உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, June 10, 2011

தகுதி சுற்றிலே சப்பர் (BMW Sauber) அணியின் செஜியோ பெர்ஷ் (Segio Perez) விபத்துக்குட்பட்டார் .ஆனால் அதிருஷ்டவசமாக காயம் மட்டுமே அடைந்தார் . அடுத்த கனடா ரேஸில் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது .


Sergio Perez's wrecked Sauber


என்ற வரிகளுடன் தொடர்புடைய 
செஜியோ பெர்ஷ் காரின் படம் இடம் பெறவில்லை .இதோ அதன் பரிதாப  நிலை .

Seb Vettel got a clean start while...

போட்டி ஆரம்பிக்கும்போதே 23 கார்கள்தான் .(
 
செஜியோ பெர்ஷ் இடம் பெறவில்லை)

மிக வலுவான துவக்கத்தில் தகுதி முதல் இரண்டு சுற்றில் முதலில் வந்த மெக்லரண் மெர்சீடிசின் ஹெமில்டேன் மூன்றாவது சுற்றில் இரு வளைவுகளை ஒரு சேர கடந்து -தண்டிக்க பட்டு,  ஒன்பதாம் இடத்தில் இருந்து போட்டி ஆரம்பித்தார் .ஆனால் ஆறாம் இடத்தினை தக்க வைத்தார் .

போட்டியின் 30 ஆவது சுற்றில் விர்ஜின் காஷ்வோர்த்தின்(Virgin cosworth)-டிமோ கிளாக் வலது 
ரியர் சஷ்பென்செர் பழுது அடைந்ததால் வெளியேறினார் .

அடுத்து நடுக்களத்தில் 32 ஆவது சுற்றில் மைக்கேல் சூமேகர் எஞ்சின் பழுதால் அவரும் அவசரமாக வெளியேறினார் .

Michael Schumacher 

அதே சுற்றில் போன ஸ்பானிஷ் ரேசில் 58 ஆவது (மொத்தம் 66 சுற்றுக்கள் )சுற்றில் கியர் பாக்ஸ் பிரச்சனையின் வெளியேறிய பெராரியின் பிலிப் மாசா ,இந்த முறை விபத்துக்கு உள்ளானார் .(அவர்தான் தொடக்கம்... )

Felipe Massa

ரேஸின் 66 ஆவது சுற்றில் டோரோ ரோசோ (Toro Rosso) அணியின் ஸ்பெயின் வீரர்( பெயரை 
மொழிபெயர்க்க வழிகொடுக்காத) Jaime Alquersurai வெளியேற ,

Jaime Alquersurai 

இதோ நானும் 
என்று அடுத்த சுற்றில் 
ரெனால்டின்அணியின் - விட்டலி பெட்ரோவ் விபத்தில் வெளியேறிவிட்டார் .

Vitaly Petrov 

இதோடு முடிந்துவிட்டது இனி Safety Car வராது என நினைக்கும்போது மீதம் ஐந்து சுற்றுக்கள் மீதம் இருக்கும்போது 

Pastor moldonado

வில்லியம்ஸ் அணியின் பாஸ்டர் மால்டோனடோ (Pastor moldonado) விபத்தை சந்தித்து தப்பினார்.   
 
ரேஸை 18 ஆவது காராக வந்து நிறைவு செய்தார் .

நமது நரேன்- இந்திய நம்பிக்கை ஒளி, 22 ஆம் இடத்தில் தொடங்கி 17 ஆம் இடத்தில் நிறைவு செய்தார் .
போர்ஸ் இந்தியாவின் ஆண்ட்ரியன் சட்டில் ஏழாம் இடத்தை பிடித்தது ஆறுதல்.முடிவு ?

18 கார்கள் மட்டுமே முழு சுற்றுக்களை முடித்தன என்பது சோகமே !

ஆனால்,இதெல்லாம் எனக்கு தெரியாது என்பது போல வெட்டல்,பட்டன்,வெப்பர்,அல்லோன்சா போட்டியை கலக்கி கொண்டு இருந்தார்கள்- முன்னணியில் 

FORMULA 1 GRAND PRIX DE MONACO 2011

ரெட் புள் ரெனால்டின் - செபாஸ்டியன் வெட்டல், முதலிடம் வந்து வெற்றியை முத்தம் செய்தார்.
ஒருவேளை 
அவருக்கு 143 புள்ளியை எட்டுவதற்கு காரணமாக இருந்தததால் முத்தமிடலாம் !இரண்டாம் இடத்தை பெராரியின்- பெர்னாண்டோ ஆலோன்சாவும் தக்க வைத்தார் .
மூன்றாம் இடம் மெக்ளரனின் ஜென்சன் பட்டன் பிடித்தார் .ஆறு போட்டிகள் முடிந்த நிலையில் முடிவுகள் அறிந்து கொள்வோமா ? 

2011 டிரைவர்ஸ்

01Sebastian Vettel143
02Lewis Hamilton85
03Mark Webber79
04Jenson Button76
05Fernando Alonso69
06Nick Heidfeld29
07Nico Rosberg26
08Felipe Massa24
09Vitaly Petrov21
10Kamui Kobayashi19
11Michael Schumacher14
12Adrian Sutil8
13Sebastien Buemi7
14Rubens Barrichello2
15Sergio Perez2
16Paul di Resta2
17Jaime Alguersuari0
18Jarno Trulli0
19Heikki Kovalainen0
20Jerome d'Ambrosio0
21Pastor Maldonado0
22Timo Glock0
23Vitantonio Liuzzi0
24Narain Karthikeyan0
கடைசியாக இந்த ரேஸின் முதல் பகுதியில் வழக்கம்போலே முடிவில் வெளிவந்த படத்திற்கு ஒரு ஆதாரபூர்வ தொடர்பு பேசினோமே அது பற்றி ஒரு சின்ன தகவல் .!!
நம் மொனாக்கோ நாட்டினை ஆண்ட மன்னர் ரெய்நியர் (Rainier III ) கட்டை   பிரம்மச்சாரி .
Rainier III 
தன் நாட்டின் பாதுகாப்புக்காக பிரான்சை நாடியபோது அவர்கள் போட்ட ஒப்பந்தம் விநோதமாக இருந்தது .
1. மொனோக்கோ சுதந்திரத்தை தரவேண்டும் அல்லது 
2.மன்னர் இதே நிலையில் வாரிசு இல்லாமல் இறந்தால் அப்போது நாடு பிரான்சுக்கு சொந்தமாகிவிடும் .
ரெய்நியர் யோசித்தார். தன் சுதந்திரம் பறிபோனாலும் பரவாயில்லை என பெண் தேடினார்.

Grace Kelly
அமெரிக்காவின் கிரேஸ்கெல்லி என்ற கனவுகன்னியை திருமணித்தார். கிரேஸ்கெல்லி நடித்த பல படங்களில் ஒன்று  
To Catch a Thief.
 அப்புறம் வாரிசு...மக்கள் சந்தோசம் என மங்கலம்.

விஷயம் இதோடு நிற்கவில்லை ..

அந்த நாட்டின் இன்றைய இளவரசர் ஆல்பெர்ட் ( Prince Albert)சவுத் ஆப்ரிக்காவின் 33 மூன்று வயதுடைய நீச்சல் வீராங்கனை விட்ஸ்டாக்கை (Charlene Wittstock) தன்னுடைய 53 ஆவது வயதில் வரும் ஜூலை மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதியில் திருமணம் செய்ய இருக்கிறார் .இளவரசர் கல்யாணம் சொல்ல வேண்டுமா ?


வரும் 12 ஆம் தேதியில் நடக்கும் கனடா ரேஸ் முடிந்த பிறகு நாம் கூட ஒரு எட்டு போய் வரலாமே .!

1 comment:

Sugumarje said...

நல்ல தொகுப்பு :)