உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, October 28, 2011

இரண்டாவது தீபாவளி.


.இன்னொரு தீபாவளியை கொண்டாட இந்தியஃபார்முலா 1 தயாராகி வருகிறார்கள் அதுவும் இந்தியஃபார்முலா 1 ரசிகர்களுக்கு தலைதீபாவளி..

இந்திய தலை நகரம் டெல்லியின் இந்த இலையுதிர் காலத்தை பார்முலா பார்ட்டிகள் மூலம் வசந்த காலமாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது .மொத்த உலக ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு ஏற்பாடுகள் மிக பிரமாதமாக அமைந்து விட்டது.


இந்த இடத்தில் என் வலைப்பூக்கென நான் வைத்திருக்கும் எழுதும் சில முறைகளை மெல்ல விலக்கிவிட்டு எழுத ஆசைப்படுகிறேன் .





இந்திய நேரம் 10 மணி முதல் 11.30 வரை நடந்த பயிற்சி போட்டி முடிவுகள் வெளியாகி விட்டது .என்னுடைய இருபது வருட கனவின் அல்லது வெறித்தனமான ஆசையின் அற்புதத்தை தரிசிக்கிறேன் .உலகின் அத்தனை சாம்பியன்களும் இன்று இப்போது இந்திய "புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்" களத்தில் .


நிலவை நேரில் தரிசித்தாவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் நான் தூரத்தில் இருந்து ரசிக்கிறேன் .நேரில் போட்டிகளை ரசிக்கும் வாய்ப்பு மற்றும் வசதி எனக்கு வாய்க்கவில்லை ஆனால் இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொரு உலக சாம்பியனின் மூச்சு காற்றின் அனுபவத்தை உணர்கிறேன் .


அடுத்து வரும் சந்ததியினருக்கு அவர்களின் விதை இந்திய களத்தில் லட்ச கணக்கில் விதைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு விதையும் எத்தனை விருட்சங்களை உருவாக்க போகிறது என்பது காலம்தான் முடிவு செய்யும் .

என் போல இந்திய மண்ணில் பார்முலா 1 போட்டிகள் வரவேண்டும் என் விரும்பிய இந்த நேரம் மிக பல விசித்திர உணர்வுகளை ரசிக்கவைக்கும் .

இந்திய மண்ணில் பயிற்சி போட்டியின் முதல் வேக பதிவை ,செய்தவர் .அடுத்த இங்கிலாந்தின் ஜேம்ஸ் பாண்டாக ஆசைப்படும் மெக்லரண் மெர்சீடிசின் லீவிஸ் ஹேமில்டன்.



இந்திய போட்டிகளைபற்றி -இந்த வாழ்வின் மறக்கமுடியாத தருணத்தை கொட்டி தீர்க்க இன்னும் என் வேகம் வரும் ...

இன்று மாலை கூட !






1 comment:

Sugumarje said...

//அடுத்து வரும் சந்ததியினருக்கு அவர்களின் விதை இந்திய களத்தில் லட்ச கணக்கில் விதைக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு விதையும் எத்தனை விருட்சங்களை உருவாக்க போகிறது என்பது காலம்தான் முடிவு செய்யும்//
அருமை...
இதெல்லாம் இந்தியாவில்? அப்படி நினைத்தகாலம், நம்மை பொய்யாக்கிவிட்டதே... சில ஆண்டுகளில் :D