உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, August 10, 2013

F 1 - Hungary High Speed Drama !

        
                           
Danube river
                    28 ஜூலை , ஹங்கேரியின்   தலைநகர் புடாபெஸ்ட்க்கு 18 கி.மீ அருகில் உள்ள Hungarian Grand Prix (Magyar Nagydíj)  களத்தில்   ஃபார்முலா 1 போட்டியின் 10 ஆவது சுற்று போட்டி  நடந்தது. ஹங்கேரியின் பாரம்பரியமிக்க புடாபெஸ்ட் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா குழுவை அவ்வளவு தூரம் யாரும் மறந்து இருக்க வாய்பில்லை .ஆமாம் இளையராஜாவின் திருவாசகம்  ஆரட்டோரியோ (Oratorio) எனும் தெய்வீக அருளிசை வடிவில் அரங்கேற்றிய ஊரல்லவா ?

சரி நாம் ரேசுக்குள் போவோம்.

பயிற்சி மற்றும் தகுதி போட்டி ...
                 கடந்த வெள்ளியன்று முதல் மற்றும் இரண்டாவது பயிற்சி போட்டியில் ,ரெட்புல் ரெனால்ட் - செபாஸ்டியன் வெட்டல் வந்து அசத்தினார்.
அடுத்த நாள் (சனியன்று )மூன்றாவது பயிற்சி போட்டியில் லோட்டஸ் ரெனால்ட்டின் ரொமைன் க்ரோஜியன் முதல் இடம் பிடிக்க ,                     தகுதி சுற்றின் முதல் இடம் யாரும் எதிர்பாராத ஆனால் சமீபத்தில் தகுதி சுற்றில் முன்னனி வகிக்கும் மெர்சடிசின் அணியின் லீவிஸ் ஹேமில்ட்டன் முதலிடம் வந்தார். அவரை தொடர்ந்து இரண்டாவது செபாஸ்டியன் வெட்டல்,மூன்றாவது இடம் ரொமைன் க்ரோஜியன்.


 முதல் சுற்றில் ..
                 லீவிஸ் ஹேமில்ட்டன் மிக சிறந்த துவக்கத்தை ஏற்படுத்த அவரை தொடரும் செபாஸ்டியன் வெட்டல் தகுதி சுற்றில் முதலிடம் வந்ததர்க்கு ஹேமில்ட்டனுடன் கை குலுக்கினாலும் போட்டியில் அவரை தாண்டி செல்லவே பாய்ந்து வர , 

மூன்றாவது சுற்றில்..


               அதர்க்குள் பின் வரிசையில் ஃபெராரியின் ஃபிலிப் மாசா - மெர்சடிசின் நிக்கோ   ரோஸ்பெர்க்கை பின் இருந்து தாக்க அவர் இரண்டு சுற்று சுற்றி 5 ஆம் இடத்திலிருந்து 12 ஆம் இடம் போனார் 
எழாம் சுற்றில் ..
                  தொடரும் குழப்பம் மாறி இப்போது ஹேமில்ட்டன் ,வெட்டல் ,க்ரோஜியன் ,அலோன்சா ,மாசா என முதல் 5 கார்கள் பறந்து கொண்டு இருந்தன.

ஒன்பதாவது சுற்றில் ...
லீவிஸ் ஹேமில்டன் காரில் Soft Compound டயரை 3 வினாடிகளில் உதறி விட்டு Medium டயருக்கு மாறினார் .அதிகமான ட்ராக்கின்  வெப்ப அதிகரிப்பும் , தன்னை தொடரும் வெட்டலின் வேகத்திர்க்கு ஈடு கொடுக்கவும் தயாராவது முக்கியம் என்பதை புரியவைத்தார் .எட்டாவது இடத்தில் மீண்டும் தொடர்ந்தார் .

15 ஆவது சுற்றில் ...
இப்போது முன்னனி வீரர்கள் டயர் மாற்றம் காரணமாக ,பின்னுக்கு வர மார்க் வெப்பர் , ஹேமில்டன் ,ஜென்சன் பட்டன் ,வெட்டல் ,க்ரோஜியன் என வரிசை போட்டி துரிதமாக செயல் பட்டு கொண்டு இருந்தது .

17 ஆவது சுற்றில் 
வெட்டல் மன வேகத்திர்க்கு அவர் மாற்றிய டயர் ஒத்துழைக்காததால் ,இன்னும் இன்னும் என முடுக்கி பாய ,முன்னால் போன ஜென்சன் பட்டனை முந்த,வளைவில் அவர் பிந்த ,ஒரத்தில் வந்த க்ரோஜியனை தவிர்க்க தந்து முன் பக்க விங் சேதமாக்கினார் வெட்டல்..

20 ஆவது சுற்றில் ...
100 ஆவது போட்டி கரேஜுக்குள்..


                          ஃபோர்ஸ் இந்திய அணியின் ஆண்ட்ரியன் சட்டில் தனது 100 ஆவது போட்டியில் டயர் மாற்றம் செய்ய பிட் லேன் போகிறார் என்று நினைத்தால் ,இல்லைஅப்படியே பின்னுக்கு தள்ளி கரேஜுக்குள் தஞ்சம் அடைந்தது - காரணம் பிரேக் செயல்பாட்டுக்கு முக்கியமான 'ஹைட்ராலிக் லீக்' என சொல்லபட்டது .

24 ஆவது சுற்றில் ..
                          ஹேமில்டன் மெகல்ரண் மெர்சடிசை விட்டு வெளியேறிய பிறகு அந்த அணி ஏன் சோர்ந்து போனது என்பது ஆய்வுக்குரிய விசயம் .இன்று போட்டியை 13 ஆவது இடத்தில்த்வங்கிய ஜென்சன் பட்டன்  முதலிலேயே Medium டயரில் துவங்கி இப்போதுதான் எல்லோரையும் வழியனுப்பி விட்டு டயர் மாற்றம் வந்தார் .அவர் 33 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் இருப்பது அந்த அணியின் பலவீனத்தை சொல்கிறது .போன ஆண்டு 10 ஆவது போட்டியில் 68 புள்ளிகளுடன் இருந்தவர் இவர் கடந்த ஆண்டு மொத்த போட்டியில் 5 ஆவது இடம் என்பதுவும் குறிப்பிடவேண்டிய விசயம் .

 காதல் ஜெசிகா ..


ஜென்சன்  தனது காதலி ஜெசிகா மேல் வைத்து  இருக்கும் காதலை தனது மெகல்ரண் மெர்சடிசை MP4-28 மேல் வைக்கவில்லையோ ? 

29 ஆவது சுற்றில் 


சாபர் ஃபெராரியின்   Esteban Gutierrez கார் போட்டியை விட்டு கியர் பாக்ஸ் பிரச்சனையால்  வெளியேறியது ..

32 ஆவது சுற்றில் ..
முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும்  ஹேமில்டன் பிடி தளர தொடங்கியது ..வெட்டலுக்கும் அவருக்கும் இடைவெளி குறைய தொடங்கியது .சுதாரித்து கொண்ட அணி மேலிடம் டயர் மாற்ற யுக்தியை கையாள அழைத்தது .0.3 வினாடிகளில் Medium Compound டயரை பொருத்திகொண்டு 4 ஆம் இடத்தை ஹேமில்டன் தொடர ..

35 ஆவது சுற்றில் ..
இப்போது ,ஹேமில்டன் பிடி வலுவாக இருப்பதை உணர்ந்த வெட்டல் டயர் மாற்றம் போக அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்து அலோன்சாவும் போனார்.


42ஆவது சுற்றில் 
வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - Valtteri Bottas ஹைட்ராலிக் பிரச்சனையால் புகையை வெளியேற்றி கொண்டு போட்டியை விட்டு வெளியேறியது .

வேகத்தை தக்கவைத்து கொள்ள


50 ஆவது சுற்றில் ..
இன்னும் இருபது சுற்றுக்கள் மீதம் இருந்த நிலையில் ,ஹெமில்ட்டன் அற்புதமான தனது முதலிடத்து வேகத்தை தக்கவைத்து கொள்ள மீண்டும் ,டயர் மாற்றதிர்க்கு வந்தார்  .இதுவே கடைசி மாற்றம் .

High Speed Drama..


62 ஆவது சுற்றில் ...
                    மிக ருசிகரமான கட்டத்தை எட்டிவிட்டது ரேஸ் . High Speed Drama என்ற அடைமொழி ஃபார்முலா 1 போட்டிக்கு எப்படி வந்தது என்பதை இப்போது ரேஸ் பார்ரக்கும் கண்களுக்கு புரியும் .முதலிடத்தை கடைசிவரை முடிவு செய்ய முடியாது என்பதே அதன் உள்ளர்த்தம் முதலிடத்து ஹேமில்ட்டனுக்கும் - கிமி ரெய்கொணனுக்கும் இடைவெளி வெறும் 1.418 வினாடிகள் அடுத்த 3 ஆம் இடத்தில் இருக்கும் வெட்டலுக்கும் -ரெய்கொணனுக்கும் உள்ள இடைவெளி அதை விட குறைவு ஆனாலும் ஒரே ஆறுதல் ரெய்கொணன் டயர் இரண்டு முறை மட்டுமே ( கடைசியாக 42 ஆவது சுற்றில் ) இதுவரை மாற்ற பட்டுள்ளதால் இப்போது அவர் முதல் இடத்து போட்டியில். இல்லை ஆனால் 55 ஆவது சுற்றில் டயர் மாற்றம் செய்து துரத்தி கொண்டு இருக்கும் வெட்டல் மிக ஆபத்தானவர் .


64  ஆவது சுற்றில் ...
ஃபெராரியின் மாசாவை குறிவைத்து 9 ஆம் இடத்திலிருந்து துரத்திகொண்டு இருந்த மெர்சடிசின் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் காரில் எஞ்சின் பிரச்சனையால் புகை வர ,போட்டியை முழுமை செய்யாமல்  வெளியேறியது  சோகம் !66 ஆவது சுற்றில் ..
ஃபோர்ஸ் இந்திய அணியின் இன்னொரு காருக்கும் இப்போது பிரச்சனை.ஆமாம் ஹங்கேரியின் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாத 3 ஆவது காராக பால்டி ரெஸ்டாவின் காரிலும் ஹைட்ராலிக் பிரச்சனையால் வெளியேறியது .( 19 ஆவது சுற்றில் ஆண்ட்ரியன் சட்டில் வெளியேறியது ஞாபகம் இருக்கும் )67 ஆவது சுற்றில் ..
ஹேமில்ட்டன் இந்த ஆண்டில் தனது முதல் முதலிடத்ஹ்டு வெற்றியை உறுதி செய்யும்விதமாக தொடர்ந்து வரும் ரைகொணானை விட 12 வினாடிகள் முன்னிலையில் இருந்தார் .ஆனால் ரைகொணன் 2 ஆம் இடத்தை போராடி தக்கவைத்து  கொள்ள ட்ராக்கின் மத்திய பகுதியில் போவதன் மூலம் வெட்டலின் முன்னேற்ற வழியை அடைக்க முயற்சித்து கொண்டு இருக்க வெட்டல் வேகத்தின் உச்சத்தை தொட அது மிக தொந்தரவாக இருந்தது ! 

70 ஆவது கடைசி சுற்று ..எவ்வித மாற்றமும் இல்லை .
முதல் இடம் - இந்த ஆண்டில் இதுவரை நடந்த பத்து போட்டிகளில் மெர்சடிசின் - லீவிஸ் ஹேமில்ட்டன் 4 முறை முதலிடத்திலும் 3 முறை இரண்டாம் இடத்திலும் ,1 முறை 3 ஆம் இடத்திலும் ஆக மொத்தம் 10 ல் 8 போட்டியை முதல் 3 இடங்களில் தொடங்கினாலும் , இந்த போட்டியில் மட்டுமே முதலித்தை தக்கவைத்து கொண்டுள்ளார். இது இந்த ஆண்டில் நல்ல துவக்கம் ..  Mercedes W04 கார் ஆனால் முடிவில் ... வெற்றியை நழுவ விட்டு விடுகிறது அந்த அணியின் தொழில் நுட்பம் .இரண்டாம் இடம் - லோட்டஸ் ரெனால்ட்டின் - கிமி ரைகொணன் .கடந்த ஆண்டை விட கிமி நல்ல முன்னேற்றம் .கடந்த 10 போட்டிகளில் கிமி ஒருமுறை 2 ஆம் இடத்திலும் போட்டியையும் மற்ற 9 போட்டிகளில் 4 ஆம்  இடத்திலும் அதர்க்கு அடுத்துமே தொடங்கினாலும் 10 ல் 5 ல் இரண்டாம் இடம் வந்து அசத்தி வருகிறது லோட்டஸ் ரெனால்ட் இது வளரும் தொழில் நுட்ப வெற்றி .மூன்றாம் இடம் - ரெட்புல் ரெனால்ட் -செபாஸ்டியன் வெட்டல் .முதல் இடத்தில் 3 முறை இரண்டாம் இடத்தில் 3 முறை 3 முறை 9 ஆம் இடத்தில் ஒருமுறை என தொடங்கினாலும் ,4 முதலிடமும் ,ஒரு 2 ஆம் இடமும் 2 முறை 3 ஆம் இடமும் வந்து அசத்தி கொண்டு இருக்கிறது .ஆனாலும் ஒட்டுமொத்த அளவில் முதலிட குறிக்கோள் மட்டுமே அவர்கள் தவறான இலக்கு.மற்றபடி வரும் போட்டிகளில் இதை உணர்ந்து செயல்பட வெட்டல் முயற்சிக்கலாம்.காத்து இருப்போம்.


                          ஃபார்முலா 1ன் அடுத்த வேக யுத்தம் பெல்ஜியத்தில் உள்ள  SHELL BELGIAN GRAND PRIX போட்டி வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடக்க இருக்கிறது .அங்கு நாம் சந்திக்கலாம் ..

No comments: