உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, December 10, 2011

இந்தியாவில் பார்முலா 1 போட்டி பரிசு வழங்கும் விழா .

இந்த ஆண்டின் பார்முலா 1 பரிசு வழங்கும் கலை விழா இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்காவுன் மாவட்டத்தில் நேற்று 
09 - 12 -2011 வெள்ளி கிழமையில் வெகு விமர்சையாக நடந்தது.
போட்டிக்கு முதல் நாள் உற்சாக வரவேற்ப்பு பாரம்பரியமாக இருக்கத்தானே செய்யும் ..வெள்ளிகிழமை பரிசு வழங்கும் விழாவில் நடன மங்கையர்களின் உற்சாக வரவேற்பு கலை கட்டியது .இங்கு நடந்த விழாவில் பரிசு வாங்குவது World Touring Car, World Rally Championship, World Karting, Asia Pacific Rally, Formula Two  போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் .விழாவில் பரிசு வாங்குபவர் யார் என்பது முன்கூட்டியே தெரிந்தாலும் அதை ஜொலி ஜொலிப்பான விழா மேடையில் ரசிப்பது ஒரு உற்சாகமான விசயமல்லவா ?


பார்முலா 1 போட்டிக்கான பரிசு பெரும் நம் முதல் இடத்தின் நாயகன் செபாஸ்டியன் வெட்டல் ரேஸ் உடையில் பார்த்து ,பார்த்து இங்கு பார்டி ட்ரஸில் வித்தியாசமாக இருந்தார் .வயதில் சின்னவர் என்பதால் அந்த கூச்சமும் தொற்றிக்கொண்டே இருந்தது .


FIA -தலைவர் Jean Todt அவர்களால் செபாஸ்டியன் வெட்டளுக்கு முதல் பரிசு வழங்க பட்டது .

வழக்கமாக போடியத்தில் ஒரு ஜம்ப் செய்வது வெற்றியாளர்களின் வழக்கம் .இது விழா மேடை என்பதாலும் இடம் மற்றும் அணிந்து இருக்கும் உடை நாகரிகத்தாலும் பரிசு பெற்ற பின் மிக அடக்கமாக நின்றுகொண்டு இருந்தார்கள் நம் வ்வ்வர்ரூம் வெற்றியாளர்கள் .


இந்த விழாவின் அருமையான பல வியங்கள் இன்னும் சில நாளில் உங்கள் முன் மலர இருக்கிறது .

உங்களுடன் நானும் காத்து இருக்கிறேன் ...