உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, March 17, 2012

பார்முலாவின் முதல் வெப்பம்...



பார்முலா 1 போட்டிகளின் வ்வர்ர்ர்ரூம் சத்தமும் ,கார்களின் டயர்களின் உராய்வின் வெப்பமும் ,பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து கன்னத்தில் கை வைத்துகொண்டு டென்சனுடன் போட்டியை உற்று பார்த்துகொண்டு இருக்கும், அணி முதலீட்டார்களையும், நேரில் பார்க்க நுழைவு சீட்டுக்காக  காத்து இருக்கும் ரசிகர்களுக்கும்,நான்விரும்பும் டிரைவரின் போடியம் ஜம்பை பார்க்க காத்து இருக்கும் பிரியர்களுக்கும்  ,நான் ,நீ என போட்டி போட்டுகொண்டு பந்தய களத்திற்குள்  உலா வரும் ஒய்யார பதுமைகளின் உலாவல்களை ரசிக்கும் ஆர்வலர்களுக்கும் ,பெட்டிங் முறையில் அணிகளை ஏலம் விடும் ஏஜண்டுகளுக்கும்,  இந்த போட்டியில் என்ன நடக்கும் இதை எப்படி வழங்குவது என தீவிர காய்ச்சலை தேடிக்கொள்ளும் செய்தியாளர்களுக்கும் , தொலைக்காட்சி நிலையத்திற்கும் மற்றும் என் போன்ற வலைப்பூ பதிவர்களுக்கும் - இந்த மார்ச் பதினாறாம் நாள் முதல் ஒரு வித உற்சாகம் கலந்த டென்சன் தொற்றிக்கொள்ள தொடங்கிவிட்டது ....



 இதோ போட்டிகளுக்கான பயிற்சி போட்டி கடந்த வெள்ளிகிழமை 16 - 03- 2012 ல் துவங்கிவிட்டது .பயிற்சி  போட்டி ஞாயிறு நடக்கவிருக்கும் போட்டிக்கான வரிசையை நிர்ணயம் செய்வதால் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் .
வெள்ளிகிழமையில் இரண்டு 1.30 மணிநேர பயிற்சி போட்டி நடக்கும் நாட்டின் காலை நேரத்திலும் ,பிற்பகல் நேரத்திலும் நடக்கும் ஆனால் இந்த பயிற்சி மொனாக்கோ நாட்டில் வியாழகிழமை நடத்தப்படும் .அதே போல சனி கிழமையில் ஒருமணி நேர பயிற்சி போட்டி காலை  நடக்கும் .இதில் கட்டாயம் போட்டியில் பங்கேற்கும் டிரைவர் கலந்து கொள்ள வேண்டியதில்லை .ஆனால் பிற்பகலில் நடக்கும் ஞாயிறு போட்டிக்கான முதல் மற்றும் இருபத்தி நான்கு இடத்திற்கான கார்களின் நிலை ( Grid position ) தீர்மானிக்க படுவதால் அதில் போட்டியில் பயிற்சி பெரும் டிரைவர் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் .



பயிற்சி போட்டி 

மொத்தம் ஒருமணி நேரம் நடக்கும் .அது மூன்று பகுதிநேரமாக( Q1,Q2,Q3 ) பிரிக்கப்படுகிறது.(Q1)முதல் இருபதுநிமிடம் போட்டியில் கலந்துகொள்ளும் பனிரெண்டு அணிகளுக்குரிய இருபத்திநான்கு கார்களும் கலந்து கொள்கிறது .இருபது நிமிட முடிவில் கலந்து கொண்ட இருபத்தி நாலு காரில் கடைசி ஏழு கார்கள் ,போட்டியின் வரிசையில் 17 - 24 இடங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறது ,(Q2)அடுத்து  எழுநிமிட ஓய்வுக்கு பின் நடக்க இருக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் எஞ்சியுள்ள பதினேழு கார்கள் பதினெட்டு  கார்கள் பதினைந்து நிமிட பலபரீட்சை செய்யும் .   அதில் கடைசி ஏழு இடம் பிடிக்கும் கார்கள் 11 - 16 இடங்களுக்கு தேர்வு செய்யப்படும் .(Q3)அடுத்த மூன்றாவது கடைசி தகுதி சுற்று எட்டு நிமிட ஓய்வுக்கு பின்னால் பத்து நிமிட  நேரம் கொடுக்கப்பட்டு அதில் 1 - 10 இடங்களுக்கு உரிய கார்களின் இடம் தீர்மானிக்க படுகிறது.



  107 % விதி

 அடுத்து மிக முக்கியமான விதி இந்த தகுதி சுற்றில் இருக்கிறது .அதர்க்கு பெயர் 107 % விதி . அதர்க்கு இன்னொரு பெயர்  knock-out qualifying .ஆம் முதல் தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் 24 கார்களில் எந்த கார் மிக குறைந்த நேரத்தில் எல்லை கோட்டை தொடுகிறதோ அதனை கணக்கில் எடுத்து கொண்டு அந்த நேரத்தில் +107% கூட்டினால் வரும் நேரத்தை கடந்து எல்லையை கடந்த கார்கள் தகுதி நீக்கம் பெற்று போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க படுவதில்லை .உதாரணத்திற்கு முதல் தகுதி சுற்றில் சாபெர் பெர்ராரி (  Sauber-Ferrari ) அணியின்  கமுய்  கோபயாஷி ( Kamui Kobayashi ) 1 நிமிடம் 26 வினாடிகள் மற்றும் 181 மில்லி வினாடிகளில் கடந்தார் ( 1:26.181 ) .அந்த நேரத்தில் விதி 107 % கூட்ட( இங்கு இதற்க்கு என தனியாக உள்ள கால்குலேட்டரில் கூட்டவும் அல்லது இந்த தொடுப்பை -http://www.enterf1.com/f1/107-percent-Lap-Time-Checker-Work-out-the-F1-target-lap-times-in-2011.asp#last-comment பயன் படுத்துங்கள் ) 1:32.214  நேரமே வாய்ப்பு நேரமாக கொடுக்கப்பட்டது.இதனை தாண்டிய ஹிஸ்பானிய ரேசிங் டீம் -HRT-Cosworth ன் இரண்டு கார்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி நீக்கம் பெறுகிறது .இதில் வேதனை என்னவென்றால் அந்த அணியின் - இருவரில் , நம் நாராயண் கார்த்திகேயனும் ஒருவர். சென்ற ஆண்டின் ஆரம்பமும் இப்படித்தான் அந்த அணிக்கு ஏற்பட்டது .






சரி .நம் இவ்வளவு கணக்கு தாண்டி முதல் மூன்று இடத்தை தக்கவைத்து கொண்டவர்களை பார்க்கலாம் .
முதல் இடத்தில் போட்டியை ஆரம்பிக்க போவது மெக்லரண் மெர்சீடிசின் லீவிஸ் ஹேமில்டன் ,இரண்டாம் இடமும் அதே அணியின் ஜென்சன் பட்டன் .ஆனால் மூன்றாம் இடத்தில் இருப்பவர் எப்போதும் பத்து இடம் தள்ளி தேடும் நிலையில் இருந்த லோட்டஸ் ரெனால்ட் அணியின் - ரோமின்  க்ரோச்ஜியன் ( Romain Grosjean ).


 அடுத்து நாம் பார்க்க இருப்பது பந்தய அட்டவனை .







முதல் போட்டி ஆஸ்த்ரேலியாவின் ஆல்பெர்ட் பார்க்கில் பார்முலாவின் முதல் வெப்பம் பரவ தொடங்குகிறது .நாளை இந்திய நேரப்படி போட்டி பிற்பகல் 11.30  க்கு ( ஆஸ்த்ரேலிய நேரப்படி மாலை  5 மணி . )தொடங்குகிறது .
போட்டியை பார்க்க போவோம் வாருங்கள் ...


1 comment:

Sugumarje said...

அருமை... பய்ற்சி போட்டியில் இவ்வளவு சோதனைகளா? :))

107% விதி - நல்ல விளக்கம்

ஆரம்பகட்டம் அருமை... காத்திருப்போம்!