உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Thursday, March 1, 2012

சுவிட்சர்லாந்தின் அற்புதம் - Sauber F1 Teamஅழகிய சுவிஸ் நாட்டின் ஒரே அணியான சாபர் F1 அணி ( Sauber F1 Team ) அணியின் சாபெர் C31 - பெர்ராரி காரின் அறிமுகம் கடந்த பெப்ரவரி 6 ஆம் நாள் ஸ்பெயின் தேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள Jerez de la Frontera circuit ல் நடந்தது

சாபெர் அணியின் வரலாறு.சாபெர் அணி அணியின் உரிமையாளர் பீட்டர் சாபெர் கடந்த 1993 ஆம் ஆண்டில், Sauber C12 இல்மோர் - 2175 3.5 V10 என்ஜினுடன் தன்னுடைய பார்முலா 1 வரலாற்றை தொடங்கிய அந்த அணி இந்த 2012 ஆம் ஆண்டு வரை Mercedes , Ford , Petronas , BMW என பல கம்பனி என்ஜினுடன் கைகோர்த்து பயணத்தை தொடர்ந்து இருக்கிறது. கடைசியில் 2010 முதல் 2012 வரை பெர்ராரி என்ஜினுடன் தொடர்ந்து வருகிறது .

1 The Mercedes era (1993–1994)
2 The Ford era (1995–1996)
3 The Ferrari era (1997–2005)
4 The BMW era (BMW Sauber, 2006–2009)
5 Return to Sauber ownership and Ferrari engines (2010–2012)

சுருக்கமாக சொன்னால் பல ஆளுமையை கடந்து பயணித்து இருக்கிறது இந்த சாபெர் அணி .இதில் இந்த அணியின் சிறந்த காலம் என சொன்னால் அது சாபெர் அணியும் - BMW இணைந்து செயல்பட்ட( 2006–2009 ) ஆண்டுகளில் 2007 ஆம் ஆண்டில் இரண்டாம் இடமும் ,2008 ஆம் ஆண்டில் மூன்றாம் இடம் பெற்றதேயாகும் .இன்று வரை ஐந்தாம் இடத்தை மட்டுமே மற்ற இணைப்பில் தொடமுடிந்தது .

காரின் மாற்றங்கள்

.
சாபெர் அணியின் முதன்மை வடிவமைப்பாளர் -  Matt Morris இந்த ஆண்டின்  சாபெர் C31 புரட்சிகரமான யோசனையுடன் சென்ற ஆண்டின் சாபெர் C30 காரின் தவறுகள் நீக்கப்பட்ட வடிவமைப்பு என்கிறார் .


முக்கியமாக காரின் பின்புற அமைப்பு புதிய யோசனைகளின் விளைவு என்கிறார் .அதே போல புதிய விதியின் அடிப்படையில் வடிவமைக்க பட்ட நோஸ் பகுதி மிக சிறப்பாக உள்ளதாக கருதுகிறது அந்த அணியின் எஞ்சினியரிங் குழு .
முன்பகுதி சஷ்பென்சன் அமைப்பு பாரம்பரியமாகவும் அதே சமயம் சவாலாகவும் இருக்கும் .பின்பகுதி சஷ்பென்சன் புல் ராடு முன்பகுதியில் நீண்ட அமைப்பில் அதிர்சிகளை குறைக்கும்விதமாக வடிவமைக்கபட்டுள்ளதாக சொல்கிறார்கள் .அதுமட்டுமல்ல சைடு போட்ஸ் (  Sidepods ) அமைப்பில் உள்ள திருத்தங்கள் பின்புற அமைப்பையும் , காற்றியக்கவியலின் தன்மையையும் முனேற்றம் அடைய செய்துள்ளது .இந்தமுறை பெர்ரரியின் எஞ்சின் நீளவாக்கில் உருவாக்கப்பட்ட டிரான்ஸ் மிசன் மௌண்டடு கார்பன் போல்ட்கள் மிக நேர்த்தியான இறுக்கமான அமைப்பாக செயல்படும் என்கிறார்கள் .
இருந்தாலும் இன்னும் சில மாற்றங்கள் மார்ச் 18 ரேஸ் வரை எதிர்பார்க்க படுகிறது .


டிரைவர்கள் .

சாபெர் அணியும் நமது சஹாரா போர்ஸ் இந்திய அணிபோல தன் நாட்டு டிரைவர்களுக்கு வாய்ப்பே அளிக்காத அணி . சென்ற ஆண்டில் ஜப்பானின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் - Kamui Kobayashi .இவருக்கு அவரின தேசத்தில் தொடங்கிய டோயோட்டோ அணி (2002 முதல் 2009 வரை செயல் பட்டது ) அவருக்கு முதல் வாய்ப்பை 2009 ஆம் ஆண்டு கொடுத்தது .அடுத்து சாபர் அணியில் கடந்த இரண்டு ஆண்டுகள் இருக்கிறார் கடந்த ஆண்டு 30 புள்ளிகளை பெற்று தந்தார் ,


சென்ற ஆண்டில் அடியெடுத்து வைத்த -  மெக்சிகன் டிரைவர் Sergio Pérez Mendoza ,14 புள்ளிகளையும் பெற்று ஏழாம் இடத்தை பெற்று தந்தனர் .இந்தவருடமும் அவர்களே களம் இறங்குகிறார்கள .அவர்களுடன்இன்னொரு மெக்சிகன் டிரைவர் Esteban Gutiérrez ரிசர்வ் டிரைவராக இணைந்துள்ளார்
சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு நீண்ட அனுபவமுள்ள அணியிடம் மிகவும் எதிர்பார்கிறார்கள் என்பதை அவர்களின் வரவேற்ப்பு சொல்கிறது .
.

அந்த நம்பிக்கை , அந்த அணியின் மானசீக வெற்றிக்கு முன்னுரையாக அமைய வாழ்த்துவோமே !


No comments: