உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Sunday, April 3, 2011


உலகின் மிக அழகிய கங்காரு தேசமான ஆஸ்திரேலியா கண்டம்  தவிர்க்க முடியாத,  
சுற்றுலா உலகின் சுவர்கம்.
 உலகின் மிக சிறிய கண்டம் (2,988,888 சதுர மைல்) .ஆனால் உலகில் உள்ள  மிகப் பெரிய தீவாகும் .

 நாம் பேசிக்கொண்டு இருக்கும் போது கடந்த  இங்குள்ள மெல்போர்ன் நகரில் கோண்டா கிராண்ட் பிரிக்ஸ் சர்க்யூட்  ( Qantas Australian Grand Prix)முதல்  F1 போட்டி மார்ச் 27 ஆம் நாள் முடிந்துவிட்டது . இந்த சர்க்யூட் மிக அருகில் ஆல்பெர்ட் பார்க் உள்ளது .அதனால் இதன்பெயரிலும் அழைக்கப்படுகிறது இந்த சர்க்யூட். அதன் அழகியஅமைப்பை பார்த்துவிட்டுத்தான் போகலாமே !


இங்குள்ள களம் கடந்த 2004 ஆண்டிலிருந்து எட்டு போட்டிகள் நடந்துவிட்டது . 5.303 கி.மீ நீளமுள்ள, 16 வளைவுகளை மட்டுமே கொண்ட 
 மொத்த போட்டி சுற்றான  58 முறை ஒரு  கார் சுற்றி முடிக்கும்போது 307.574 கி.மீ தூரத்தை கடந்து இருக்கும்.
 இந்த தூரத்தை கடந்த 2004 ல் ஜெர்மன் வீரர் மைகேல் ஷூமேக்கர் மட்டுமே அப்போதைய அணி பெரரியில் v 10 என்ஜின் மூலம் 1:24.125 நிமிடத்தில்அதிக வேகமாக ( ஒருமுறை)  கடந்த   சாதனைதான் இன்னும் இருக்கிறது .
அழகிய களம் .

இதே தேசத்தை சேர்ந்த ஒரே டிரைவரான  மார்க் வெப்பர்( MARK WEBBER) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் முகம். இவர் கடந்த ஐந்து ஆண்டாக ரெட் புல்( Red Bull-Renault)அணிக்காக அணியில் இருக்கிறார் .அதிலும் முதல் தகுதி சுற்றில் முதல் இடத்திலும் ,இரண்டாவது தகுதி சுற்றில் ஐந்தாம் இடத்திலும் மூன்றாம் சுற்றில் இரண்டாம் இடத்தையும் அடைந்து நம்பிக்கையை வளர்த்தார்

mark webber
ஆனால்  ஐந்தாம் இடத்தில் பத்து புள்ளிகளை பெற்று ஆறுதல் மட்டுமே தந்தார் .Home Ground என்ற அடிப்படையில் எப்போதும் இருக்கும் இந்த எதிர்பார்ப்பு, F1 டிரைவர்களையும் விடுவதில்லை 
 Schlegelmilch Photographic Review - Australia
Sebastian Vettel
இந்த ரேசில் கடந்த முறை உலக சாம்பியன்ஜெர்மெனியின்  செபஸ்டியன் வெட்டல் முதல் போட்டியில் தன் வெற்றி பாதையை தொடர்ந்தார் .இவரும் இங்கிலாந்தின் ரெட் புல் அணியை சேர்ந்தவர்தான் .

இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் குடிமகன் லூயிஸ் ஹெமில்டென் இங்கிலாந்தின் இன்னொரு அணியான மேக்லேறேன் மெர்சிடீஸ் 
(Vodafone McLaren Mercedes) அணிக்கு பெற்று தந்தார் 


Lewis Hamilton

மூன்றாம் இடத்தின் சொந்தக்காரர் விடாலி பெட்நோவ்.ரஷ்ய நாட்டைசேர்ந்த முதல் F1 DRIVER 
இங்கிலாந்தின் .லோட்டஸ் ரெனால்ட் (Lotus Renault GP)அணியிலிருப்பவர்.

Vitaly Petrov


F1 அணியின் பெயரை மிகவும் கவனிக்க வேண்டும். போன ஆண்டு வேறொரு உரிமையாளர் (Constructors)  இருந்துருப்பார். இந்த ஆண்டு உரிமையாளர் ,வேறொரு கம்பெனி தயாரிப்பு என்ஜினை கொண்டு தன்னுடைய வசதியையும் ,தேவையும் வைத்து அணிக்கான ஓட்டுனர்களை அம்ரத்திக்கொள்வார்.
 இப்போதுள்ள நம் மல்லையா அவர்களின் போர்ஸ் இந்திய அணியின் பெயர் கடந்த 2008 -2011 வரை spyker என்ற பெயரிலும் அதற்கு முன் 2007 ல் மிட்லேன்ட் எனவும் அதற்கும் முன் ஜோர்டான் அணி என்ற பெயரிலும் ,அதற்குமுன் ..... என நீண்டு 1991 ஆம் ஆண்டு வரை நீள்கிறது  

.எனவே பெயர் முக்கியம் என்பதோடு அணிக்கு அவரின் இரண்டு டிரைவர்களின் மொத்த புள்ளியும் சேர்த்து பரிசு வழங்க படுகிறது .சில சமயம் முதல் நிலையில் இருக்கும் சாம்பியன் ( டிரைவர்) ஒருத்தராகவும் Constructor   சாம்பியன் ஒருத்தராகவும் இருப்பார்கள். கடந்த 2008 ல் சாம்பியன் மேக்லேறேன்அணியின் லூயிஸ் ஹெமில்டென்

 .


 ஆனால் பெர்ராரி அணிதான் ஒட்டுமொத்தபோட்டிகளின்- புள்ளிகளின் (172) அடிப்படையில் சாம்பியனானது

இந்த ஆண்டின் முதல் போட்டி முடிவுகள் 


அணிகள் ,புள்ளிகள்  

        1. RBR-Renault 35 
3 .Ferrari 18 
4. Renault 15
5. STR-Ferrari 
 6. Force India-Mercedes 3                  

டிரைவர்கள் / புள்ளிகள்  
           1 Sebastian Vettel German 25 2 Lewis Hamilton British 18 3 Vitaly Petrov Russian 15 4 Fernando Alonso Spanish 12 5 Mark Webber Australian 10 6 Jenson Button British 8 7 Felipe Massa Brazilian 6 8Sebastien Buemi Swiss 4 9 Adrian Sutil German 2 10 Paul di Resta British 1
மற்றபடி
 அணியின் வசதிக்கு ஏற்ப 
இவர்களையும் தேர்ந்த ரசன்யுடன் குவித்து கொள்ளலாம் .

  


அடுத்த வேகம் 

இதே

புன்னகையுடன் ................ 

1 comment:

Sugumarje said...

படிக்கையில் சுவாரஸ்யம் கூடுகிறது... நல்ல வார்த்தைகள் அமைப்பு...வாழ்த்துக்கள்... அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் :)