உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, June 4, 2011

மூன்று மிக அழகான போட்டிகள்

பார்முலா 1ன், மூன்று மிக அழகான போட்டிகள் முடிந்தபின் தாமதமாக பேச வந்திருக்கிறேன் ...

பார்முலாவின் நான்காவது போட்டி துருக்கியின் இஸ்தான்புல் பார்க்கில் கடந்த மே மாதம் 8  ஆம்  தேதி உள்ளூர் நேரப்படி மூன்று மணிக்கு ஆரம்பித்தது. 



உலக வரலாற்றில் மூன்று பேரரசுகளின்( ரோம ,பைசண்டைன், ஓட்டோமான்) தலை நகரமாக இருந்த பெருமை இந்த ஊருக்கு உள்ளது .ஆசிய -ஐரோப்பா கண்டங்களின் பிரிக்கும் அழகிய இயற்கை துறைமுகம் கொண்ட
 பாரம்பரியத்திர்க்கு  பிரியமான நாடு .
சரி, நாம் இன்றைய போட்டிக்கு போவோம் .


இங்குள்ளஇஸ்தான்புல் பார்க்கின் களம்  கடந்த 2005 லிருந்து பயன்படுத்த பட்டு 
வருகிறது . 5.338 கி.மீ நீளமும் 58 சுற்றுகளையும் கொண்டது.

Juan Pablo Montoya Roldán

 2005 ல் இந்த களம் மிக அதிக வேகத்தில் கொலம்பியா நாயகன் ஜோன் பாப்லோவாள் (Juan Pablo Montoya) 1:24.770 நேரத்தில் மெக்ளரனின்-மேர்சீடிஸ் மூலம் கடந்து சாதித்தார்  .


சரி, நாம் இன்றைய போட்டிக்கு போவோம் .


கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியும் ரெட் புல் ரெனால்ட் அணிக்காகவும் ,செபாஸ்டின் வெட்டளுகாக என மந்திரித்துவிட்டது போல நடக்கிறது .ரசிகர்களை பொருத்தமட்டும் இது ஒருவிதத்தில் ஏமாற்றம் அளிக்கலாம் !.


ஆம் வெற்றி எப்போதும் திறமை வசம். Survival of The Fittest  என்பது  உலகின் பொய்யாகாத மொழி .ஆனால் பொது ரசிகர்களை பொருத்தமட்டும் இந்த தொடர் முடிவுகள் ஏமாற்றத்தின் இலக்கணமாக ஆகிவருகிறது, சற்று வருத்தம்தான் .




ஆனால், ரெட் புல் ரெனால்ட் அணியின் தொழில்நுட்ப எழுச்சியும் வேட்டலின் போர் குணமுமே இந்த தொடர் வெற்றியின் 
அச்சாணி .




  அதிலும் அதே அணியின் இரண்டாம் இடத்தை தக்க வைத்த  மார்க் வெப்பர்,தொ டர்ந்து  அணியின் ஒட்டு மொத்த புள்ளி ( Constructors points)  யையும் அள்ள காரணம் .



இந்த போட்டிதொடரில்  வெற்றியின் மந்திர சாவியை தொலைத்த, மிக பெரிய பெர்ராரி அணியின் அலோன்சா-ஐந்தாம் இடத்தில் களத்தில் தொடங்கி. மூன்றாம் இடம் வந்து, பெர்ராரிஅணி  பெருமையை தொடக்க புள்ளியாக்கினார்.


இந்த முறை புள்ளிபட்டியலை கொடுத்து சலிப்பு அடைய வேண்டாம் .
அப்படியானால் .
ஆம்.




 
மீண்டும் வேகமாக சந்திக்க ஆசை . 

No comments: