உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Wednesday, March 7, 2012

பெருமை பட வேண்டிய அணி - Mercedes AMG Petronas



இன்றைய தேதியில் பார்முலா 1 ஐ பொறுத்தவரை பனிரெண்டு அணிகளில் ஐந்து அணிதான் அதிகம் பேசபடுகிறது . மிக குறுகிய காலத்தில் முதலிடத்தில் உள்ள 1.ரெட்புல் ரெனால்ட் 2. மெக்லரண் மேர்சீடிஸ் 3. மிக அனுபவமுள்ள பெர்ராரி 4. மேர்சீடிஸ் 5.  ரெனால்ட் ஆகியனதான் .(ஆனால் இந்த ஆண்டில் 2012 ல் சில மாற்றங்கள் 4 ஆம் ,5 ஆம் இடங்களில் இருக்கும் ).

அந்த வரிசையில் இன்று நாம் நான்காவதாக இருக்கும் ஜெர்மனியின் -  Mercedes AMG Petronas அணியின் -  W03 கார் உலக அறிமுகம் கடந்த 21 பெப்ரவரி அன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா Circuit de Catalunya ல் நடந்தது
.
பார்வையை திருப்பும் சக்தி.




 பொதுவாகவே ஒரு சமூக கௌரவம் அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களில் வெளிபடையாக தெரியும் .அதிலும் மேர்சடிஷ் பென்ஸ் காரில் வருபவர்களை தனியாக மதிப்பிட இன்றல்ல என்றுமே மக்கள் நினைக்கும் அளவுக்கு ஒரு சமூக அந்தஸ்தை அதன் விலையிலும் சொகுசிலும் நீண்ட இடம் தக்கவைதுகொண்ட பெருமை கொண்டது இன்றும் பத்து விதமான வகைகள் ( Class  ) ( C,CL,CLS,E,GL,M,R,S,SL,SLK )  மற்றும் உட்பிரிவுகளுடன் வெளிவந்துகொண்டு இருக்கிறது .சாலையின் எல்லோரின் பார்வை இந்த கார்கள் மேல் படர்வதை போல பார்முலா 1 போட்டி அணிகளின் பார்வையை திருப்பும் சக்தி இந்த அணிக்கு உண்டு .

வரலாறு .


இன்று செயல்படும் - Mercedes AMG Petronas Formula One Team இங்கிலாந்துக்கு முப்பத்தி ஒரு கிலோ மீட்டருக்கு அருகில் நார்தம்ப்டன்ஷையர் தெற்கு நகர பகுதியில் உள்ள ப்ரக்க்லே மற்றும் ப்ரிச்வோர்த் ( Brackley and Brixworth ) நகரங்களில் இருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு காரணமாக செயல்படுகிறது .ஆனால் இதன் உரிமம் ஜெர்மனிக்கு சொந்தமானது . 1954 ஆம் ஆண்டு தனது பார்முலா 1 வரலாற்றை தொடங்கியது 1955 வரை வெற்றிகரமாக தொடர்ந்த அதன் பயணம் ,மீண்டும் 2010 , 2011, மற்றும் இந்த ஆண்டில் தொடர்கிறது .அதர்க்கு இடைப்பட்ட காலங்கள் கீழ்கண்ட பெயரில் பயணித்தது .
1. Brawn (2009)
2. Honda (2006–2008)
3. BAR (1999–2005)
4. Tyrrell (1968–1998)
வழக்கம்போல தொடர்ந்து மாறிவந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சிறந்த ஓட்டுனர்களை பணியமர்த்த தேவையான நிதி ஆதாரங்கள் போதாமல் வேறு பல பெயர்களில் தொடர வேண்டியிருந்தது .

காரின் மாற்றங்கள்



காரில் மிகசிறந்த இரண்டு மாற்றங்களை செய்துள்ளது .
1. காரின் எடை குறைப்பு : இதன் முதல் பகுதி காரின் ஒரு பார்முலா 1 காரில் சுமார் 4500 பாகங்கள் இருக்கும் .அதில் சுமார் 200 மேற்பட்ட பாகங்களை குறைத்து எடை குறைப்பு நிகழ்ந்துள்ளது .மற்றும் Mercedes AMG  -  2.4-liter V-8 என்ஜின் உயர் செயல்பாடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
2. காரின் வடிவமைப்பு மாற்றங்கள் : காற்றியக்கவியல் அடிப்படையில் stepped-nose  வடிவமைப்பு உயர்ந்த பட்ச காரின் உயர அமைப்பு புதிய வாயு வெளிப்பாட்டு (exhaust gases ) அமைப்பு போன ஆண்டில் ஏற்பட்ட DRS மற்றும் KERS தொழில் நுட்ப குறைகள் நீக்கப்பட்டுள்ளது .
அதுமட்டுமல்ல் இத்தனை மாற்றத்தினையும் 400 கி.மீ போட்டி களத்தில் சோதனை செய்யபட்டுள்ளது .அது மட்டுமல்ல Technical Shakedown Test சோதனை 100 கி.மீ அளவுக்கு நடந்துள்ளது.எனவே நிறைய சவாலை சந்திக்க தயாராக உள்ளது .

ஓட்டுனர்கள்.



இரண்டாவது முறையாக பார்முலா 1 போட்டிக்கு வந்த மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்ததை மாற்றி
மேர்சீடிஸ் அணிக்கு வந்தார் இன்று உலகில் பார்முலா 1 போட்டிக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதற்கு பத்து சதவிகித காரணம் மைக்கேல் ஷூமேக்கர் என்று சொன்னால் அது பொய்யாகவோ மிகை படுத்தலாகவோ இருக்காது .அந்த அளவுக்கு போட்டியில் ஒரு போர்குணத்தை வெளிபடுத்துபவர் . எழுமுறை சாம்பியன் பட்டம் பெற்றவர் கலந்து கொள்ளும் போட்டி என்பதால்  மிக சுவாரஷ்யமாக இருந்தது .அந்த போட்டியில் 72 புள்ளிகளை பெற்று ஒன்பதாம் இடமும் ,அடுத்த கடந்த ஆண்டில் ஒருபடி முன்னேறி எட்டாம் இடமும் 76 புள்ளிகளையும் பெற்றார் .இந்த ஆண்டில் அவர் போடியம் ஜம்ப் பார்க்க நிறைய ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள் .சிங்கம் வயதானாலும் சிங்கம்தான் என பார்க்க காத்திருப்போம் .

அடுத்தவர்,  நிக்கோ ரோஷ்பெர்க் .இவர் மிக பார்முலா 1 பாரம்பரியத்தை கொண்டவர் .இவரின் தந்தை Keke Rosberg பார்முலா 1 டிரைவர் .பின்னிஷ் நாட்டை சார்ந்தவர்.இவரின் மனைவி sina ஜெர்மனி நாட்டவர் .எனவே இரண்டு தேச குடியுரிமையை கொண்டவர் ரோஷ்பெர்க். இவரின் பார்முலா 1 பயணம், தந்தையின் அணியான வில்லியம்ஸ்காஷ்வோரத்தில் தொடங்கி 2006 - 2009 வரையும் பின்னர் 2010 ஆம் ஆண்டு மேர்சடிஷ் அணிக்கு வந்தவர் .இங்கு வந்தவர் 2010 ஆம் ஆண்டில் 142 புள்ளிகளுடன் ஏழாம் இடமும் ,2011 ல் 89 புள்ளிகளுடன் அதே ஏழாம் இடம் பெற்று சமமாக இருக்கிறார் .

பெருமை பட வேண்டிய அணி.


மெர்செடெஸ் AMG பெட்ரோனாஸ் அணியை பொறுத்தவரை ஒரு மிக பெருமை பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த அணியின் தேச  பற்று .ஆம் அந்த அணியின் ஐந்து ஆண்டு பயணத்தில் எப்போதும் ஜெர்மானிய வீரர்களுக்கு இடம் கட்டாயம் இருக்கிறது என்பதுதான் .ஆம் 1954 ல்ஜெர்மனின்  Karl Kling ,Hans Herrmann அடுத்து 1955 ல் மீண்டும் Karl Kling இப்போது 2010 முதல் 2012 நிக்கோ ரோச்பெர்க் ,மைக்கேல் ஷூமேக்கர் .தன் நாட்டு வீரர்களை மதிக்கும் அணிக்கு என்றுமே ஒரு தனிமதிப்பு இந்த உலகில் காத்திருக்கும் .


நிக்கோ ரோஷ்பெர்க் பற்றி சிறு சுவையான விஷயம் .


அவர் அம்மா பிள்ளை போல அவரின காதலி Vivian Sibold  ஜெர்மானியர் . மேலும் அவர் interior designer .ஆனால் அவர் நம் ரோஷ்பெர்கையும் வடிவமைப்பாரா ?


No comments: