரிங் வீலோடு ஓடியே  கடந்து விடுவார் போல !
அவ்வளவு போராட்டம் தெரிகிறது வெட்டளிடத்தில் !
51 ஆவது சுற்று
வெட்டளின் காரின் ரேடியோ உரையாடல் தொடர்பில் கோளாறு .                    மிக ஆபத்தானது இது .களத்தில் இருக்கும் காருக்கு - அணியுடன் தொடர்பு தொப்புள் கொடி உறவு போல !
54 ஆவது சுற்று
சஹாரா போர்ஸ் இந்திய காரின் - நிக்கோ ஹுல்கேன்பர்க்கை காரை முந்தும்போது  ஹேமில்டன் கார் விபத்துக்குள்ளானது .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெக்லரண் அணியின் இரண்டாவது இடத்து கனவும் தகர்ந்தது ,

58 ஆவது சுற்று
இப்போது அலோன்சா இரண்டாவது இடத்தை பிடித்தார் .இப்போது வெட்டல்   8 ஆம் இடத்திற்கு கீழே போனால் அலோன்சா சாம்பியன் வாய்பை பெறலாம் .ஆனால் 7 ஆம் இடம் .
67 ஆவது சுற்று ..
  முதல் வளைவில் மீண்டும் ஒரு சின்ன ஸ்பின் வேட்டளின் காரில் நடந்தது .இந்த செய்தி ஆலோன்சாவின் பெராரி சந்தோசம் என்று அனுபவிக்கும் முன் மீண்டும் ஏழாம் இடம்.இப்போது ஒரே வழி ஆலோன்சாவிர்க்கு தனக்கு முன்னேறி கொண்டு இருக்கும் ஜென்சன் பட்டன் ஸ்பின் ஆகவேண்டும் அல்லது மீண்டும் வெட்டல் ...
முடியாது .வாய்ப்பில்லை .ஆலோன்சாவின் சாம்பியன் கனவு ....வெறும் கனவுதான் ! இப்போது 6 ஆம் இடத்தில் வெட்டல் இருவருக்கும் 3 புள்ளிகள் இடைவெளி .Bad luck to Alonsa !!!
70 ஆவது சுற்று .
ஆலோன்சாவின் நினைப்பில் பாதிக்கப்பட்டது கோபயாஷி .ஆம் அந்த கார் ஸ்பின் ஆனது .டி ரெஷ்டாவின்  காரில் உரசியது .

71 ஆவது சுற்று கடைசி சுற்று .


முதலிடம் ..
ஜென்சன் பட்டன் - மெக்லரண் மெர்சடிஸ் .

Bad luck to Alonsa !!!But Game is Game
இரண்டாம் இடம் ..
வெறும் 3 புள்ளிகளில் சாம்பியன்ஷிப்பை இழந்த ஃபெர்னாண்டோ அலோன்சா - ஃபெராரி .


மூன்றாவது இடம் ..
பிலிப் மாசா - ஃபெராரி .
ஹெமில்டனின் இழப்பால் (ஒருவேளை ஹேமில்டன் முதலிடம் வந்து இருந்தால் ) மெக்லரண் மெர்சடிஸ் தன்னுடைய இரண்டாவது இடத்தை ஃபெராரியிடம் பறிகொடுத்துவிட்டது .


 ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் கார் 6 ஆம் இடத்தில போட்டியில் வென்றது .வெட்டளின் சப்தம் எதுவும் இல்லை .காரணம் மீண்டும் ரேடியோ கோளாறு .பின்னால் வந்த செய்தியில் கடந்த 2010 ஆம் ஆண்டில் முதல்முறையாக உலக சாம்பியன் பெற்றபோது தனது  அழுகையோடு கூடிய சத்தத்தை  ஹெல்மெட்டுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுகூர்ந்தார் .

No comments: