உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, December 17, 2011

மோட்டார் உலகத்தின் ஆஸ்கர்

மோட்டார் உலகத்தின் ஆஸ்கர் நாயகன் .



மோட்டார் உலகத்தின் ஆஸ்கர் எனப்படும் ஆட்டோ ஸ்போர்ட்ஸ்
 ( AUTOSPORT )  International Racing Driver of the Year விருதினை ஜெர்மனின் இளம் புயல் செபாஸ்டியன் வெட்டல் இந்த ஆண்டில் பெற்றார் .



உலகம் முழுவதும் உள்ள மோட்டார் ரசிகர்களால் அதிகம் படிக்கப்படும்  ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இதழின் மூலம் ரசிகர்கள் தேர்ந்து எடுத்து இந்த விருது வழங்க படுகிறது .



கடந்த டிசம்பர் 4 ஆம் நாள் லண்டன் நகரின் Grosvenor House ஹோட்டலில் காஸ்ட்ரால் எட்ஜ் நிறுவனத்தின் பங்களிப்புடன் நடந்த வண்ணமிகு கலைவிழாவில் இந்த விருதினை பெற்றார் .



இந்த விருது கடந்த 1982 ஆம் முதல் வழங்ப்பட்டு வருகிறது .இதன் மிக பெரிய சிறப்பு இது பார்முலா 1 போட்டிக்காக மட்டும் வழங்க படவில்லை .



பன்னிரண்டு பிரிவில் விருதுகள் வழங்க படுகிறது .இதில் எட்டு விருதுகள் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இதழின் ரசிகர்கள் மற்றும் போதுவானவர்களாலும் மற்ற நான்கு விருதுகள் இந்த துறை சார்ந்த மற்றும் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் இதழ் குழுவில் தேர்ந்தெடுக்க படுகிறது .


நமது உலக வேக நாயகன் பல அற்புத வரலாறுகளை படைத்திருந்தாலும் இது மட்டும் என் இலக்கு அல்ல என்பதை தன் வார்த்தைகளில் இங்கு சொல்கிறார் .கவனியுங்கள் ...


வெட்டளுக்கு வெற்றிமாலைகள் தொடரட்டும் ...
வாழ்த்துவோம்


No comments: