உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, June 2, 2012

மொனாகோ வெற்றி கோப்பை - மார்க் வெப்பர் கையில்




.
எதிர்பார்த்தது போல இந்த வருடமும் மொனாகோ போட்டி பார்முலா 1 ரேஸ் காலண்டரில் தேவைதானா ?என்ற கேள்வியுடனே இந்த பதிவை தொடர்கிறேன் .விஷபரிட்சை என்பதை நேரில்பார்க்காதவர்கள் நேற்று பார்த்திருப்பார்கள் .அவ்வளவு விபத்துக்கள் .கலந்துகொண்டது இருபத்திநான்கு கார்கள் போட்டியை முழுமையாக முடித்து பதினைந்து கார்கள் .மெக்லரண் மெர்சீடிஷின் ஜென்சன் பட்டன் போட்டியின் மொத்த சுற்றுக்கள் 78 ல், 70 சுற்றுக்களை அதாவது 90% விகிதம் முடித்ததனால் அவர் பதினாறாம் இடம் .எனவே பதினாறு கார்கள் ரேசில் இருந்தது .போட்டி என்பதை உயிரோடு விளையாடும்போது ரசிக்க பழகிவிட்டால் பார்வையாளன் எனும் இடம் பறிபோய் ரேஸ் வெறிபிடித்தவன் அல்லது பையித்தியம் என சொல்லும் நிலையாகிவிடும் .




கண்ணாடி சுவருக்குள் இருந்து கொண்டு கல் எறிவது போல ரேசை பற்றி மட்டும் எழுதும் நான் மொனாகோ ரேஸ் போட்டியை வெறுப்பதற்கு காரணம் விளையாட்டு அல்லது போட்டிகள் திறமையோடு இருக்கலாம் உயிரோடு இருக்க கூடாது என்பது என் நம்பிக்கை 
அதனாலயே இங்கு நடக்கும் போட்டி வேண்டாம் என்பது என் கருத்து என்பதை பதிவு செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் .


சரி போட்டிக்கு போகலாம் .
சொந்த இடத்தை பறிகொடுத்தவர்கள் .




தகுதி சுற்றில் முதலிடம் பிடித்தாலும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்ட மைகேல் ஷுமேக்கர் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை உருவாக்கினார் . அது மட்டுமல்ல வில்லியம்ஸ் ரேனால்ட்டின் - பாஸ்டர் மல்டோனடோ நிலைமை இன்னு மோசம் .அவர் தகுதி சுற்றில் ஒன்பதாம் இடம் .ஆனால் பயிற்சி போட்டியில் FP3 ல் நடந்த விபத்துக்கு 10 இடம் + அந்த விபத்தில் பழுதான கியர் பாக்சை மாற்றியதற்காக 5 இடம் என மொத்தம் 15 இடம் தள்ளி 24 நான்காம் இடத்தில் ஆரம்பிக்க பணிக்கப்பட்டார் ( நாள்வேளை மொத்தமே 24 இடம்தான் ) மேற்படி பாஸ்டர் மல்டோனடோவால் இடிபட்ட சாபெர் பெர்ரரியின் செர்ஜியோ பெரஸ் கியர் பாக்ஸ் மாற்றியதால் அவருக்கு 18 ஆம் இடத்திலிருந்து 23 ற்கு தள்ளப்பட்டார் ( போட்டியை நடத்தும் FIA அமைப்பின் விதிப்படி ( FIA regulations ) 5  போட்டிகளுக்கு ஒரு கியர் பாக்ஸ் பயன்படுத்த வேண்டும் )




 மார்க் வெப்பர் முதிடத்தில் தொடங்க இரண்டாவது இடத்தில் நிக்கோ ரோஷ்பெர்க் .மூன்றாம் இடம் லீவிஸ் ஹேமில்டன் .என தலைமை தாங்கி நிற்க ரேஸ் இந்த ஆண்டின் ஆறாவது போட்டி ஆரம்பித்தது .


முதல் சுற்றும்... விபத்துகளின் ஆரம்பமும் ...






மார்க் வெப்பர் புயலென கிளம்ப அவரை தொடர்ந்து நிக்கோ ரோச்பெர்க் அடுத்து ஹெமில்டன் ,அலோன்சா ,பிலிப் மாசா ஒன்பதாம் இடத்திலிருந்து பாய்ந்த ரெட் புல்லின் வெட்டல் அற்றம் இடம் இப்போது ,ஆறில் இருந்து தொடங்கிய மைக்கேல் ஷுமேக்கரை லோட்டஸ் ரேனால்ட்டின் -  ரோமின் க்ரோச்ஜியன் இடத்து பக்க சாலை தடுப்பு பகுதிக்கு தள்ள நல்ல வேளை ஷுமேக்கர் வீல் ஒருபக்கம் க்ரோச்ஜியன் காரில் உரச மறுபக்கம் சாலை தடுப்பில் உரசி சமாளித்து தப்பியதால் எட்டாம். இடம் குறுகிய இடத்தில முந்தி செல்வது அபாயம் என முதல் இரண்டு கார் டிரைவர்களை தவிர மற்றவர்கள் அறிவார்கள் க்ரோச்ஜியன் அந்த வகுப்புக்கு செல்லவில்லையோ ?ஆனால் இந்த உரசலில் இடது பின்புற வீல் முழுவதுமாக சேதமடைய 




லோட்டஸ் ரேனால்ட்டின் -  ரோமின் க்ரோச்ஜியனும் வெளியேறினார் .
அதற்குள் பின் வரிசையில் அத்தனை தண்டனைகளையும் தாங்கிக்கொண்டு வந்த பாஸ்டர் மல்டோனடோ கார் நம் நாராயண் கார்த்திகேயனின் ஹிஷ்பானிய ரேசிங் டீமின் இன்னொரு டிரைவர் ரோசா ( Pedro de la Rosa )காரில் மோதிரேசிளிருந்து வெளியேறியது . அடுத்து மஞ்சள் கோடி அசைத்து கார்களின் வேகத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது .மல்டோனடோ கார் மற்றும்.உடைந்த பாகங்கள் ட்ராக்கில் இருந்து அகற்றபடுவதற்கு சேப்டி கார் வந்தது .


 நான்காவது சுற்று ...
சேப்டி கார் களத்திலிருந்து வெளியேற காத்திருந்த ஹெமில்டனின் காரை தொடர்ந்து வந்த பெர்ராரியின் -ஆலோன்சாவும் .மாசாவும் நெருங்கி மார்க் வெப்பரின் இடத்தை குறிவைத்து துரத்த ..


நான்காவது சுற்று ...
சேப்டி கார் களத்திலிருந்து வெளியேற காத்திருந்த ஹெமில்டனின் காரை தொடர்ந்து வந்த பெர்ராரியின் -ஆலோன்சாவும் .மாசாவும் நெருங்கி மார்க் வெப்பரின் இடத்தை குறிவைத்து துரத்த ..


ஐந்தாம் சுற்று ..
பொதுவாகவே வேகமாக கடப்பதை பார்முலா போட்டிகளில் சகஜமாக சொல்லும் வார்த்தை Flaying Start அது உண்மையில் சாபர் பெர்ராரியின் கமுய்  கொபயஷிக்கு மிகவும் பொருந்தும் .காரணம் Flying Crash என பறந்து விழுந்தது கார் .நல்லவேளை வண்டியில் சஸ்பென்சன் உடைந்து போனதால் போட்டியில் தொடர முடியாமல் விலகினார் .


ஒன்பதாவது சுற்று ...
மார் வெப்பரின் கார் மிக நிதானமாக பயணித்து கொண்டு இருந்தது .அவரை தொடரும் நிக்கோ ரோஷ்பெர்க் எந்தவிதமான தவறுக்கும் இடம் கொடுக்காமல் இருந்தாலே போதும் என அவர் அணி தீர்மானித்து இருந்ததாக வழி நடத்துவது புரிந்தது .இப்போது வெப்பருக்கும் - ரோஷ்பெர்க் இடைவெளி 1:20.969 நிமிடமே .


பனிரெண்டாம் சுற்று ...
சரியான துவக்கத்தை இழந்த மைக்கேல் ஷூமேக்கர் எட்டாம் இடத்தில் கிமி ரைகொனனுடன் போற்றடி கொண்டு இருந்தார் ..


பதினைந்தாம் சுற்று ...
அருமையான துவக்கத்தை தந்த ரஷ்யாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் விட்டாலி பெட்றோவ் முதல் சுற்றில் ஏற்ப்பட்ட மோதல் குழப்பத்தில் காரின் எலெக்ட்ரிகல் பிரச்சனையால் தொடரமுடியாமல் வெளியேறியது .இந்த விபத்தில் சிறிய காயம் காரணமாக மருத்துவமனை சென்று வந்தார் .


இருபத்தி இரண்டு ...
ஜென்சன் பட்டன் நேரம் சரியில்லை போல ...கடந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பத்தாம் இடம் தொடங்கி ஒன்பதாம் இடத்தில் போராடி முடித்தார் .ஆனால் இன்றைய மொனாகோ ரேசில் பனிரெண்டாம் இடத்தில் துவங்கியவர் இப்போது பதினான்காம் இடத்தில் கேட்டர்ஹாமின் ஹெயக்கி கொவளைணனை துரத்திக்கொண்டு இருக்க அவரை பிடிக்க பின்புறத்தில் செர்ஜியோ பெரஸ் முயற்சி செய்துகொண்டு இருக்க ஜென்சன் பட்டன் ஏற்கனவே தன்னுடைய காரோடு போராடிக்கொண்டு இருந்தார் ..


இருபத்தி ஐந்து ...
இந்த ரேசுக்கு முன்னர் தகுதி சுற்று முடிந்த போது ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் அளித்த பேட்டியில் ரேசை எந்த இடத்தில் தொடங்குகிறோம் என்பது முக்கியமில்லை போட்டியின் முடிவில் எந்த இடத்தில் முடிக்கிறோம் என்பதே முக்கியம் என சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் ஒன்பதாம் இடத்தில் துவங்கி இப்போது ஆறாம் இடத்தில் முன்னேறிக்கொண்டு இருந்தார் .இரண்டு முறை உலக சாம்பியன் சொல்வது சரியாகத்தான் இருக்கும் .
இன்றைய போட்டியில் முதல் பனிரெண்டு இடங்களில் Soft Tyre பொருத்தியிருந்தார்கள் . Super Soft Tyre நல்ல துவக்கத்தை கொடுத்தாலும்   அவர்களை பொறுத்த வரை விரைவில் Soft Tyre க்கு மாறவேண்டிவரும் அதை தவிர்த்து தொடர்ந்து போராடி முன்னேறினால் மட்டுமே முதல் ஐந்து இடத்திற்குள் வரமுடியும் என தீர்மானித்து இருந்தார்கள் .


முப்பத்தி ஒன்றாவது சுற்று .. 
கிமி ரேயகொணன் பிட் ஸ்டாப்பில் டயர் மாற்றி விட்டு வெளியேறும்போது,அருகில் டயர் மாட்டிகொண்டு இருந்த சாஹார போர்ஸ் இந்தியாவின் மெக்கானிக்கின் முதுகையும் ,டயரையும் உரசிக்கொண்டு வெளியேற அதிர்ந்துபோனார்கள் போர்ஸ் இந்திய அணியினர் ஏற்கனவே ஐந்து கார்கள் வெளியேறிய நிலையில் ஒரு மெக்கானிக்கையாவது வெளியேற்றலாம் என்று யோசித்திருப்பாரோ ? 
முப்பத்தி மூன்றாவது சுற்று ..
இப்போது நிலைமை மிகவும் மாறியிருக்கிறது .டயர் மாற்றம் செய்ய வந்த கார்களின் இடம் மாறியிருக்கிறது .முதல் இடத்தில் வெட்டல் .அடுத்து வெப்பர்,ரோஷ்பெர்க் ,அலோன்சா ,ஹேமில்டன், ஷூமேக்கர் ,மாசா போர்ஸ் இந்தியாவின் பால்டி ரெஷ்டா ,ரிக்கார்டியோ ,பத்தாவது இடத்தில் ஜென்சன் பட்டன் .
நாற்ப்பத்தி நான்கு ...
வெகு நேரத்திற்கு முன்னரே எதிர்ப்பார்க்கப்பட்ட மழை தன்னுடைய சில துளி முத்தங்களை பதித்தது .ஆனால் மிக பெரிய மழையின் மேகமூட்டம் தென்பட்டது .
நாற்ப்பத்தி ஆறு ..
டயரை மாற்றாமல் தன்னுடைய திட்டப்படி சரியான இடத்தை தேர்வு செய்யுவரை போராடிய வெட்டல் இப்போது முதலிடம் .எனவே இனியும் தாமதிக்க விரும்பாமல் பிட் லேன் திரும்பினார் .இதனால் மீண்டும் நான்காம் இடத்தில் தொடர வேண்டியாதாகி விட்டது ..


ஐம்பத்தி ஒன்று ..
மீண்டும் வெப்பர் தன்னுடைய முதலிடத்தில் .
மழை வர முற்றலுமாக மறுத்து விட்டது .அணிகளும் ,போட்டி நிர்வாகமும் மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சை விட்டார்கள் !
போட்டியின் முதல் ஆறு கார்களும் ஐந்து வினாடி இடைவெளிக்குள் துரத்திக்கொண்டு இருந்தன .


அறுபத்தி இரண்டு ..
மைக்கேல் ஷூமேக்கரின் காரில் எரிபொருள் அழுத்த (  Fuel Pressure ) பிரச்னையில் போராடிக்கொண்டு இருக்க ,ஒவ்வொரு சுற்றுக்களின் வேகத்தின் இடைவெளி அதிகரிக்க தொடங்கியது .அதனை அறிந்த அவரை தொடரும் டோரோ ரோசோவின் - ஜீன் எரிக் வேர்கின் மிக சாதாரணமாக் முன்னேறி சென்றார் .அவரை தொடர்ந்து கேட்டர் ஹாமின் ஹெயக்கியும் முந்த இனி போராடி பிரோயோஜனமில்லை என்ற முடிவுடன் பிட் லேன் திரும்பினார் ஷூமேக்கர் .இரண்டு புள்ளிகளுடன் பதினெட்டாம் இடத்தில் இருக்கிறார் இந்த ரேசுடன் .




அறுபத்தி நான்கு ...
மருஷ்ய - கோஷ்வோர்த் அணியின் சார்லஸ் பிக் தன்னுடைய காரின் எலெக்ட்ரிக்கல் பிரச்னை ஏற்படவே போட்டியிலிருந்து வெளியேறியது .


அறுபத்தி ஐந்து ..
அடுத்து STR பெர்ராரியின் டேனியல் ரிக்கியார்டோ ஸ்டீரிங் பழுதானதால் பிட்லேன் திரும்பினார் .



அறுபத்தி ஆறாவது சுற்று ..
கொவளைணன் ஜென்சன் பட்டன் ,செர்ஜியோ பெரஸ் ,பின்வரிசையில் மோதி விளையாடி கொண்டார்கள். 



எழுபது ...
ஓடு தளத்தின் மேல் மழை தன்னுடைய கிளையை மெல்லப் பரப்ப அதனை முதல் ஐந்து கார்களுமே ஒடித்து எடுத்து கொண்டன .


ஜென்சன் பட்டன் ஏற்கனவே பட்ட விபத்தின் சுவடுகளின் பாதிப்பினால் போட்டியிலிருந்து வெளியேறினார் .


எழுபத்தி ஒன்று ..
அலோன்சா இன்னும் ஏழு சுற்றுக்களே மீதம் இருப்பதால் ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ள முயற்சிக்க ,இந்த துரத்தலின் விளைவில் ஒன்று ரோஷ்பெர்க் ஏதேனும் தவறு செய்து பின்னுக்கு வரலாம் அல்லது வெப்பர் முதலிடத்தை இழக்கலாம் .இரண்டுமே பெர்ராரிக்கு லாபம்தான் .
அதற்குள் ஐந்தாம் இடத்தில வந்து கொண்டு இருந்த செபாஸ்டியன் வெட்டல் மிக அற்புதமாக ஒரு ஓட்டத்தினால் ஹெமில்ட்டனை பின்னுக்கு தள்ளினார் .எங்கும்  பரபரப்பு தொற்றிகொண்டது 
எழுபத்தி ஐந்து ...
இனி எந்த மாற்றமும் நிகழாது என்பது போல் முதலிடத்து ஆறு கார்களும் பின்தொடர்ந்து கொண்டு இருந்தன .
எழுபத்தி ஆறு 


ரோஷ்பெர்க்கின் வேகத்தில் சில மாற்றங்கள் தெரிந்தன .வெப்பரை பின்னுக்கு தள்ள நெருங்கி ,விலகி என திருபங்கள் மிகப்பெரிய தடையை விதைத்தன. பொதுவாகவே இரண்டு சக்கர வாகனத்திலும் சரி ,நான்கு சக்கர வாகனத்திலும் சரி இடது புறத்திலிருந்து வலது புறம் திரும்புவதை காட்டிலும் - வலது புறமிருந்து இடது புறம் திரும்புவது( Anti Clockwise ) மிகவும் கடினம் .அதிலும் மணிக்கு சுமார் 250 கி.மீ வேகத்தில் ..சொல்லவே வேண்டாம் .அப்படிப்பட்ட வேகத்தை நம்மால் கற்பனை செய்து கொள்ளமட்டுமே முடியும் !.காரில் பொருத்தப்பட்ட கேமிரா மூலம் பார்க்கும் நமக்கே இந்த சுத்து, சுத்துதே F1 டிரைவர் நிலைமை ?
எழுபத்தி எட்டாம் கடைசி சுற்று ..
எந்த மாற்றமும் இல்லை .ரெட்புல்லின் மார்க் வெப்பர் முதலிடம் .எழுபது எட்டு சுற்றுக்களை அவர் கடக்க எடுத்து கொண்ட நேரம் 1:46:06.557. இந்த ஆண்டில் முதல்- முதலிடத்து வெற்றி மார்க் வெப்பருடையது.அதுவும் மொனாக்கோ தேசத்தில் .அற்புதமான தவறே இல்லாத டிரைவிங் .அது மட்டுமல்ல தொடர்ந்து மூன்றிலிருந்து ,ஆறாம் ரேஸ் வரை ரெட்புல் அணி முதல் இடத்தில் இருப்பதர்க்கு வெப்பர்தான் முழுமுதல் காரணம் .அவரின இடங்கள் 4,4,4,4,11,1.


இரண்டாம் இடம் .
பொறுமையின் சின்னமாக விளங்கும் மெர்சீடிசின் - நிக்கோ ரோஷ்பெர்க் .பின்பக்கத்தில் தன்னுடைய சகா ஷூமேக்கர் சரிவையே சந்தித்தது கொண்டு இருந்தாலும் தன்னுடைய அணியை ஐந்தாம் இடத்திற்கு செல்ல இதுவரை ஐம்பத்தி ஒன்பது புள்ளிகளை சம்பாதித்து கொடுத்து இருக்கிறார் .பனிரெண்டு அணிகளில் ,இவர்மட்டுமே தனித்து தெரிகிறார் .மிக நல்ல எதிர்காலம் ரோஷ்பெர்கிர்க்கு  உண்டு .


மூன்றாம் இடம் ...
மிக பல விமர்சனத்திற்கு உட்பட்டாலும் தன்னுடைய அணியை பலமாக நிலை நிறுத்தி இருப்பது பெர்ராரியின் - பெர்னாண்டோ ஆலோன்சாதான் .இவரின் சகா பிலிப் மாசா மொத்தம் பத்து புள்ளிகளையே பெற்று தந்திருந்தாலும் அணியை மூன்றாம் இடத்திற்கு தூக்கி நிறுத்தி இருக்கிறார் அது மட்டுமல்ல டிரைவர்களுக்கான புள்ளிபட்டியலில் முதலிடத்தில் சவால் விட்டு கொண்டு இருக்கிறார் .


ஆறு போட்டிகள் ஆறுவிதமான வெற்றியாளர்கள் .போட்டியின் சுவாரஷ்யம் பிய்த்துகொண்டு போகிறது ..


பயத்துடன் ஆரம்பித்த மொனாகோ ரேஸ் ஒன்பது கார்களை வெளியே அனுப்பினாலும் பாதுகாப்பாக முடிந்தது ஆறுதலான விஷயம் .அதை பற்றி நாம் கவலை பட்டு விலகி போகும்போது அது யார் ? அட நம் ரோஷ்பெர்க் .





இந்த போட்டியில் மிக அற்புதமான வெற்றியை பதிவு செய்த நிக்கோ  ரோஷ்பெர்க் தன்னுடைய அழகான காதலி விவான் சிபோல்டுடன் அன்புடன் பதித்து மன்னிக்கவும் பகிர்ந்து கொண்டார் !






No comments: