உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, May 12, 2012

முகாலே பயிற்சி கைகொடுக்குமா ?
கடந்த 28 ஏப்ரல் மாதம் சந்தித்தது .இப்போதுதான் மீண்டும் சந்திக்கிறோம் .நாளை ஸ்பெயின் நாட்டின் Circuit de Catalunya வில் பார்முலா 1 ன் இருபது போட்டிகளில் ஐந்தாவது போட்டி நடக்க இருக்கிறது .இந்த போட்டியில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படவிருக்கும் உற்சாகத்தை விடவும் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அதிகம் இருக்கும் .
காரணம் ?
 கடந்த மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மூன்றாம் தேதிவரை இத்தாலியில் பெர்ராரி அணிக்கு சொந்தமான  Autodromo Internazionale del Mugello ட்ராக்கில் புதிய டிரைவர்களின் வளர்ச்சிக்காகவும்,சமீபத்திய தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு மிகவும் பிரச்சனையாக உள்ள பைரெல்லி (Pirell) டயர் கம்பெனி தயாரிப்புகளுக்கு ஒரு சோதனை களமாக இன்னும்பல முக்கிய காரணங்களுக்காகவும் கட்டாயமில்லாத ஒரு அழைப்பு FIA மூலம் அறிவுறுத்தப்பட்டது .அதன்படி பனிரெண்டு அணிகளில் பதினோரு அணிகளும் கலந்துகொண்டு பல அனுபவங்களை பெற்றன .ஆனால் அதில் நம் நாராயன் கார்த்திகேயன் இருக்கும் Hispania Racing F1 Team (HRT) தன்னுடைய தலைமை அலுவலகத்தை இடம் மாற்றம் செய்வதனால் இந்த பயிற்சி போட்டியில் கலந்து கொள்ளவில்லை .பயிற்சி போட்டி 
வெள்ளிகிழமை நடந்த பயிற்சி போட்டியில் பெர்ரரியின் பெர்னாண்டோ அலோன்சா முதலில் வந்தார் அன்று நடந்த அடுத்த போட்டியில் மெக்ளரனின் ஜென்சன் பட்டன் வந்தார் .சனிகிழமை முதல் மூன்றாம் பயிற்சி போட்டியில் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் .


தகுதி போட்டி 
(Q 1 ) முதல் தகுதி சுற்றில் இந்தமுறை 107 % நிர்ணயம் செய்தவர் மெக்லரண் மெர்சிடிசின் ஜென்சன் பட்டன் .இவரின் நேரம் 1:22.583 +(107%) 0:5.780 = 1:28.363 .இந்த முறை இந்த நேர நிர்ணய சட்டத்தில் தகுதி  இழந்த ஒருவர் நம் நாராயண் கார்த்திகேயன் என்பது வருந்ததக்கது - அவரின நேரம் 1:31.122 
(Q 2 ) வில்லியம்ஸ் அணியின் - பாஸ்டர்  மல்டோனடோ 1:22.105 


(Q 3 ) இறுதியில் 1:21.707 நேரத்தில் மீண்டும் ஜென்சன் பட்டன்  முதலிடத்தை பிடித்து ,  மெக்லரண் மெர்சிடிசின் 150 ஆவது pole position சாதனையை செய்தார் அடுத்து இரண்டாம் இடம் வில்லியம்ஸ் அணியின் - பாஸ்டர்  மல்டோனடோ .மூன்றாம் இடம் முகாலே டெஸ்டில் விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய பெராரியின் பெர்னாண்டோ அலோன்சா .நாளை மாலை இந்தியா நேரப்படி 5:30 க்கு போட்டி ஆரம்பிக்கும் .ஆனால் வழக்கம்போல குளிரும் ஸ்பெயின் நாட்டின் அழகை ரசிக்க 4:30 க்கு ஆஜராகி விடுங்கள் .

No comments: