உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, January 21, 2012

World's fasted car ( Tamil )


வேகத்தின் காதலர்களுக்கு  சமர்ப்பணம் 


Blockbuster 350 cc Pulsar.cc


 நூறு அடிக்குள் பத்து வேகத்தடை

உலகத்தின் வேகத்தை விரும்பாதவர்கள எண்ணிகையை விட விரும்புவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் .அதிலும் இன்று பயணத்திற்கு மட்டும்தான் வாகனங்கள் என்ற நிலை மாறி நூறு அடிக்குள் பத்து வேகத்தடைகள் உள்ள சாலைகளை கொண்ட நம் ஊர்களில் கூட வரப்போகும் பல்சர் (Blockbuster 350 cc Pulsar.cc ) ஓட்ட ஆசை படும்போது , வேகத்தை மட்டும் விரும்பும் -வேக விரும்பிகளுக்கு, விலையும் ஒரு விஷயம் இல்லை , சாலையும் முக்கியம்  இல்லை!


வேக விரும்பிகளுக்கு புது விருந்து .இன்றைய தேதிக்கு மிக வேகமான - சாலையில் செல்லும் காரில் அங்கீகாரம் பெறப்பட்ட வேககார் எது என பார்க்கும்போது நம் முன்னே நிர்ப்பது - இருண்ட வேலையில் முறைத்து பார்க்கும் கரும் பாம்பின் கண்கள் போல முன் பக்க தோற்றமுடைய புகட்டி (Bugatti) கம்பெனியின் Bugatti Veyron 16.4 Super Sport கார் .எத்தனைதான் உலக அளவில் சொகுசு கார்களுக்கு மதிப்பு இருந்த போதும் இம்மாதிரியான SUV (Sport utility vehicle ) ரக கார்களின் மோகம் குறைய மாட்டேன்கிறது. 

 Bugatti Veyron 16.4 Super Sport  கார் .

இரண்டு பயமில்லாத நபர்கள் மட்டுமே இந்த காரின் மணிக்கு 267 மைல் வேகத்தை ( 427 கி .மீ ) அனுபவிக்க முடியும் (பார்முலா 1 காரின் வேகம் மணிக்கு 360 கி .மீ ) .ஜெர்மனியின் வோல்க்ஸ்வகேன் ( Volkswagen ) அறுபது மைல் நீளமுள்ள வேக சோதனை சாலையில் உலக வேக தர நிர்ணய சோதனையாளரான - German Technical Inspection Agency (TÜV) முன்னிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது .

வேகமே இதன் மூலதனம் .
 2035 கிலோஎடையுள்ள பாயும்அழகிய இந்த எந்திர பறவையின் 1200 குதிரை திறன் சக்தி நகர் பகுதி சாலையில் 8 மைலுக்கு / 4 லிட் பிரத்தியோக நெடுஞ்சாலையில் 13 மைலுக்கு / 4 லிட் செலவாகும் ஆனால் வேகத்தை தொடும் விகிதம் 0-60 mph: 2.40 seconds .

விலையை பற்றி ?!விலை ஒன்றும் அதிகம் இல்லை2,400,000. (நம் இந்திய பணத்தில் கணக்கு போட வேண்டாம்.இந்த மாதிரி வலை செய்திகளை படிக்கும் ஆவல் விட்டு போய்விடும் அபாயம் நேரிடலாம் ) .

ஒரு ரவுண்டு ப்ளீஸ் ?


யாரவது வாங்கிவிட்டால் தயவு செய்து ஒரு ரவுண்டு அழைத்து செல்ல வேண்டுகிறேன்.


No comments: