உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, February 25, 2012

பார்முலாவின் உற்சாக பானம் - ரெட்புல் ரெனால்ட்


 பார்முலா 1 உலகம் உற்று நோக்கும் அணிகளில் முக்கியமான அணியான ரெட்புல் ரெனால்ட் அணி தன்னுடைய RB8 கடந்த 06 - 02- 2012 அன்று உலகின் கண்ணுக்கு காட்டியது .அற்புதமான மாற்றங்கள் செய்துள்ளார்கள் .அதிலும் 2005 ஆம் ஆண்டு கிளம்பிய ரெட்புல் அணி இன்று எட்டு ஆண்டுகளில் மிக பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறது .


வெற்றியின் விதி



எப்போதும் ஒரு அபத்தம் சகல வெற்றிக்கும் பின்னால் நிகழ்ந்து கொண்டிருக்கிறது .அதாவது வெற்றி பெற்றவனிடம் இருந்து கற்றுக்கொள்ள முயல்வது .எதை கற்று கொண்டு அவன் வெற்றிபெற்றான் என்பது மறந்து போகிறது .இங்கு ரெட்புல் அணி விசயத்திலும் அதுதான் நிகழ்ந்துள்ளது .

ரெட்புல்லின் வரலாறு 





பறக்கும் ஸ்காட்ஸ் மேன் ( The Flying Scotsman ) என செல்லமாக அழைக்கப்படும் -  Jackie Stewart அவரால் உருவாகப்பட்டது .அதன் பயண காலம் 1997 - 1999 வரைதான் அதன் பிறகு அந்த அணியை வாங்கிய போர்ட் மோட்டார் கம்பனி அதன் பெயரை ஜாகுவார் ரேசிங் என்று மாற்றி 2000 - 2004 ஆம் ஆண்டு வரை பயணத்தை தொடர்ந்தது .அதுவும் 2004 நவம்பர் 14 ஆம் தேதிவரை மட்டுமே நீடித்தது .அப்போது ஆஸ்டிரியன் நாட்டை சேர்ந்த ரெட்புல் -Red Bull GmbH, ஆற்றல் பானம் தயாரிக்கும் நிறுவனம் சப்பர் பார்முலா 1 அணியுடன் கைகோர்த்து இளம் ஓட்டுனர்களை உருவாக்கி வந்தது .அதன் உரிமையாளர் - Dietrich Mateschitz  க்கு அப்போது ரெட்புல் சேஷும் ( Chassis )+ காஷ்வோர்த் என்ஜினுடன் 2005 களம் இறங்கியது ஆனால் அடுத்த ஆண்டு அதே ரெட்புல் சேஷும் + பெர்ராரி என்ஜினை பயன்படுத்தினார்கள் .உண்மையில் ரெட்புல் ரெனால்ட் வெற்றி சுய சரிதம் துவங்கியது 2007 ல் தான் .ஆம்.அப்போது  இருந்துதான்.

ஓட்டுனர்கள்




ரெட்புல் அணி ரெனால்ட் என்ஜினுடன் கைகோர்த்தது .முதல் ஆண்டு 2007 ஆம் ஆண்டு 24 புள்ளிகளுடன் ஐந்தாம் இடமும் ,2008 ல் 29 புள்ளிகள் -ஏழாம் இடம் .அதுவரை

 மார்க் வெப்பரும் ,டேவிட் குல்தார்டும் டிரைவர்களாக இருந்தனர் .2009 ல் மார்க் வெப்பருடன் டோரோ ரோசோ -பெர்ரரியில் இருந்த செபாஸ்டியன் வெட்டல் இளம்ஜெர்மன் வீரர் களம் இறங்கினார் .பொதுவாகவே ஜெர்மன் டிரைவர்கள் சிறந்தவர்கள் என்ற பெருமையை ஷூமேக்கர் பதிவு செய்து இருந்தார் .அது வீணாகவில்லை .


 முதல் போட்டியில் (ஆனால் அவருக்கு இரண்டாம் ஆண்டு ) அணியின் மொத்த புள்ளி 153.5 இரண்டாம் இடம் .அதில் வெட்டலின் புள்ளிகள்- 84 .கலந்து கொண்ட வீரர்களில் இரண்டாம் இடம் .அடுத்த 2010 - 2011 ரெட்புல் -ரெனால்டின் பொற்காலம் ,உருவாக்குனர் மற்றும் ஓட்டுனருக்கான முதல் இடம் .

அப்படிப்பட்ட அணியின் கார் இந்த ஆண்டுக்கான வெளியீடு முக்கியம்தான் .ஆனால் ரெட்புல் ரெனால்டின் முக்கிய வளர்ச்சி அதன் தொழில் நுட்ப விழிப்பில் உள்ளது என்பதை அதர்க்கு முந்திய பெர்ரரியால் கூட
Christian Horner 

புரிந்துகொள்ள முடியவில்லை .ஆனால் அந்த அணியின் பிரின்சிபல் - Christian Horner மற்றும் அதன் முதன்மை தொழில்நுட்ப தலைவர் - Adrian Newey ஆகியோர் நன்கு புரிந்து வைத்து இருந்தனர் .Federation Internationale de l'Automobile லின் புதிய விதிகளை நன்கு பயன் படுத்திக்கொண்டனர் .அதுவே பார்முலா அணிகள் ரெட்புல் ரெனால்ட் அணியிடம் மற்ற அணிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் .

இந்த காரின் புதிய வடிவங்கள் .

 தோற்றத்தில் மிக நுணுக்கமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது .ஆனால் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பொருட்டு ,எந்த பெரிய மாற்றமும் இல்லை .ஆனால் புதிய நோஸ் கோன் விதி பின்பற்றல் படி நோஸ் கோன் மேல்பகுதியில் ஒரு துளையும் கீழ்பகுதியில் ஒரு துளையும் வித்தியாசமாக தெரிகிறது .  அதோடு முன் பகுதி விங்கிள் (  front wing ) மேல்பகுதியில் புதிய தகடு ( Plate ) சேர்க்கப்பட்டுள்ளது .அப்புறம் அதில் சிறு பகுதி நீக்கப்பட்டுள்ளது மேலும் Sidepods ,Roll hoop,Exhaust , Rear suspension மாற்றங்கள் தொடர்கிறது .
 மொத்தத்தில் பல அழகு செதுக்களுடனும் வெளிவந்து இருக்கிறது .



காரின் அழகு மட்டுமல்ல தொழில்நுட்ப மேன்மையும் வளர்ந்து இருப்பது இந்த சிரிப்பில் தெரிகிறது .இந்த ஆண்டும் ரெட்புல்லின் ரெனால்ட் கொடிதான் பறக்க போகிறதா அல்லது வேறு அணிகள் சவாலை சந்திக்கும் திட்டம் இருக்கிறதா பொறுத்திருப்போம் .












1 comment:

Sugumarje said...

அருமை... நல்ல தேடலில் இருந்து கிடைத்த பழரசம்... தொடர்க...