உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Tuesday, April 12, 2011

விதிமுறையின் விளையாட்டு

எப்போதும்,எல்லோரும்போல  போல முதல் மூன்று வெற்றிபெற்ற இடத்தை மட்டுமே பேசிவிட்டோம் ஆனால் மிக முக்கியமான இரண்டு விசயங்களை தவற விட்டுவிட்டேன். .ஹிஸ்பானியா ரேசிங் டீம் இந்தமுறை தகுதி சுற்றில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட விஷயத்தால் ரேசில் பங்கு கொள்ளும் தகுதி இழந்து விட்டது .இது அந்த அணிக்கான துரதிருஷ்டம் .


ஆனால் அதிருஷ்டம் +போராட்டம் என்ற அடிப்படையில்    போர்ஸ் இந்தியா புள்ளி பட்டியலில் இடம்பெற்றது.


FIA  வின் விதிமுறைப்படி ரேசில் கலந்து கொள்ளும் அணிகளின் நிலையை தீர்மானிப்பதர்க்கு தகுதி சுற்று   (QUALIFYING)  மூன்று நிலையாக பிரிக்கப்பட்டது  .


FIA  வின் விதிமுறைப்படி ரேசில் கலந்து கொள்ளும் அணிகளின் நிலையை தீர்மானிப்பதர்க்கு தகுதி சுற்று   மூன்று நிலையாக பிரிக்கப்பட்டது  .1 .முதல் தகுதி  (QUALIFYING) சுற்றில் கலந்து கொண்ட 12 அணிகளின் 24 கார்களும் கொடுக்கப்பட்ட 20 நிமிட நேரத்தில் களத்தில் போட்டி போட்டு நான் ,நீ என முந்தி பறந்தன .அதில் 17 கார்கள் மட்டும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது .2 .இரண்டாவது தகுதி சுற்றில் கொடுக்கப்பட்ட 15 நிமிட நேரத்தில் 17 கார்களில் 10 கார்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது .3 .மூன்றாவது தகுதி சுற்றில்கொடுக்கப்பட்ட 10 நிமிட நேரத்தில்  10 கார்களின் 1 முதல் 10 இடங்களுக்கு குறைந்த நேரத்தில் களத்தை கடந்த கார்கள் ஒன்று  முதல் பத்து இடங்களை பிடித்தன .ஆனால் விஷயம் அதுஅல்ல .107%..........இந்த ஆண்டில் 1995 லிருந்து கிடப்பில் இருந்த விதிமுறை 107% என்ற வில்லனை அறிமுபடுத்தியது ஜீன் டோட்(Jean Todt). FIA தலைவர்.  

.இதன் படி முதல் தகுதி சுற்றில் எந்த கார் மிக குறைந்த பட்ச வேகத்தின களத்தை கடந்து நேரத்தை பதிவு செய்கிறதோ அந்த நேரம் + 107% =கடைசி காரின் நேரம் .அதாவது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Q1 ல் ரெட் புல்லின்,செபாஸ்டியன்  வெட்டல் பதிவு செய்தது 1:25.296 (1-minute:25- second .296 millisecond) என்ற நேரத்தில இதர்க்கு சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்துவதை விட 107% Lap Time Calculator பயன்படுத்தி பார்த்தால்  1:31.266 என்று வரும்
Photo: 107% Lap Time Calculator - Work out the target lap times in F1 2011

இந்த அடிப்படையில் நேரம் கணகெடுத்து இந்த நேரத்தை விட அதிக நேரம் வரும் கார்களை போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்க படுகிறது அந்த நேரத்தை விட ஹிஸ்பானியாவின் நமது நம்பிக்கை நட்சத்திரம் நரேன் கார்த்திக் +3.027.(01:34.293) அதே அணியின் விட்டன டோனியோ லூசியும் (Vitantonio Lu zzi)+1.712 (01:32.978)
 இதெல்லாம் ஒரு விசயமா ?இவ்வளவு செலவு (?) செய்து, வெறும் நிமிட கணக்கில் பங்கு கொள்ள அனுமதி மறுப்பா?ஆம்.
 அதுதான் ,அதனால்தான் அதன் பெயர் பார்முலா 1.


The Sepang International Circuit 


இந்தவாரம் நம்மை கடந்து இன்னொரு போட்டி மலேசியாவில் முடிந்துவிட்டது .


சில விசயங்கள் இப்படித்தான் 
தெரியாத விசயங்களை தேடும்போது
 நன்றாக தெரிந்த விசயங்களை கடந்து போகநேரிடலாம் .

Championship Table

அடுத்த வேகத்தில் பார்ப்போமா ?

2 comments:

Chitra said...

சில விசயங்கள் இப்படித்தான்
தெரியாத விசயங்களை தேடும்போது
நன்றாக தெரிந்த விசயங்களை கடந்து போகநேரிடலாம் .


...well-said! :-)

ohedasindia said...

Good details.