உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, June 4, 2011

எட்டமுடியாத தூரத்தை

பார்முலா1 ன் ஐந்தாவது போட்டி ஐரோப்பா கண்டத்தின் மிக அழகிய பார்த்து அனுபவிக்க வேண்டிய சுவர்க்க பூமி ஸ்பெயின் நாடு .


உலகின் மக்களால் அதிகம் பேசப்படும்(392 மில்லியன்) மொழிகளில்  நான்காவது இடத்தை தக்கவைத்துகொண்ட நாடு .



இங்குள்ள கடல்யுனியா சர்க்யுட் ! (circuit de catalunya) மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்டது .

மே மாதம் 22 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கியது 66 சுற்றுக்களையும் 4.655 கி .மீ நீளமுள்ள சர்க்யுட். இங்கு கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து 5 போட்டிகள் நடந்துள்ளது .


மிக அதிக வேகத்தில் இந்த சர்க்யூட்டை கடந்த பெருமை கொண்டவர் பின்லாந்தை சேர்ந்த கிமி ரேயகனான் (Kimi-Matias Räikkönen) 2008 ல் பெர்ராரி அணியிலிருந்து 1:21.670 நேரத்தில் கடந்து இதனை சாதித்து இருக்கிறார் .

இந்த போட்டியினை முதல் வரிசையில் தொடங்கியவர் ரெட் புல் ரெனால்டின்- மார்க் வெப்பர்.ஆனால் நான்காவது இடத்தை பிடித்தார் .


வழக்கம்போலே முதல் இடம் ஜெர்மானிய இளம் புயல் -செபாஸ்டியன் வெட்டல் முதல் இடம் .
ஆச்சர்யப்பட  பட ஒன்றுமில்லை !.
இரண்டாம் இடம் மெக்ளரனின்மெர்சிடீஸ்அணியின்  லீவிஸ் ஹெமில்டேன்.


மூன்றாம் இடம் அதே அணியின் ஜென்சென் பட்டன்.



போட்டியின் 48 ஆவது சுற்றில் லோட்டஸ் ரெனால்டின் கொவளைனேன் விபத்துக்கு உட்பட்டார் .
சில மாற்றங்கள் இருந்தாலும் முடிவுகளில் எட்டமுடியாத தூரத்தை ரெட் புல் ரெனால்டின் அணி சென்று கொண்டு இருப்பதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இவர்களின் புன்னகையை போல ...


அடுத்த வேகம், நடந்து முடிந்த மிக மோசமான விபத்துக்களை கொண்ட மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் பற்றி .






No comments: