உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Monday, January 30, 2012

பார்முலா 1ன் புதிய பறவைகள்


பார்முலா 1 அணிகளின் கார்கள் அறிமுகம் 


ஒவ்வொரு ஆண்டிலும் பார்முலா 1 அணிகளின் போட்டிக்கான கார்கள் அறிமுகம் நடத்தப்படும் .2012 க்கான பனிரெண்டு அணிகளில் முதன் முதலாக கேட்டர்ஹாம் (Caterham-Renault ) அணி தன்னுடைய CTO1 போட்டிக் காரை ஆன்லைனில் சென்ற 26.01.2012 அறிமுகப்படுத்தியது .சில அணிகளை தவிர இந்த அறிமுகம் பலவிதமான உள்ளடக்கிய எதிர்பார்ப்புகள் ஏற்படுத்த காரணம் இருக்கிறது .


எதிர்பார்ப்புகள் 

நம் இந்தியாவை பொறுத்த வரை அம்பாசிடர் கார் மிக பிரபலம் இந்தியாவில் அதன் செல்ல பெயர் The king of Indian roads.அந்த காரின் பின்புறம் பார்த்தோமானால் இரண்டு விஷயம் பார்க்கலாம்.
வலதுபுறம் Ambassador Mark I - Iv Or Nova Or 1800 ISZ Or Classic . இடதுபுறம் 2000DZX இந்த மாதிரி பார்க்கலாம் .ஆனால் இன்று வரும் ஹிந்திரா பின்புறம் Logan by mahindra மற்றும் Mahindra Renault என மாடல் ,தயாரிப்பு கம்பனி மற்றும் அதில் பயன்படுத்தும் எஞ்சின் தயாரிப்பாளார் வரை நிறைய பெயர்கள் தெரிவதை போல பார்முலா 1 கார்களின் மற்றைய கம்பனி தயாரிப்புகளுடனான ஒருகிணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது

வெளியே தெரியும் விவரங்கள் 


ஆனால் வெளியே தெரியும் பெயர் Constructor வைக்கும் பெயர் மட்டுமே தெரியும் ஆனால் உள்ளே ஒவ்வொரு பாகங்களும் மிக முக்கியத்துவம் பெறுகிறது .எஞ்சின் ,கியர் பாக்ஸ் ,காரின் வடிவமைப்பு ,ஸ்டீரிங் வீல்,ஏன்?- டிரைவர் சீட் கூட புதிதாய் வரும் கம்பனிகள் ஏற்கனவே சிறந்த கம்பனி தயாரிப்பு மட்டும் தொழில் நுட்பங்களை வாங்கி பயன் படுத்துவதே முக்கியத்துவம் பெறுகிறது .


அணியின் பெயர் மற்றும் பெயர் 

அதிலும் இந்த அணியின் பெயர் வருடத்திற்க்கு ஒன்றாய் மாறி வருகிறது .2010 ஆம் ஆண்டில் லோட்டஸ் ரேசிங் என்றும் 2011 ஆண்டில் டீம் லோட்டஸ் என்றும் இந்த ஆண்டு கேட்டர்ஹாம் என்ற பெயரில் கலந்துகொள்ள வருகிறது .அதுமட்டுமல்ல இங்கு நமது விஜய் மல்லையா மாதிரி அங்கு மலேஷியாவில் டோனி பெர்னாண்டஸ் இதன் உரிமையாளர் .
இந்த காரின் தொழில் நுட்ப பாகங்கள் எஞ்சின் - Renault V8 RS27-2012 ,கியர் பாக்ஸ் Red Bull Technology ,மற்ற படி கூலிங் சிஸ்டம் ,டிரைவர் சீட் ,ஸ்டீரிங் வீல் கேட்டர்ஹாம் தயாரிப்பு .


அணியின் டிரைவர்கள்

இதுவரை ஒரு புள்ளி கூட வாங்காத இந்த அணியின் இந்த ஆண்டு டிரைவர்கள் ஒருவர் பினிஷ் நாட்டின் Heikki Johannes Kovalainen- கடந்த இரண்டு ஆண்டும் இந்த அணியில் இருந்தாலும் ஒரு புள்ளிகூட வாங்கி தராதவர் .
அடுத்தவர் இத்தாலியின் - ,Jarno Trulli  இவரும் இந்த அணியில் இரண்டு ஆண்டு இருப்பவர் ஒரு புள்ளிகூட வாங்கி தராதவர் .சென்ற ஆண்டில் இந்த அணியின் டெஸ்ட் டிரைவராக நமது கருண் சந்தோக் இருந்தார் என்பது குறிப்பிட தகுந்ததுகடந்த ஆண்டில் பத்தாம் இடத்தில் ஒரு புள்ளிகூட வாங்காமல் இருந்த அணி இந்த ஆண்டு அதை சாதிக்கும் என டோனி பெர்னாண்டஸ் சொல்கிறார் .எதிர்பார்ப்போம் .மெக்லரண் மேஸ்ர்சீடிஷ் அணி தனது MP4 - 27 காரின் அறிமுகத்தை வரும் பிப்ரவரி 01 வெளியிடுகிறார்கள் .காலை பதினோரு மணியிலிருந்து ஆன்லைனில் அறிமுக படுத்த இருக்கிறார்கள் .அதனை சுடச் சுட காண விரும்பும் ரசிகர்கள் Mclaren.com அல்லது facebook.com/vodafonemclarenmercedes  காணலாம் .அதுவரை போர்த்தி இருக்கும் திரை விலக காத்திருப்போம் .
1 comment:

Sugumar Je said...

விபரங்கள் அருமை...