உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, March 23, 2012

ஜென்சன் பட்டன் முதலிடத்தை பிடித்தார்





ஆஸ்த்ரேலியாவின் மெல்போர்ன் கரண்ட் பிரிக்ஸ் சர்க்யுட்டில் கடந்த 18 மார்ச் 2012 ல் பார்முலா 1 போட்டியின் முதல் போட்டி நடந்தது .பொதுவாகவே விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரும் அந்நாட்டில் போட்டிகள் நடத்துவதில் ஒரு அபாரமான நேர்த்தி இருக்கும் .அதோடு மிக வித்தியாசமான முடிவுகளை தருமாறு அங்கு நடக்கும் கிரிகெட் போட்டியாகட்டும் ,ரேஸ் போட்டியாகட்டும் அது நடத்தப்படும் களம் உலகின் முதன்மையை தக்கவைதுகொள்ளும் முயற்சி அப்பட்டமாக தெரியும் .அது மட்டுமல்ல ஆஸ்த்ரேலிய மக்கள் விளையாட்டை மிகவும் நேசிப்பவர்கள் .

 மெல்போர்ன் கரண்ட் பிரிக்ஸ் சர்க்யுட்டின் நீளம் 5.303 கி.மீ . இன்று நடக்கும் போட்டியில் இந்த தூரத்தை 58 முறை சுற்றும்போது ஒரு போட்டி ரேஸ் கார் 307.574 கி.மீ தூரத்தை கடக்கிறது .அதர்க்கு சுமார் 410 லி முதல் 450 லிட்டர் செலவு செய்ய வேண்டி இருக்கிறது .அது மட்டுமல்ல இந்த ஆண்டில்  மொத்தம் இருபது நாடுகளில் நடக்கும் போட்டிகளில் -போட்டி களத்தில் மட்டும் ஒரு கார் 1195 சுற்றுக்களை சுற்றுவதன் மூலம் 6099. 947 கி.மீ தூரத்தை கடக்க வேண்டும் .அடுத்து ஒவ்வொரு நாட்டில் நடக்கும் வெள்ளிகிழமை இரண்டு முறை சனி கிழமை ஒரு பயிற்சி போட்டி மட்டும் மூன்று தகுதி சுற்று போட்டி என கலந்து கொள்ளும்போது ஒரு அணி தன்னுடைய இரண்டு காருக்கும் சுமார் 2 லட்சம் லிட்டர் செலவு செய்து சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ தூரத்தை கடப்பதாக ( மிக விலையுர்ந்த! ) புள்ளி விவரங்கள் வருணிக்கிறது .எனவேதான் இந்த போட்டிகளில் அதிக செலவு என சொல்லும்படியாகிறது .சரி போட்டிக்கு 
போவோம் ...




2012 ஆண்டின் துவக்கமே கடந்த ஆண்டை நினைவு படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பட்டது .ஆம் கடந்த ஆண்டு முதல் போட்டி முதல் ரெட்புல் ரெனால்டின் ஆதிக்கமே தெளிவாக இருந்தது .ஆனால் இந்த ஆண்டு ஐந்து மட்டும் ஆறாம் இடத்திலே இருந்து தன்னுடைய போட்டியை ஆரம்பித்தது .முதல் இரண்டு இடத்தில் மெக்லரண் மேர்சீடிஸ் .அடுத்து லோட்டஸ் ரெனால்ட் என இருந்தது .


இந்தியநேரப்படி காலை 11:30 க்கு வ்ர்ரூம் சத்தம் தொடங்கியது ....
முதல் சுற்று..

 மெக்லரண் மேற்சீடிசீன் -லீவிஸ் ஹேமில்டன் முதலிடத்தினையும் இரண்டாம் இடத்தை ஜென்சன் பட்டனும் பாய்ந்து தக்கவைத்துக்கொண்டார்கள் .ஆனால் மூன்றாம் இடத்து லோட்டஸ் ரெனால்டின் ரோமின் க்ரோச்ஜியன் ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டு அந்த இடத்துக்கு ,அண்ணன் பார்முலாவின் திமிங்கலம் ஷூமேக்கர் வந்தார் .அருமையான போட்டி ...
ஆனால் பின்னால் மிக பல மோதல்கள் நடந்தது .அதில் ரெட்புல்லின் மார்க் வெப்பருக்கு நடந்தது .நல்ல வேலை கார் சிறு பதிப்புடன் தொடர்ந்தது .ஆனால் ரோமின் க்ரோச்ஜியன் மோதலினால் சஸ்பென்சன் பாதிப்படைந்து வெளியேற ,அவரை தொடர்ந்து ,சகாரா போர்ஸ் இந்தியாவின் நிகோ Hüல்கேன்பேர்க் - டோரோ ரோசொவின் டேனியல் ரிக்கார்டியோவுடன் மோதிய பாதிப்பில் வெளியேற ,
வெட்டலின் கார் இதெல்லாம் கவலை படாமல்ஆறாம் இடத்து ரோமின் க்ரோச்ஜீனை பின்னுக்கு தள்ளி ,அடுத்த சுற்றில் மெர்சீடிசின் நிகோ ரோபெர்க்கை ஐந்தாம் இடத்திற்கு அனுப்பிவிட்டு மூன்றாம் இடத்து  ஷூமேக்கரை துரத்த தொடங்கினார் .

மூன்றாம் சுற்றின் முடிவில், Drag Reduction System கட்டுப்பாடு நீக்கப்பட்டவுடன் போட்டி பலமாக தொடங்கியது .

ஆறாம் சுற்று ...

ஷூமேக்கரை துரத்தி கொண்டு இருந்த வெட்டலின் கார் முதல் வளைவில் திடீரென புல்வெளிக்குள் பாய்ந்தது .ஆனால் சுதாரித்து ட்ராக்கில் காரை கட்டுபடுத்தி கொண்டு வந்தார் .
பத்தாம் சுற்று ...

ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்தது .ஷூமேக்கரின் கார் வளைவில் புல்வெளியில் பாய்ந்தது , ஒரு புல் வெட்டும் இயந்திரத்தை போல காரின் முன்பகுதியில் புற்கள் வெளியேற, வேகம் குறைந்து பிட்லேனுக்கு வந்தது ,ஆம் கியர் பாக்ஸ் பிரச்சனை . ஏழு முறை சாம்பியனின் இந்த சுற்றுக்கான தொடர்வு முடிந்தது.இந்த களத்தில் இதே ஷூமேக்கர் ஒட்டிய பெர்ராரி கார் 2004 ல் 1:24.125 வேகத்தில் கடந்து சாதித்ததை இன்று வரை யாரும் முறியடிக்கவில்லை என்பது நினைவு கூற வேண்டியது .

பனிரெண்டாம் சுற்று ..

பெர்ரரியின் பிலிப் மாசா தன் காரின் பின்பகுதி டயரில் டீம் ரேடியோவில் புகார் தெரிவித்து உடனே மாற்றவும் செய்தார் .

பதினாலாவது சுற்று..

அலோன்சா டயர் மாற்ற வந்தார் .

பதினைந்தாவது சுற்று ..

சப்பர் பெர்ரரியின் கமுய் கோபயாஷி அதே டயர் பிரச்சனையால் அவதி பட்டார் . லோட்டஸ் ரெனால்டின் - கிமி ரெய்க்கொனனுடன் போராடிக்கொண்டு இருந்தார் .

மேலும் மென்மையான டயர்களை இந்த ஆண்டு அறிமுகபடுத்தும் நிலையிலுள்ள இந்த ஆண்டின் ஒரு டயர் வழங்கும் நிறுவனம் பய்ரெல்லி ( Pirelli ) இந்த விசயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் .இரண்டு வினாடிகளில் டயர் மாற்றி கொண்டு இருந்த நேரத்தை 0.08 வினாடிகளில் மாற்றும் அளவுக்கு முன்னேறிக்கொண்டு இருந்தாலும் இந்த அவஸ்த்தைகளை களைந்து முன்னேருவதுவும் முக்கியம் .
 
இருபத்தி ஒன்றாவது சுற்று ...

ஹேமில்டன் , சாபர் பெர்ரரியின் செர்கியோ Péரேழுடன் முந்தும் முயற்சியில் பாத்து வினாடிகள் வித்தியாசத்தில் பாய்ந்து கொண்டு இருக்க ,

இருபத்தி மூன்றாவது சுற்று ..

இப்போது செர்கியோ Péரேழுடன் முந்த போராடுவது பெர்ரரியின் அலோன்சா ..முதல் வளைவில் முந்தினார் .அடுத்து ரோபெர்க்கை மெர்சீடிசின் -ரோஷ்பெர்க்கை முந்தவிடாமல் செர்கியோ போராடினார் ...
 
முப்பத்தி ஒன்று ..

வில்லியம்சின் - மல்டோனா வெப்பருடனும், ரோஷ்பெர்க்குடனும் போராடி பறந்து முன்னேறி கொண்டு இருந்தார் ..

முப்பத்தி நாலு ...

கேட்டர்ஹாம் அணியின் - வித்தாலி பெற்றோவ் (  Vitaly Petrov ) காரின் கியர் பாக்ஸ் பகுதியிலிருந்து புகை கசிய அவரின ஓட்டமும் முற்றுபெற்றது .அதுவும் ரேஸ் ஆரம்பிக்கும் எல்லை கோட்டில் வந்து நிற்கவே தொடர்ந்து வரும் கார்களுக்கு பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கார் அழைக்கப்பட்டது ..


முப்பத்தி எட்டு ..

கேட்டர்ஹாம் அணியின் ஹெயக்கி கொவளைனே காரில் சஸ்பென்சன் பிரச்சனை ஏற்படவே அந்த காரும் அணியின் கேரேஜ் சென்று தஞ்சம் அடைந்தது .முழு அணியின் புள்ளி கனவு தகர்ந்தது .

நாற்ப்பத்தி மூன்று ..

ஒரு மிக பெரிய விநாடிகளை வெல்லும் சங்கிலி தொடர் போராட்டம் தொடங்கியது .ஆம் .ஜென்சன் பட்டனை 2.5 வினாடிகளின் இடைவெளியில் துரத்த அதர்க்கு அடுத்து ஒரு வினாடி வித்தியாசத்தில் வெட்டலை ஹேமில்டன் துரத்த அவருக்கு பின்னால் வெப்பர் ,அலோன்சா ,மால்டோனா ,பெரஸ் ,ரோபெர்க் ,கோபயாஷி ,ரேயகொணன் என முன்னணி வரியில் புயல் பரப்பி கொண்டு இருக்க ..

நாற்பத்தி ஐந்து ..

DRS - வாய்ப்பு தரவே வெட்டல்- பட்டனை 0.7 வினாடிகள் இடைவெளியை கொடுக்க பட்டன் சுதாரித்து தன்னுடைய மிக அதிவேக நேரம் 1:30.220 ஐ பதிவு செய்தார் .அதோடு 3.8 வினாடி இடைவெளியை வெட்டளுக்கு கொடுத்தார் .

நாற்பத்தி ஆறு ..

நான்காம் வளைவான Hellas (மொத்தம் பதினாறு வளைவு ) வளைவில் வில்லியம்ஸ் அணியின் ௦- புருனே சென்னாவும் -பெர்ரரியின் பிலிப் மாசாவும் மிக மோசமான தாகுக்குதலை ஏற்படுத்தினார்கள் .நிலை குலைந்த வில்லியம்ஸ் கார் பாதையோர சரளை பகுதிக்கு இழுத்து செல்ல அந்த காரின் பாகங்கள் சிதறி பறந்தன ..விசாரணைக்குரிய விபத்து .இதில் மாசாவின் கார் தொடரவில்லை . சென்னாவும் 52 ஆவது சுற்றுக்கு பின் அந்த காரும் தொடரவில்லை .

ஐம்பத்தி இரண்டு ..
மீண்டும் நாற்பத்தி ஐந்தாவது சுற்றில் வெட்டல்- பட்டன் துரத்தல் அதே இடைவெளியில் நிகழ்ந்தது .ஆனால் இந்தமுறை ௦0.9 வினாடிகள் மட்டுமே நீடித்தது .

ஐம்பத்தி ஆறு ..
ஜென்சன் தன்னுடைய புதிய வேகத்தை 1:29.187  பதிவு செய்து அந்த அணியின் பெருமூச்சை நிதானமாகினார் .

ஐம்பத்தி ஏழு ..

7 ஆம் Marina வளைவில் ,வில்லியம்ஸ் அணியின் எஞ்சி இருந்த பாஸ்டர் மல்டோனடோ காரின் பின்பகுதி பாதுகாப்புக்கான தடைகளை தகர்த்து ,இன்னும் ஒரு சுற்று இருக்கும் நிலையில் போட்டியில் இருந்து வெளியேறியது .


ஐம்பத்தி எட்டு ,கடைசி சுற்று ... 

ஜென்சன் பட்டன் முதலிடத்தை பிடித்தார் . ஐம்பத்தி எட்டு சுற்றுக்களை கடக்க எடுத்து கொண்ட நேரம் .1 மணி :34 நிமிடம் :09 வினாடி மற்றும் 565 மில்லிவிநாடிகள் மட்டுமே .


இரண்டாம் இடம் .

மிகவும் எதிர்பார்க்க பட்ட முகம் .செபாஸ்டியன் வெட்டல் .பட்டனை விட 2 .1 வினாடிகளே அதிகம் எடுத்துகொண்டார் . ஆறாம் நிலையில் தொடங்கினாலும் நானும் என் காரும் நலமாக இருக்கிறோம் என்பதை வெட்டல் சொல்வதாக நாம் எடுத்துகொள்வோம் .



மூன்றாம் இடம் .

போட்டியை முதலிடத்தில் தொடங்கிய லீவிஸ் ஹேமில்டன் மூன்றாம் இடத்தை தக்கவைதுகொண்டார் .இவரும் டயர் பிரச்சனையால் மார்க் வெப்பருடன்போராடி அவருக்கு ௦.0.5 வினாடி வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் .

4 ஐ ,மார்க் வெப்பரும் ,5 ஐ பெர்னாண்டோ ஆலோன்சாவும் 6 ஐ,  கமுய்  கொபயஷியும் ,7 ஐ கிமி Räikköனேன் 8 ஐ, செர்கியோ பெரஸ் 9 ஐ ,டேனியல்  ரிக்கியார்டோ 10 ஐ பால்டி ரேஷ்டாவும் கைப்பற்றினார்கள் .நல்லவேளை ,மார்க் வெப்பரும்(4),டேனியல் ரிக்கியார்டோ(9) -ஆஸ்திரேலியா நாட்டின் இரண்டு டிரைவர்களும் புல்லிபட்டியலை பிடித்தார்கள் .இது அந்த தேசத்தின் மக்களை சந்தோசப்படுத்தும் .




.இவ்வளவு உயரத்தில் கொடி அசைத்தால் ஓட்டும் ட்ரைவருக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை .உட்கார்ந்து படிக்கும் நமக்கு மிக அழகாக தெரிகிறது .நன்றி 

.



1 comment:

Sugumarje said...

//சுமார் 2 லட்சம் லிட்டர் செலவு//
அப்புறம் ஏன் விலை ஏறாது :))

தளம் முன்பைவிட சிறப்பாக மாறிவருகிறது... இன்னும் சிறக்கும்

வாழ்த்துகள்