உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, May 26, 2012

அழகிய ஆபத்து - மொனாகோ ரேஸ் !


சிறிய அழகான
உலகின் இரண்டாவது சிறிய அழகான மொனாகோ நாடு பல அபூர்வமான சரித்திர பின்னணி கொண்டது .பார்க்க ( http://f1inindia.blogspot.in/2011/06/bmw-sauber-segio-perez.html ) மொனாகோ நகர் பார்முலா 1 போட்டி மறக்க முடியாத அனுபவங்களை ஒவ்வொரு  டிரைவருக்கும் ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் .உலகின் பழமை வாய்ந்த இத்தாலியின் மோன்சா (Autodromo Nazionale Monza) களத்திற்கு அடுத்தபடியாக பழமையான இந்த களம் முழுக்க முழுக்க மக்கள் பயன்படுத்தும் சாலையில் ( Street Circuit ) நடைபெறும் போட்டியாகும் .

 மறுபரிசீலினை 


இங்கு நடைபெறும் போட்டியை டிரைவர்கள் சவாலாக கருதினாலும் ரேஸ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தந்தாலும் இங்கு நடைபெறும் போட்டி மிக ஆபத்தான பத்தொன்பது வளைவுகளை ( Turns) கொண்டு இருப்பதுவும் அதிலும்  மிக  குறுகிய 5,6,7,8,10,11,15,16 போன்ற அடுத்தடுத்த வளைவுகள் மிக ஆபத்தானதாகும் .பார்முலா 1 போட்டியின் டிரைவர்களை பற்றி எத்தனைதான் தனிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் இங்கு நடைபெறும் போட்டி அவர்களை பணயம் வைத்து நடைபெறுவதால் இங்கு நடைபெறும் போட்டிகளை பார்ப்பவர்கள் அந்த அபிமானத்தை மறுபரிசீலினை செய்வார்கள் !

பயிற்சி போட்டிகள் 
கடந்த வியாழனன்று நடந்த முதல் பயிற்சி போட்டியில் பெர்ரரியின் பெர்னாண்டோ அலோன்சா முதலிடம் முதலிடம் வந்தார் .
அதே நாளின் இரண்டாவது பயிற்சி போட்டியில் மெக்ளறேன் மெர்சடிஷின் ஜென்சன் பட்டன் வந்தார் .
சனிகிழமை மூன்றாவது பயிற்சி போட்டியில் மெர்சீடிஷின் நிக்கோ ரோஷ்பெர்க் .


தகுதி சுற்றில் ...
அதே சனிகிழமை நடந்த ( Q1 ) முதல் தகுதி தலைவிதியை நிர்ணயிக்கும் சுற்றில் மிக வித்தியாசமாக சகாரா போர்ஸ் இந்திய அணியின் நிகோ  ஹுல்கேன்பேர்க் ( Nico Hulkenberg ) மிக குறைந்த நேரமான 1:15.418 ல் கடந்து + (107%) 0:5.279 =  1:20.697 நிர்ணயித்தார் 
( Q 2) இரண்டாவது த.சுற்றில் வில்லியம்ஸ் ரெனால்ட்டின் - பாஸ்டர் மல்டோனடோ 1:15.026 ல் கடந்து அசத்த இறுதி ( Q 3 ) ல்  மெர்சீடிஷின் - மைகேல் ஷுமேக்கர் 1:14.301 ல் கடந்து அதை விடவும் அசத்தினார் .ஆனால் ஷூமேக்கரின் துரதிருஷ்டம் வழக்கம் போல தொடர்வதால் கடந்த போட்டியில் ஏற்படுத்திய விபத்து காரணமாக ஐந்து இடம் பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தில் போட்டியை எதிர்கொள்வார் .எனவே அந்த வாய்ப்பு அவருக்கு அடுத்து வந்தரெட்புல் ரெனால்ட்டின் - மார்க்க வெப்பருக்கு வழங்க பட்டு இருக்கிறது .
இரண்டாவது இடம்  மெர்சீடிஷின் நிக்கோ ரோஷ்பெர்க் .மூன்றில்  மெக்ளறேன் மெர்சடிஷின் - லீவிஸ் ஹேமில்டன்.

 அழகிகள் மிக பிரபலம் .


நாளை மாலை வழக்கம்போல 5:30 க்கு ரேஸ் நடக்க இருக்கிறது .மொத்தம் .07 சதுர மைல் அளவேயுள்ள மொனோகோ நகரின் அழகை ஒருமணிநேரத்திற்கு முன் காண முயற்சிப்போம் .அதை விட சூதாட்டத்திற்கு புகழ்பெற்ற மொனோகோ நகரின் பார்முலா 1களத்தின் அழகிகள் மிக பிரபலம் ! .

No comments: