உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Monday, August 1, 2011

ஐந்து ஜெர்மானிய வீரர்கள்

மிகவும் மகிழ்ச்சி தரும் இரண்டு செய்தியுடன் இந்த பதிவு தொடங்குகிறது .ஆம், நமது இந்தியாவின் மற்றும் ஒரு வேக மனிதன் சென்னை சேர்ந்த கருண் சந்தோக் லோட்டஸ் அணிக்காக களத்தில் இறங்கினார் .




மற்றுமொரு செய்தி போர்ஸ் இந்தியாவின் அட்ரியன் சட்டில் மொனோக்கோ ரேசில் ஏழாம் வந்ததை விட ஒரு இடம் முன்னேறி இந்த போட்டியில் ஆறாம் இடம் வந்து தனது அணி புள்ளி பட்டியலில் முன்னேறிவர காரணமாகி வருகிறார் 



பார்முலா 1 ன் 10 ஆவது சுற்று ஜெர்மனியின் நுர்புர்க்ரிங்  (Nurburgring) களத்தில் நடந்தது .மிக அழகான உலகத்தின் பார்முலா பந்தயங்களின் பழமையை சுமந்து கொண்டு இருக்கும் டிரைவர்களுக்கு சவால் தரும் களம் .


1951 ஆம் ஆண்டிலுருந்து இந்த களம் பயன்படுத்தபட்டாலும் பல மறுசீரமைப்புக்கு உட்பட்டதால் 40 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளது 




.60 சுற்றுக்களை கொண்ட 308.623 கி.மீ நீளமுள்ள இந்த களத்தின் அதிவேக நாயகன்


 மைக்கேல் ஷுமேக்கர் .கடந்த 2004 ஆம் ஆண்டு தன்னுடைய பெர்ராரி F2004 கார் மூலம் -1:26.468 நிமிட நேரத்தில் கடந்ததே சாதனையாக தொடர்கிறது ...

 
மிகவும் எதிபார்ப்புடன் ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி தொடங்கியதற்க்கு காரணம் இந்த களத்தில் நான்கு அணியில் உள்ள ஐந்து ஜெர்மானிய வீரர்கள்.
 யார் வெற்றியை பதிவு செய்வார்கள் என்பதுதான் .

முதல் வீரர்  

:ரெட்புல் ரெனால்ட் .அதில் உள்ள நட்சத்திர வீரர் செபாஸ்டியன் வெட்டல் .கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் இடமும் 2010 ல் மூன்றாம் இடமும் வந்தார் .இந்த வருடம் ஆறு போட்டிகளில் முதல் இடம் வந்து தூள் பரப்பி இருக்கிறார் .இவரை எதிர்பார்ப்பதில் தவறே இல்லையே .

இரண்டாவது வீரர்  :



மேர்சீடிஸ் .மைகேல் ஷூமேக்கர் .இந்த களத்தின் வேகமனிதன் .கடந்த 2006 ல் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் .போர் குணமுள்ள இவரை இவர் மண்ணில் எதிபார்ப்பது இயல்பான விஷயம்தான்.கடந்த 1995,2002,2004,2006 நான்கு ஆண்டுகளும் இந்த களத்தின் முதல் இடத்தை பெற்றவர் என்பதும் மிக முக்கியமான விஷயம் .

மூன்றாவது  வீரர் 


  அதே அணியின் நிகோ ரோஷ்பெர்க் கடந்த 2009 ல் நான்காம் இடம் வந்தார் .அது மட்டுமே அதிகபட்சம் .ஆனால் அணியின் மொத்த புள்ளி உயர, மிக காரணமாக இருக்கிறார் .

நான்காவது வீரர்  



  :விர்ஜின் கோஷ்வொர்த் .திமோ கிலோக் .அதிக பட்சமாக 2009 ல் ஒன்பதாம் இடம் வந்து இருக்கிறார் .

ஐந்தாவது வீரர் 



:போர்ஸ் இந்தியா.அட்ரியன் சட்டில் .அவருடைய சர்வீசில் பத்து இடத்திற்கு மேல்தான் வந்து இருக்கிறார் .இருந்தாலும்  எதிர்பார்ப்பு வட்டத்தில் இவரும் உண்டு .

எதிர்பார்ப்புக்கள் இப்படி இருந்தாலும் கடந்த காலசுமார் பத்து ஆண்டு  வரலாறு என்ன சொல்கிறது ?


அணிகளை பொருத்தமட்டில் பதினைந்து முறை construction championship வாங்கிய இத்தாலியின் பெர்ராரி அணி முன்னிலை வகிக்கிறது .கடந்த 2000 ஆண்டிலிருந்து 2010 ஆண்டுவரை நடந்த 10 போட்டிகளில் இந்த அணி இரண்டு முறை முதல் மற்றும் இரண்டாம் இடமும் ,மூன்று முறை முதல் இடமும் இரண்டு முறை மூன்றாம் இடமும் வந்ததே அந்த அணியின் கூடுதல் பலம் .


மெக்லேரன்  மேர்சீடிஸ் அணி மட்டுமே இரண்டாவதாக அதுவும் ஒருமுறை முதல் இடம் மற்றும் நான்கு முறை இரண்டு அல்லது மூன்றாம் இடம் பெற்று எதிர்பார்ப்பின் அருகில் நிற்கிறது 



ரெட்புல் ரெனால்ட் 2007 ல் தொடங்கினாலும் 2010 ல் மூன்றாம் இடமும் 2009 ல் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றதே அதிக பட்சம் .

சரி இது போல வீரர்களின் சரித்திர பட்டியல் என்ன சொல்கிறது ?


வீரர்களின் வரலாற்றில் கடந்த 2006 லிருந்து ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ அலோன்சா 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் முதல் இடம் வந்துள்ளார் .


ஆனால் பிரேசிலின் பிலிப் மாசா 2006 -2,2008 -3,2009 -3,2010 -2 என தொடர் வெற்றிகளை
சுமந்து நிற்கிறார் .

அடுத்து இங்கிலாந்தின் லெவிஸ் ஹேமில்டன் 2008 ல் முதலாவதாக வந்து இருக்கிறார் .


வரலாறு நின்று விட்டது .

போட்டியில் நிறைய புது விசயங்களை நாம் பார்க்கிறோம் 

 ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் நிறைய வித்தியாசங்களை ஏற்படுத்தி இருக்கிறது .அதில் முதலாவது ரெட் புல் அணியின் மார்க் வெப்பர் போட்டியை கடந்த சில்வர் ஸ்டோன் களத்தை போல முதலில் நிலையில் (Grid position) துவங்கினார் .செபாஸ்டியன் வெட்டல் முதன் முறையாக மூன்றாம் இடத்தில் துவங்கினார் .


முதல் சுற்றின் துவக்கத்தில் வழக்கம் போல முதல் இடத்தில் துவங்கிய வெப்பர் பின்னுக்கு தள்ளி லெவிஸ் ஹேமில்டன் பாய்ந்தார் .
அவரை தொடர்ந்து மார்க் வெப்பரும் ஆலோன்சாவும் போட்டி போட்டு துரத்திகொண்டார்கள் 
இரணடாவது சுற்றில் அலோன்சாவை வெட்டல் பின்னுக்கு தள்ளினார் 
ஒன்பதாவது சுற்றில் அலோன்சா வெட்டலை பின்னுக்கு தள்ளி தன்னுடைய இடத்தை பிடித்தார் .
பதிமூனாவது சுற்றில் மாசா ரோஷ்பெர்க்கை முந்தினார் .
22 ஆவது சுற்றில் ஒரே அணியின்  ரோஷ்பெர்க்கை-மைகேல் சூமேக்கர் போட்டி போட்டுகொண்டனர் 
இருபத்தி நான்காவது சுற்றில் திடீரென மைகேல் சூமேக்கேரின் கார் ஒரு சுற்று (Spin) ஆகி பயமுறுத்தியது .
33 ஆவது சுற்றில் அதுவரை முதல்  இடத்தில் இருந்த அலோன்சா பிட் ஸ்டாப் வர மீண்டும் தன்னுடைய முதல் இடத்தை ஹேமில்டன் பிடித்தார் .
43 ஆவது சுற்றில் வெட்டல் மாசாவை  முந்தும் வாய்ப்பை தவறவிட்டார் 
52 ஆவது சுற்றில் ஹேமில்டன் தனக்கு வழங்கப்படும் டயரை மாற்றி மீண்டும் மூன்றாம் இடத்தில் இணைத்துகொண்டார் .
53 ஆவது சுற்றில் அலோன்சா டயர் மாற்ற வந்து ஹேமில்டன் முன்னேற காரணமானார் .
59 ஆவது சுற்றை ஹேமில்டன் -தன்னுடைய முழு வேக திறனால் 1:34.302 வினாடியில் களத்தை கடந்து வெற்றி என் பக்கம் என மாற்றி விட்டார் .
60 ஆவது சுற்றின் முடிவில் லெவிஸ் ஹேமில்டன் அலோன்சாவை 3.9 வினாடி பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார் .2008 ஆம் ஆண்டின் சாம்பியன் .
ஏற்கனவே இவர் சீனாவின்- ஷாங்காய் நகரின் களத்தில் முதல் இடமும் ஸ்பெயின் -பார்சிலோன களத்தில் இரண்டாம் இடம் பெற்றதை விட இது சிறப்பான வெற்றி.
இந்த களத்தில் கலந்து கொண்ட 24 கார்களில் முடிவில் இருந்தது 20 மட்டுமே நிறைவு செய்தது 

நமது கருண் சந்தோக் 20 ஆவது இடத்தில் நிறைவு செய்தார் 


இந்த களத்தில் கலந்து கொண்ட 24 கார்களில் முடிவில் இருந்தது 20 மட்டுமே நிறைவு செய்தது. 


9 ஆவது  சுற்றின் இறுதியில் ரெனால்ட் அணியின்நிக் ஹெயத் பெல்ட்  (Nick Heidfeld) டோரோ ரோசோ அணியின் செபாச்டிஎன் புமி (Sébastien Buemi) இடித்து தள்ளப்பட்டு வெளியேறினார் .அதற்காக அடுத்த போட்டியில் செபாச்டிஎன் புமி ஐந்து இடம் பின் தள்ளி போட்டியை துவங்குவார் 
.

16 ஆவது சுற்றில் வில்லியம் காச்வோர்த்தின் -ரூபென்ஸ் பெர்ரிகொலோ ஆயில் கசிவு காரணமாக வெளியேறினார் .

35 ஆவது சுற்றில் மேக்ளரேன் மேசீடிசின் ஜென்சென் பட்டன் ஹைட்ராலிக்ஸ் (Hydraulics) பிரச்சனையால் வெளிய்றினார் .போன முறை 39 ஆவது சுற்றில் வீல் நட்பொறுத்த தவறியதால் வெளியேறினார் என்பது இன்னொரு ஏமாற்றம்

37 ஆவது சுற்றில் ஹிஸ்பானியா அணியின்.விடன்ட்டனியோ  லூசி   (LiuzziVitantonio Liuzzi) FIA விதிமுறைகளை மீறி கியர் பாக்ஸ் ஐந்து போட்டி வரை பயன்படுத்தாமல் போட்டிக்கு முதல் நாள் கடைசி தகுதி சுற்றில் மாற்றியதற்காக ஐந்து இடம் பின்னாலிருந்து பெனால்டி முறைப்படி துவங்கினாலும் எலெக்ட்ரிக்கல் பிரச்சனையால் வெளியேறும்படி ஆனது .அந்த அணியின்  போதாத காலம் தொடர்கிறது .

போட்டியின் முடிவு .....

 முதல் இடம் மெக்லரண் மெர்சீடிசின் -லெவிஸ் ஹேமில்டன் 


இரண்டாம் இடம் பெர்ரரியின் -பெர்னாண்டோ அலோன்சா .

மூன்றாம் இடம் ரெட்புல் ரெனால்டின் -மார்க் வெப்பர் 



  • 1. Lewis Hamilton - Mclaren Mercedes
  • 2. Fernando Alonso - Ferrari
  • 3. Mark Webber - Red Bull Racing
  • 4. Sebastian Vettel - Red Bull Racing
  • 5. Felipe Massa - Ferrari
  • 6. Adrian Sutil - Force India
  • 7. Nico Rosberg - Mercedes
  • 8. Michael Schumacher - Mercedes
  • 9. Kamui Kobayashi - Sauber
  • 10. Vitaly Petrov - Lotus Renault
  • 11. Sergio Perez - Sauber
  • 12. Jaime Alguersuari - Toro Rosso
  • 13. Paul di Resta - Force India
  • 14. Pastor Maldonado - WilliamsF1
  • 15. Sebastian Buemi - Toro Rosso
  • 16. Heikki Kovalainen - Team Lotus
  • 17. Timo Glock - Virgin Racing
  • 18. Jerome D'Ambrosio - Virgin Racing
  • 19. Daniel Ricciardo - Hispania Racing
  • 20. Karun Chandhok - Team Lotus

நமது கடைசி பக்கத்தை நிறைவு செய்யும் அழகு இரண்டாம் இடம் வந்த பெர்னாண்டோ அலோன்சா 29.07.2011 அன்று .தன்னுடைய 29 ஆவதுக்கு வயதுக்கு விடை கொடுத்தார் .அவரின மனம் நிறைந்த காதலியுடன் 

Raquel del Rosario  Fernando Alonso

இந்த பதிவை முடிக்கும் முன்னே ஹங்கேரியன் கரண்ட் பிரிக்ஸ் போட்டி 


நேற்று ஜூலை 31 ல் முடிந்தே விட்டது .எனவே மீண்டும் வ்ர்ரர்ர்ரும் சந்திப்பு விரைவில் ....
 

2 comments:

Sugumarje said...

அருமை... போட்டியின் வர்ணணை அழகு... ஆனால் படிக்க இயலாதபடி சிதைந்து இருக்கிறது... எழுத்து அலைண்மெண்ட் அவசியம்... கவனிக்கவும்...

மற்றபடி ஏராளமான தகவல்களுடன் நல்ல பயணம் :)

Sugumarje said...

இல்லைப்பா... ஓவ்வொரு வரியும், தனியே தெரிந்தால் கூட நலமாக இருக்கும்... ஒரே பாராவை பிச்சு போட்டது போல இருக்கு.... அதான் :)