உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Thursday, July 11, 2013

Silverstone நாயகன் - நிக்கோ ரோஸ்பெர்க் !


                             
              கடந்த வாரத்திர்க்கு முந்திய ஞாயிறு 30 ஜூன் ஃபார்முலா 1 போட்டியின் எட்டாவது சுற்று போட்டி கிரேட் பிரிட்டனின் உலகின் பழமை வாய்ந்த ,  Silverstone களத்தில் நடந்தது .


              பொதுவாகவே நமக்கு இங்கிலாந்து பற்றி சொல்லும்போது யுனைடெட் கிங்டம் என்றும், கிரேட் பிரிட்டன் என்றும் சொல்வார்கள் வேறொன்றும் இல்லை .இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து சேர்ந்தது `யுனைடெட் கிங்டம் .இதில் வடஅயர்லாந்து தவிர்த்த மூன்று நாடுகளும் கிரேட் பிரிட்டன் எனப்படுகிறது .ஆங்கில கால்வாயை தாண்டிய ஃப்ரான்ஸ் நாட்டில் ஒரு பகுதியான பிரிட்டனி அல்லது பிரிட்டன் என்ற பகுதியை பிரித்து காட்ட, கிரேட்( பிரிட்டன் ) என்ற வார்த்தை சேர்த்துகொள்ளபட்டது அவ்வளவுதான் .அதனால் இனி நமக்கு போட்டியில் என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம் .
பயிற்சி மற்றும் தகுதி போட்டிகள்  .

         மழையுடன் ஆரம்பித்த முதல் பயிற்சி போட்டி நடக்குமா என்பதர்க்கு STR ஃபெராரியின் டேனியல் ரிக்கார்டியோ முதலிடம் நாந்தான் என பதில் அளிக்க அன்று நடந்த இரண்டாவது ப.போ,மெர்சடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் முதலிடமும் அடுத்த நாள் நடந்த 3 ஆவது ப.போ,அவரே வந்தாலும் ,


                 தகுதி சுற்றில் உனக்கு நான்தான் சீனியர் என்பதாக அதே அணியின் லீவிஸ் ஹெமில்ட்டன் முதலாவதாகவும் இரண்டாவது இடத்தை ரோஸ்பெர்க்குக்கும் ,மூன்றாவது இடத்தை ,ரெட்புல் ரேசிங்-ரெனால்டின் செபாஸ்டியன் வெட்டலும் பெற்றனர் .


போட்டி ...
முதல் சுற்றில் ..
              முதல் இடத்து  லீவிஸ் ஹெமில்ட்டன் வேகம் எடுத்து துவங்க அவரை தொடரும் ரோஸ்பெர்க்கை மூன்றாவது இடத்து வெட்டல் துப்பாக்கியின் பூல்லட் போல தாண்டி இரண்டாவது இடத்தை தக்கவைத்துகொண்டார் அதே போல நான்காவதாக துவங்கிய ரெட்புல்லின் - மார்க் வெப்பர் காரின் பம்பர் உடைந்த நிலையில் பின் தங்கி, 17 இடத்திர்க்கு தள்ளபட்டது .

4 ஆவது சுற்றில் ...

        வெட்டலால் துரத்தபடும் ஹெமில்ட்டன் .வெறும் 1.9 வினாடிகள் முன்னனி வகிப்பது ரெட்புல் அணிக்கு சந்தோசம் தந்தது .

8 ஆவது சுற்றில் ..

               ரெட்புல் அணியின் பிரார்த்தனை என்பது போல , ஹெமில்ட்டன் காரின் இடது பின்புற Medium compound டயர் டிஸ்க்கை விட்டு முற்றிலுமாக் அறுந்து வெளியேறியது ..


10 ஆவது சுற்றில் ..
            ஹெமில்ட்டன் பிரச்சனை முடிவுக்கு வருவதர்க்குள் ஃபெராரியின் ஃபிலிப் மாசாவின் காரில் அதே போல் இடது பின்புற Medium compound டயர் பஞ்சர் ..

15 ஆவது சுற்றில்..
           இப்போது ,STR ஃபெராரியின்- ஜீன் எரிக் வெர்ஜின் காரின் எல்லாமே அதே டயர் மற்றும் ஆனால் Hard compound !!

என்ன ஆச்சு Pirelli டயர் கம்பெனிக்கு ? 


          குறிப்பாக 4 ஆவது The Loop வளைவிலும் மற்றும் 5 ஆவது Aintree வளைவில் மட்டும் பில்லி சூனியம் வைத்தது போல இடது பின்புற டயர்களின் தொடர் பஞ்சர் ..ஒருவேளை அந்த வளைவுகளின் ட்ராக் Kerp எனப்படும் அமைப்பு  டயர்களை வெட்டுகிறதா ,போட்டியின் முடிவுகள் தலைகீழாக மாறப்போகிறது போலவே?


21 ஆவது சுற்றில் ..

                 களத்தில் இப்போது முதல் 5 வீரர்கள் 1. வெட்டல் 2. ரோஸ்பெர்க் 3. ஆண்ட்ரியன் சட்டில் 4. அலோன்சா 5.ரைகொணன்

28 ஆவது சுற்று ..
              ஹெமில்ட்டன் விட்ட இடத்தை பிடிக்கும் வேகத்தில் இப்பொது 12 ஆம் இடத்தில் பாய்ந்து கொண்டு இருக்க ..

35ஆவது சுற்றில் ..

           STR ஃபெராரியின்- ஜீன் எரிக் வெர்ஜின் கார் டயர் பிரச்சனையால் போட்டியை விட்டு விலகியது .

41 ஆவது சுற்றில் ..


            முதல் இடத்து வெட்டலின் கார் திடீரென வேகம் குறைந்து பின் தங்க , ரெட்புல்லின் தொழில் நுட்ப பகுதியளர்கள் அதிர்சியில் உறைய ,வெட்டலின் காரின் 5 ஆவது கியர் முற்றிலுமாக செயல் படாமல் போகவே க்களத்தின் ஓரமாக காரை நிறுத்திவிட்டு இறங்கி காரருகே நின்று கொண்டு இருக்க , கடந்து போன மற்ற ஓட்டுனருக்கும் , ரசிகர்களுக்கும் அந்த நிகழ்வு மிகவும் சோகமாக்கியது ..
இதர்க்கு முன் கடந்த ஆண்டின் இதே எட்டாவது போட்டியில்  ஐரோப்பாவின் போட்டியில் (24 Jun 2012)வெளியேறியதர்க்கு பிறகு இதுவே அவரின் ரிட்டயர்மெண்ட் .

46 ஆவது சுற்றில்..
              அதே போல் இடது பின்புற Medium compound டயர் பஞ்சர் ..மெக்லரனின் மெர்சடீசின் - செர்ஜியோ பெரெஸ் கார்.


48 ஆவது சுற்றில் 
                  யாரும் எதிபாராத விதமாக மூன்றாவது இடத்தில் இருந்த ரெட்புல்லின் மார்க் வெப்பெர் இரண்டாவது இடத்து ரைகொணனை முந்தி செல்ல வெட்டலின் வெளியேற்ற சோகத்தை ஆறுதல் படுத்துவிதமாக இருந்தது .இன்னும் 4 சுற்றுக்கள் இருந்த நிலையில் இந்த முன்னேற்றம் முதலிடத்தை நோக்கி என்பதாக பட்டது .


50 ஆவது சுற்றில்..
              மூன்றாவது இடத்து ரைகொணன் இப்போது ஃபெராரியின் அலோன்சாவால் முன்றாவது இடம் தள்ளப்பட்டார் .போடியம் வாய்ப்பு பறிபோனது .


51 ஆவது சுற்றில்..
                 ரைகொணன் இப்போது  லீவிஸ் ஹேமில்ட்டனால் மீண்டும் பின்னுக்கு தள்ளபட்டார் .


52 இறுதி சுற்றில் 
மார்க் வெப்பரின் முதலிடத்து முயற்சியை 0.7 வினாடிகள் வித்தியாசத்தில் முறியடித்து, முதல் இடம் மெர்சடீஸ் அணியின் - நிக்கோ ரொஸ்பெர்க்.


இரண்டாம் இடம் ரெட்புல் ரேசிங்-ரெனால்டின் மார்க் வெப்பர் .


முன்றாவது இடம் ஃபெராரியின் -ஃபெர்னாண்டொ அலோன்சா .  

அடுத்த போட்டி 
  



No comments: