உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Sunday, April 17, 2011

ஈர்ப்பு விசைக்கு எதிரான பயணம்


சில சமயம் நம் பாது காப்புக்காக வைத்த முள்வேலி பூத்து, வீட்டுக்கு அழகு சேர்ப்பது போல சீனாவின் பெரும் சுவர் பாதுகாப்பு என்ற அரண் அந்தஸ்தை தாண்டி ,அதிசயமாகி விட்டது .அந்த நாட்டின் சாங்காய் நகரில் தான் நம் மூன்றாவது போட்டி .


சீனாவின் சாங்காய் ஆடி இண்டர்நேசனல் சர்க்யூட் (Shanghai Audi International Circuit) ரேஸ் முடிவதற்குள் நாம் சந்திக்க முடியாமல் போய்விட்டது .நாம் பேசவேண்டிய முக்கியமான (  KERS-Kinetic Energy Recovery System, DRS-The Drag Reduction ) இரண்டு தொழில் நுட்பங்களின் ஆதிக்கத்தில்தான் இன்றைய போட்டி முடிவே இருந்தது .

அது பற்றி பேச ஆர்வம் இருந்தாலும் ஆழமான அறிவு அதர்க்கு மிக அவசியம் .சொல்லும் பொறுமை நேர்த்தி பிடிபட அவகாசம் எடுத்து கொள்ள விரும்புகிறேன். 

Shanghai Audi International Circuit

கடந்த 2004 முதல் இன்று வரை எட்டு ரேஸ்கள் நடந்து முடித்து விட்டது .
56 சுற்றுகளை கொண்ட இந்த களத்தின் நீலம் 5.451 கி .மீ .

michael schumacher

இந்த களத்தில் 2004 ஆம் ஆண்டு ,பெராரி அணியின் மைகேல் ஷூமேக்கர் 1:32.238 மிக குறைந்த நேரத்தை பதிவு செய்து இருக்கிறார்.இந்த களத்தை ,ஒரு கார், 56 சுற்றுகளை முடிக்கும்போது, 305.066 கி.மீ தூரத்தை கடந்து இருக்கும் . 

கடந்த மலேஷ்யாவின்  செபாங் இண்டர்நேசனல் சர்க்யூட் (Sepang International Circuit) போட்டி முடிவுகளை சொல்லவில்லை .

POS
NO
DRIVER
TEAM
LAPS
TIME/RETIRED
GRID
POINTS
1
1
RBR-Renault
56
37:39.8
1
25
2
4
McLaren-Mercedes
56
+3.2 secs
4
18
3
9
Renault
56
+25.0 secs
6
15
4
2
RBR-Renault
56
+26.3 secs
3
12
5
6
Ferrari
56
+36.9 secs
7
10
6
5
Ferrari
56
+37.2 secs
5
8
7
3
McLaren-Mercedes
56
+49.9 secs
2
6
8
16
Sauber-Ferrari
56
+66.4 secs
10
4
9
7
Mercedes
56
+84.8 secs
11
2
10
15
Force India-Mercedes
56
+91.5 secs
14
1

இந்த முறை நமது போர்ஸ் இந்திய அணி 10 ஆவது இடத்தில வந்து ஆறுதல் அளித்தது .ஆனால் முன்னேற்றம் என்பதே இந்த அழகான படி படியான வளர்ச்சி எனும் தோற்றத்தில் இருக்கும் என்பதை அழகாக உணர்த்தி வருகிறார்கள் போர்ஸ் இந்தியா .

நம் விஜய் மல்லையா, இரவு ஐ.பி எல் மேட்ச் இந்தியாவில்- பகலில் மலேஷ்யாவின் F1 ரேஸ் என்று படு பிசியாக இருக்கிறார் .


அவரை பற்றி சில விசயங்களை இங்கு பேச வேண்டிய கட்டாயம் உள்ளது .அவரை பற்றி பல தவறான அறிமுகங்களை ஏனோ பலரும் தருவதே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் .அவரை நேசிக்க பல காரணம் இருந்தும் சில அற்ப விசயத்தின் அளவுகோலே அவருக்கு விமர்சனம் ஆகி வருகிறது 

.'ஒன் ப்ரம் பில்லியன்'
'ஒன் ப்ரம் பில்லியன்'என்ற பெயரில் வரும் 25ந் தேதி மற்றும் ஜூன் 7ந் தேதி
 சென்னைபெங்களுர், அமிர்தசரஸ், கோவா, ஐதராபாத், கோல்ஹாப்பூர் மற்றும் மும்பை உள்ளிட்ட ஏழு நகரங்களில் 14 முதல் 17 வயதுக்குட்ப்பட்ட இளம் டிரைவர்களுக்கான தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.


   உலகின் பிரபல ஆயில் தயாரிப்பு நிறுவனமான எக்ஸான் லூப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஃபோர்ஸ் இண்டியா எப்-1 அகாடமி இணைந்து மிக அற்புதமான வாய்ப்பை இந்திய பார்முலா டிரைவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார் 


தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் முதல் பத்து டிரைவர்கள் 

சில்வர்ஸ்டோன் நகரில் உள்ள டிமேக்ஸ் கார்ட்ஸ் பார்முலா ஒன் கார் டிரைவிங் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து சர்வதேச தர ஓட்டுனருக்கு உரிய நுட்பங்களை கற்று தந்து இறுதி கட்ட தேர்வில் வெற்றி பெரும் மூன்று டிரைவர்களில் முதலில் வருபவர் இந்திய  ஜெய்பீ களத்தில் பங்குபெற திட்டமிடப்பட்டுள்ளது .மற்ற இருவர் மேலும் பயிற்சி பெற்று பயன்படுத்திக்கொள்ள படுவார்கள் .எனக்கு அந்தவயது இல்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் தேர்வு செய்ய பட்ட அந்த இளம் புயல்களை பற்றி உங்களோடு பேசும் வார்த்தைகளால் சந்தோசப்படுவேன்.

சரி. இனி சீன ரேஸ் ?

இந்தமுறை மிக சந்தோஷமான விஷயம் மூன்று 
ஒன்று, நமது நரேன் முழு சுற்றும் முடித்து இருக்கிறார் .
இரண்டு, போர்ஸ் இந்திய இந்த முறையும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது 
மூன்று முதலிடத்திர்க்கு உரிய ஆதிக்கம் தளர்ந்து இருக்கிறது 

Lewis Carl Hamilton

மெக்ளரனின்ஹேமில்டன் முதலிடம் பிடித்துள்ளார் .
ஒரு சிறந்த வெற்றி எப்போதும் மதிக்க படும் ஆனால் ஒருவரே அதன்மீது ஆதிக்கம் செலுத்தும்போது மற்றவர்களின் வளர்ச்சியில் நமக்கே நம்பிக்கை குறைந்து விட கூடாது என்பதே என் ஆர்வம் .
ஆனாலும் இந்த முறை வெட்டல்,வெப்பர் RBR-RENAULT அணிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் தேடி அல்ல, ஓட்டி சம்பாதித்து கொடுத்துள்ளார்கள் .
.
SHANGHAI, CHINA - APRIL 17:  Mark Webber of Australia and Red Bull Racing attends the drivers press conference following the Chinese Formula One Grand Prix at the Shanghai International Circuit on April 17, 2011 in Shanghai, China.

அதிலும் வெப்பர் 18 ஆம் இடத்திலிருந்து ஆரம்பித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது மிக அற்புதம் .இவர் இன்னும் பல அற்புதங்களை செய்வார் என நம்புவோம் .

சாங்காய் ஆடி இண்டர்நேசனல் சர்க்யூட் முடிவுகள் .
POS
NO
DRIVER
TEAM
LAPS
TIME/RETIRED
1
3
McLaren-Mercedes
56
Winner
2
1
RBR-Renault
56
+5.1 secs
3
2
RBR-Renault
56
+7.5 secs
4
4
McLaren-Mercedes
56
+10.0 secs
5
8
Mercedes
56
+13.4 secs
6
6
Ferrari
56
+15.8 secs
7
5
Ferrari
56
+30.6 secs
8
7
Mercedes
56
+31.0 secs
9
10
Renault
56
+57.4 secs
10
16
Sauber-Ferrari
56
+63.2 secs


நிறைய பேசிவிட்டோமோ ?
இல்லை நமக்கு சில அடிப்படை நுட்பங்களை கற்றுகொள்ளும் அவகாசம் தேவைப்படுகிறது .அதனால இரண்டு போட்டி முடிவுகளை ஒரே பதிவில் பேசிவிட்டோம் .

 Istanbul Park

அடுத்த ரேஸ் துருக்கியின் இஸ்தான் பார்க்கில் .
மிக அருமையான இடம் .
சில வேக இட வெளிக்கு அப்பால் நாம் சிந்திப்போம் அப்போது வரைக்கும் 


 இவருடன் பேசுவோம் .
ஆனால் எனக்கு இவரை தெரியாதே !.
அது கூட நல்லதுதான் .நிறைய பேச அதுதான் சௌகர்யம் .No comments: