உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Wednesday, November 30, 2011

பார்முலா 1 போட்டிக்கு வழியனுப்புகிறது பிரேசில்

Good buy F1



உலகின் மிகப்பெரிய நாடுகளின் வரிசையில் ஐந்தாம் இடமிருக்கும் தென் அமெரிக்காவின் மக்கள் தொகையில் மிக பெரிய ( 192 மில்லியன் ) கொண்ட நாடு பிரேசில் .அட்லாண்டிக் கடலின் சுமார் 7491 கி.மீ கடலோர பகுதியை தன்னகத்தே கொண்டுள்ளது .


உலகின் கால்பந்து வரலாற்றின் முக்கிய பக்கங்களால் நிரப்ப பட்டு இருக்கும் திரு .பீலே ( Edson Arantes do Nascimento )அவரின பிறப்பிடமான பிரேசில் கூட்டாட்சி குடியரசின் - Autódromo José Carlos Pace களத்தில் நம் பார்முலா 1 போட்டியின் 19 ஆவது போட்டியும் இந்த ஆண்டின் கடைசி போட்டியும் கடந்த ஞாயிறு 27-11-2011 அன்று நடந்தது .

களம் .




தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தை வடிவத்திலிருக்கும் கள அமைப்பு பிரேசிலுக்கு உரியது . மறுசீரைமைப்புக்கு பின் இன்றுடன் பனிரெண்டாவது ரேஸ் இன்று நடக்க இருக்கிறது .

களத்தின் பெயர்


இந்த களத்தின் பெயர் முந்தய பிரேசில் டிரைவர் .Autódromo José Carlos Pace பெயரில் அழைக்க படுகிறது 1972 - 1977 வரையிலும் பார்முலா 1 போட்டிகளில் பங்கு கொண்டு இருந்தவர் 1977 ஆம் ஆண்டில் Brabham-Alfa Romeo அணிக்காக கலந்து கொண்டுஇருந்தார் .அப்போது ஒரு சிறிய ரக விமான பயணத்தில் மோசமான விபத்தில் கொல்லப்பட்டார் .அப்போது அவரின வயது 32.



இந்த களம் 4.309 கி.மீ நீளம் கொண்டது .71 சுற்றுக்களையும,15 வளைவுகளையும் கொண்டது .
இந்த களத்தின் வேக பதிவு வில்லியம்ஸ் பி.எம்.டபிள்யூ அணியின் Juan Pablo Montoya,1:11.473 நிமிடத்தில் கடந்ததே ஆகும் .

போட்டியை பார்ப்போமா?


இந்திய நேரப்படி இரவு 9 :30 க்கு போட்டி ஆரம்பமானது .


வீரர்களின் அணி வகுப்பு ...

தகுதி சுற்றில் இந்த முறை ரெட்புல்லின் ஆதிக்கம் மிகவே இருந்தது .

முதல் இடத்தில்- செபாஸ்டியன் வெட்டல் .
இரண்டாம் இடம்- மார்க் வெப்பர் .
மூன்றில் - ஜென்சன் பட்டன்
நான்கு - லீவிஸ் ஹேமில்டன் .
ஐந்தில் - பெர்னாண்டோ அலோன்சா .
ஆறில் - நிக்கோ ரோஷ்பெர்க்
ஏழு - பிலிப் மாசா .
எட்டு -ஆண்ட்ரியன் சட்டில்
ஒன்பது - புருனே சென்னா
பத்தில் - மைகேல் ஷூமேக்கர்



முதல் சுற்று ...


வழக்கம்போல ரெட் புல்லின் மின்னல் வேக பாய்ச்சலில் செபாஸ்டியன் வெட்டல் பாய்ந்து முன் செல்ல அடுத்த நிலையில் இருந்த வெப்பர் அவரை தொடர்ந்தார் .
அடுத்த வரிசையில் மெக்ளரனின் ஜென்சன் பட்டனும் ,ஹெமில்டனும் தொடர முயற்சிக்கும்போது இருவருக்கும் இடையில் பெர்ரரியின் அலோன்சா இடம்பிடித்தார் .அடுத்து மாசா,ரோஷ்பர்க், ஆண்ட்ரியன் சாட்டில் ,புருனே சென்னா,பத்தாம் இடத்திலிருந்த மைக்கேல் சூமேக்கரை பால்டி ரெஸ்டா பின்னுக்கு தள்ளி பத்தாம் இடத்தில் தொடர்ந்தார்

இரண்டாம் சுற்று ....
இப்போது பாடி ரெஸ்டாவின் பத்தாம் இடத்தை மீண்டும் சூமேக்கர் தக்க வைத்துகொண்டார் .


மூன்றாம் சுற்று ...
DRS தொழில் நுட்பம் அனுமதிக்கப்பட்டது .ஒரு வினாடி இடைவெளியில் தொடர்ந்து கொண்டு இருந்த அத்தனை கார்களும் இறக்கை முளைத்த குதிரைகளாய் பறக்க பின் வரிசையில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தது .

ஏழாம் சுற்று ...
ஒன்பதாம் இடத்து சொந்த மண்ணில் சென்னாவை ஜெர்மன் புயல் சூமேக்கர் நெருக்கடி கொடுத்ததில் ஏதோ நிகழப்போவதாக கேமிராவின் கண்ணுக்கு உள்ளுணர்வு சொல்ல ..
எட்டாம் சுற்று..
சென்னா - சூமேக்கர் துரத்தல் வேட்டை தொடர ..
ஒன்பதாம் சுற்று ...
சென்னா - சூமேக்கர் மில்லி வினாடிகளில் இடைவெளி தொடர ..


பத்தாம் சுற்று ...
நடந்து விட்டது .வளைவில் சூமேக்கர் முந்த அவரை சென்னா முதல் மோதலை நடத்த ,அடுத்து மீண்டும் சூமேக்கரின் இடது பின் சக்கரத்தில் மோதி பஞ்சர் செய்தார் ...
கேமிராவின் உள்ளுணர்வு ஜெயித்தது .
சூமேக்கர் டயரை மாற்றி மோசமாக இருபத்திநாலாம் இடத்தில் தொடர ...
விஷயம் விசாரணைக்கு போனது .

பதினோராம் சுற்று ...
நான்காம் இடத்திலுருந்த அலோன்சா மிக சாதுர்யமாக பட்டனை ஆறாம் வளைவில் பின்னுக்கு தள்ளினார் .

பதினைந்தாம் சுற்று ...
வெட்டல் தன்னுடைய காரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கியர்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக அணியின் என்ஜீனியர்களுக்கு தெரிவிக்க ..


பதினெட்டாம் சுற்று ...
வெட்டல் தன்னுடைய கியர் பாக்ஸ் பிரச்சனையுடன் டயர் மாற்ற வர ,அணியின் கியர் வல்லுனர்கள் தீவிர ஆய்வில் எப்படி, எதிர்கொள்வது என குழப்பத்தில் இருக்க ,

பத்தொன்பதாம் சுற்று ...
வெப்பர் தன்னுடைய கார்- டயர் மாற்ற வந்தார் .

இருபத்தி ஒன்றாம் சுற்று ...


விர்ஜின் காஷ்வோர்த் அணியின் டிமோ கிலோக் டயர் மாற்றிவிட்டு கிளம்ப , இடது பின் பகுதியில் துரதிருஷ்டவசமாக டயர் வீல்நட் இரண்டும் பொறுத்தப்படவில்லை .அதனால் வண்டி நூறு அடி கடக்கும் முன் அந்த டயர் பரந்து இந்த வண்டி எனக்கு பிடிக்கவில்லை என்பது போல வண்டிக்கு மேல்பறந்து வலது புற பிட் லேன் சுவரில் மோதி தான் கோபத்தை உணர்த்தியது .டிமோ கிலோக் போட்டி முடிவுக்கு வந்து விட்டது .

இருபத்தி ஆறாம் சுற்று ...
வெட்டலின் கியர் பாக்ஸ் தகராறு மிகவும் கவனிக்க பட்டாலும் சீரமைக்க முடியாமல் தொடர ,அதே சமயம் போட்டியையே தொடர முடியாமல் வில்லியம் காஷ்வோர்த் அணயின் பாஸ்டர் மால்டோநாடோ கார் ஸ்பின் ஆகி போட்டியிலிருந்து வெளியேறினார் .

இருபத்தி ஏழாம் சுற்று ...
கேமிராவின் பார்வை இரண்டாம் வளைவில் நிலைக்க ,அங்கு புருனே சென்னாவின் காரின் உடைந்த முன்பகுதி கவனிப்பாரற்று எந்த டயரை பாதிக்கலாம் என காத்து கிடந்ததை ஏன் கள நிர்வாகிகள் நீக்க முயசிக்கவில்லை என்ற விஷயம் உலகின் பல பில்லியன் தொலைகாட்சி பார்வையாளர்களை பாதித்து இருக்கும் .

முப்பதாவது சுற்று..


வெட்டலின் உள்முக யுத்தத்தை உணர்ந்த அணி நிர்வாகம் அவரை பின்னால் வரும் வெப்பருக்கு வழிவிட பணித்தது .இப்போது வெப்பர் ரேஸ் லீடர் .

முப்பத்தி இரண்டாவது சுற்று ...
மெக்லரண் அணி ஒரு தந்திரத்தை எடுத்து நான்காம் இடத்தில் இருந்த ஜென்சனை இன்டர் மீடியேட் டயர் மாற்ற வைத்தது .இது நான்காம் இடத்து மாசாவை சாய்க்க என்பது எந்த அளவுக்கு ஜெயிக்கும் என பார்க்க வைத்தது .இதர்க்கு இன்னொரு காரணம் மழை எதிர்பார்க்கப்பட்டது .

முப்பத்தி ஏழாவது சுற்று...
லோட்டஸ் ரெனால்டின் ஜர்னோ ட்ரூலி காரின் பிரண்ட் விங்கிள் ஒரு பாலிபேக் போன்ற வஸ்து சிக்கி கொண்டு நானும் ரேசுக்கு போறேன் என்று காரோடு பயணிக்க தொடங்கியது .இது அந்த காரின் ட்ராக் ரிடக்சன் நுட்பத்தை பாதிக்கலாம் என அச்சம் எழுந்தது .

முப்பத்தி ஒன்பது ...
பட்டனின் புதிய டயரும் ,மெக்லரன் அணியின் தொழில் நுட்ப முன்னேற்றமும் கைகொடுக்க மாசவின் நான்காம் இடத்து பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்தது .
 அதே அணியின் ஹெமில்டனின் காரில் கியர் பாக்சில் பிரச்சனை ..


நாற்ப்பத்தி ஆறு ...
2008 ஆண்டின் பார்முலா 1 சாம்பியன் லீவிஸ் ஹேமில்டன் கியர் பாக்ஸ் முற்றிலுமாக பாதிக்க நடு களத்தில் சர சர வென குறைந்து கார் ஓரமாக ஒதுங்கியது .அவரின பயணம் காரின் ஒத்துழைப்பு இல்லாமல் முடிந்தது .

ஐம்பத்தி ஒன்று ...
ஏழாம் இடத்திலிருந்த ஆண்ட்ரியன் சட்டில், ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ள ..

வெப்பர் - வெட்டலின் இடைவெளி 6.396 வினாடிகளாய் உயர்ந்தது ..

அறுபத்தி ஒன்று ...
ஹிஷ்பானியா அணியின் விடன்ட்டனியோ ல்யூசி கார் ஆல்டர் நேட்டார் (போன ரேசில் இதே அணியின் டேனியலுக்கு ) இயக்க மறுப்பு ஏற்பட போட்டிக்கு விடை கொடுத்தார் .டேனியல் ரிக்கர்டியோ வரவினால் இந்த அணிக்கு ரெட்புல் ரெனால்டின் பணம் மட்டுமே கை மாறி இருக்கிறது .ஆனால் தொழில்நுட்ப குறைபாடு நீக்கும் உதவி அந்த அணியின் வாசலுக்கு வரவில்லை ரெட்புல் அணியிடமிருந்து !
களத்தின் ஓரத்தில் மிக சோகமாக புல் தரையில் உட்கார்ந்து இருந்தது  இத்தாலிய மக்களுக்கு தன் மன்னிப்பை கோருவது போல இருந்தது .

அறுபத்தி இரண்டு ....
ஒரு தீப்பிடிக்கும் தீவிரம் ஜென்சன் பட்டனின் காரை செலுத்தும் முறையில் இருந்தது .
அந்த வேகம் மூன்றாம் இடத்து பெர்ரரியின் அலோன்சாவை பின்னுக்கு தள்ளியது .

அறுபத்தி மூன்று ...
வெட்டல் மன அளவில் சிறு பாதிப்பு தெரிந்தது .கார் களத்தின் பாதை விட்டு விலகி மீண்டும் சரியானது .அவருக்கும் வெப்பருக்கும் இடைவெளி தீராத நோய் போல அதிகரித்து கொண்டே சென்றாலும் இந்த இருவரையும் விட ஜென்சன் பட்டன் மிக பின்தங்கியே தொடர்ந்து கொண்டு இருந்தார் .

அறுபத்தி எழு ...
வெட்டல் - வெப்பர் 13.752 வினாடிகள் இடைவெளி .

எழுபத்தி ஒன்றாம் கடைசி சுற்று ...
வழக்கம் போல அணியின் வேண்டுகோளை நிராகரித்து , தன்னுடைய அதிவேக சுற்றை 1:15.324 வினாடிகளில் வெற்றியை கவர்ந்தார் .

முதல் இடம் ...


இந்த ஆண்டில் 258 புள்ளிகளை பெற்றாலும் இந்த முறை மட்டுமே அவர் முதலிடத்தில் வந்து தன்னுடைய ஒன்பது மாத இந்த ஆண்டின் கனவை நிரூபித்து காட்டினார் .வெட்டலின் கார் இந்த வெற்றியை பெற உதவியது என்று சொல்லலாமா ?
ஆனால் வெற்றி - வெற்றிதான் .தனிப்பட்ட புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடம் வெப்பர் என்பதும் முக்கியமான விஷயம் .

இரண்டாம் இடம் .




இந்த ஆண்டில் வெட்டல் எடுத்த புள்ளிகள் 392 .மிக அற்புதமான ஆண்டாக செபாஸ்டியன் வெட்டளுக்கு அமைந்து விட்டது .

மூன்றாம் இடம் .



மெக்ளரனின் ஜென்சன் பட்டன் .இவரின் மொத்த புள்ளிகள் 270 .டிரைவர்களின் தர வரிசையில் இரண்டாம் இடம் .


நான்காம் இடம் .
பெர்ரரியின் அலோன்சா .இவரின் மொத்த புள்ளி வேப்பரை விடவும் ஒன்று மட்டுமே குறைவு -257 . எனவே இவர் நான்காம் இடம் .


ஐந்தாவது இடம் 
பிலிப் மாசா .மொத்தபுள்ளிகள் 118 .ஆறாம் இடத்தில் இருக்கிறார் .இதுமட்டுமல்ல இந்த பிரேசில் மண்ணுக்கு சொந்தக்காரர் .


ஆறாம் இடம் போர்ஸ் இந்திய மரியாதையை கூட்டிய ஆண்ட்ரியன் சட்டில் .இவரின் மொத்தபுள்ளி 42 .மொத்த தரவரிசையில் ஒன்பதாம் இடம் .

ஏழாம் இடம் .
இன்னொரு அருமையான ஜெர்மனியின் நட்சத்திரம் .நிகோ ரோஷ்பர்க் .89 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் இருக்கிறார் .


எட்டாம் இடம்.
போர்ஸ் இந்திய அணியின் - பால் டி ரெஷ்டா .


ஒன்பதாம் இடம் .
சப்பர் பெர்ரரியின் கொமுய் கோபயாஷி .


பத்தாம் இடம் .
விட்டலி பெட்ரோவ் .ரஷ்யர் .37 புள்ளிகளை பெற்ற இவர் இன்னும் சரியான அணியில் வாய்ப்பு பெற்றால் ஜொலிப்பார் .இவர்தான் தரவரிசையில் பத்து.

vladimir putin
(இன்றைய தேதியில் அறிவிக்க பட்ட அடுத்த 2012 ஆண்டுக்கு ரஷ்ய அதிபர் பதவிக்கு போட்டியிடும் விளாதிமிர் புடின் இவருக்கு போட்டியாக களத்தில் இருக்கலாம் .அவர் மிக பெரிய ரேஸ் விரும்பி )


அணிகளின் மொத்த புள்ளி பட்டியல்


இந்த ஆண்டின் போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அணிகளின் புள்ளி பட்டியலை பார்ப்போமா ?


CONSTRUCTOR STANDINGS


RBR-Renault           650






McLaren-Mercedes   497




Ferrari                   375






Mercedes                   165






Renault                     73






Force India-Mercedes 69






Sauber-Ferrari            44






STR-Ferrari            41






Williams-Cosworth    5






Lotus-Renault             0








HRT-Cosworth    0






Virgin-Cosworth    0








டிரைவர்களின் மொத்த புள்ளி பட்டியல் 



01 Sebastian Vettel          392
02 Jenson Button       270
03 Mark Webber       258
04 Fernando Alonso        257
05 Lewis Hamilton       227
06 Felipe Massa       118
07 Nico Rosberg        89
08 Michael Schumacher   76
09 Adrian Sutil                42
10 Vitaly Petrov       37
11 Nick Heidfeld       34
12 Kamui Kobayashi      30
13 Paul di Resta       27
14 Jaime Alguersuari      26
15 Sebastien Buemi       15
16 Sergio Perez      14
17 Rubens Barrichello     4
18 Bruno Senna        2
19 Pastor Maldonado      1
20 Pedro de la Rosa        0
21 Jarno Trulli                0
22 Heikki Kovalainen      0
23 Vitantonio Liuzzi         0
24 Jerome d'Ambrosio    0
25 Timo Glock                0
26 Narain Karthikeyan    0
27 Daniel Ricciardo        0
28 Karun Chandhok       0



லோட்டஸ் - ரெனால்ட் அணி அருமையான பல மாற்றங்களை அடுத்த ஆண்டு போட்டிகளில் களமிறக்கும் என்பது தெரிகிறது .





பெண் வீராங்கனை .






 ஒன்று ஸ்பானிஷ் நாட்டின் வீராங்கனை மரியா டீ வில்லோட (Maria de Villota ) லோட்டஸ் அணிக்கான வெள்ளிகிழமை நடக்கும் பயிற்சி போட்டி மற்றும் மாற்று டிரைவராக களம் இறங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் .
முப்பத்தி ஒரு வயதான இவரின் கார் ரேஸ் பயணம் நீண்டது .சுமார் பத்து ஆண்டுகள் சாதிக்கும் எண்ணத்தோடு காத்து இருக்கிறார் .இவரின் மோட்டார் பயணம் தந்தை வழி சொத்து .ஆம் இவரின் தந்தை Emilio de Villota அவரும் பார்முலா 1 டிரைவர்தான் .

2012 ஆம் ஆண்டுக்கான போட்டி அட்டவணை 


ஹை ஸ்பீட் டிராமா எனப்படும் பார்முலா 1 போட்டிகள் இந்த ஆண்டில் இத்துடன் நிறைவு பெறுகிறது .மீண்டும் வழக்கம் போல ஆஸ்த்ரேலியாவில் தொடங்கி பிரேசிலில் முடிந்தாலும் ,துருக்கி நீக்கப்பட்டு பக்ரைன் போட்டியும் ,சிங்கபூர் போட்டி நீக்கப்பட்டு ஜப்பானிலும் இந்த ஆண்டில் அமெரிக்காவின் மலை சூழ்ந்த அழகிய ஆஸ்டினில் நடக்க இருக்கிறது .


இன்றைய பிறந்த தினம் 




 இன்று இரண்டு பார்முலா 1 டிரைவர்கள் பிறந்த தினம் .



 இத்தாலியின் -Prince Gaetano Starrabba di Giardinelli .அவருக்கு 79 ஆவது பிறந்த தினம் .

மற்றொருவர்.



அர்ஜென்டினாவின் - Roberto மிரேஸ் அவரின 87 ஆவது பிறந்த தினம் .



விடை பெரும் விசேஷம் ....




எனவே இந்த பதிவு 2011 பார்முலா 1 தொடர் போட்டிகள் முடிவடைகிறது ..கடந்த பிரேசில் போட்டியில் அந்த நாட்டின் ரூபன் பெரிகொலோவுக்கு அவர் மனைவி- சில்வான பெரிகொலோ வழியனுப்பியவிதம், நமக்கும் என்பது போல இருக்கிறதா ?

அது அவருக்கு மட்டும்தான் .


 தொடரும் ....





இனி நாம் வ்வ்வ்வர்ர்ரூம்  கேட்க போவதில்லை .ஆனால் ஸுர்ர்ர்ரூம்  பதிவுகள் தொடரும் ....







1 comment:

Sugumarje said...

மிக அருமை, நேரில் காண்பதி போலான விவரங்கள்... இடையில் நிறுத்தங்கள் இல்லாத வாசிப்பை தருகிறது...

மீண்டும் அடுத்த வேகப்போட்டிக்கு காத்திருப்போம்...

இந்தியாவுக்கான இடம் இனிவரும் காலங்களில் முன்னாடி கிடைக்கும் போலிருக்கிறது, இந்திய ஓட்டுனர்கள் இல்லாமல் :)

வாழ்த்துகள்