உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, June 29, 2012

ஸ்பெயின் நாட்டு கோப்பை ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ ஆலோன்சாவுக்கே


கடந்த 24 ,ஜூன் மாதம் ஞாயிற்று கிழமை ஸ்பெயின் நாட்டின் - Valencia Street Circuit ல் நடந்தது .இந்த போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பார்முலா 1 ஆர்வலர்களையுமே ஈர்த்திருக்கிறது .இதுவரை நடந்த பார்முலா1  சரித்திரங்களில் முதல் ஏழு போட்டிகளில் ஏழு விதமான டிரைவர்கள் வந்தது கிடையாது .


எனவே போட்டியில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என சத்தியமே பண்ணலாம் .அதுமட்டுமல்ல யார் வெற்றிபெறுவார்கள் என்ற ஆர்வத்தை மீறி யாரெல்லாம் தகுதி சுற்று வருவார்கள் ,யார்  போட்டியை வெல்வது என்பதுவரை சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது -  களத்திற்கு வெளியே .எனவே போட்டியின் மேல் உள்ள ஆர்வம் மேலும் உச்சம் தொடலாம் ..

போட்டியை பார்ப்போம். 


முதல் சுற்று ...
எந்த பிரச்சனையும் இல்லை ரெட்புல் -  வெட்டல் சிட்டாய் பறந்தார் அவரை தொடர்ந்து மெக்கலரனின் - லீவிஸ் ஹெமில்டனும் தொடர்ந்தார் .ஆனால் மூன்றாம் இடத்து பாஸ்டர் மல்டோனடோ பின்னுக்கு முந்தமுடியாமல் வேகம் குறைய ,அதை பயன்படுத்தி கொண்ட லோட்டஷின் - ரோமின் க்ரோஷ்ஜியன் அந்த இடத்தை பிடித்து தொடர்ந்தார் ..எந்த அசம்பாவிதமும் இல்லாத முதல் வளைவை 23 கார்களும் சந்தித்தன ..ஆனால் கார்களின் தொடங்கிய இடத்தில் நிறைய வித்தியாசங்கள்
ஆறாம் இடத்தில் தொடங்கிய இடத்தை நழுவவிட்ட, மேர்சடிசீன் நிக்கோ ரோஷ்பெர்க் பதினோராம் இடத்தில் தொடர ..
ஒன்பதாம் இடத்தில் தொடங்கிய மேக்லரனின் - ஜென்சன் பட்டன் பதிமூன்றாவது இடத்தை தொடர ..
பதினோராம் இடத்தில தொடங்கிய பெர்ரார்யின் - பெர்னாண்டோ அலோன்சா மின்னல் வேகத்தில் ஏழாம்  இடத்துக்கு முன்னேறிக்கொண்டு இருந்தார் முன்வரிசையில் பதட்டம் அதிகரித்தது

இரண்டாவது சுற்று ..
நான்காம் இடத்து ரோமின் க்ரோஷ்ஜியன் இப்போது மூன்றாம் இடத்தில .

எட்டாவது சுற்று ..
வெட்டல் தனக்கும் இரண்டாவது வந்துகொண்டு இருந்த ஹெமிலடனுக்கும் இடையேயுள்ள நேர வித்தியாசத்தை எட்டு வினாடிகளுக்கும் மேல் அதிகரித்தாலும் மேலும் அதிகரிக்கும் நோக்கில் செயல்படுவது தெரிந்தது .கனடாவில் நடந்த தவறை ஒருபோதும் மறக்க முடியாதல்லாவா ?
 இப்போதைய முதல் பத்து இடத்தின் வேக நாயகர்கள் பட்டியல் ..
1.வெட்டல் ,2.ஹெமிலடன் ,3.க்ரோஷ்ஜியன் ,4.கோபயாஷி .5.மல்டோனடோ ,6.  ரைகொணன்,7.ஹுல்கேன்பேர்க்,8.அலோன்சா ,9.டி ரேஷ்டா ,10.மாசா .

பத்தாவது சுற்று ..
மிக அதிக நேரம் இரண்டாம் இடத்து ஹெமில்டனை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் துரத்தி கொண்டு இருந்த க்ரோஷ்ஜியன் பனிரெண்டாவது வளைவில் போராடி பதிமூன்றாம் வளைவின் வேகம் குறைக்கும் இடத்தில் முந்திவிட்டார் .

பதினொன்றாவது சுற்று ...
ஜென்சன் பட்டன் டயர் மாற்ற பிட் லேன் வர அவரை தொடர்ந்து செர்ஜியோ பெரஸ் ..

பதினான்காவது சுற்று ..
க்ரோஷ்ஜியன் -வெட்டல் இடைவெளி 12 வினாடிகளையும் தாண்டியது .இந்த இடத்தில் ஏதாவது செய்யவேண்டும் என நினைத்த மூன்றாம் இடத்து ஹெமில்டன் இன்டெர் மீடியம் டயர் மாற்ற வந்தார்
அலோன்சா - ஹுல்கேன்பேர்க்,போராட்டம் முடிவுக்கு வந்தது ஏழாம் இடம் இப்போது அலோன்சாவுக்கு .
ரைகொணன் ஆறாம் இடத்தை விட்டு தாண்டி ஐந்தாம் இடத்து .மல்டோனடோவை பின்னுக்கு தள்ள ..

பதினாறாம் சுற்று ...
அலோன்சா இந்தமுறை சாப்ட் டயரை தேர்வு செய்ய அடுத்து ,வந்த வெட்டலும் சாப்ட் டயரை தேவு செய்ய மீண்டும் எதோ திட்டமிருந்தது இரண்டு அணிகளிடமும் ,ரெட்புல் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள மற்ற அணிகளின் டயர் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தது .தவறே இல்லாத இடத்தை நோக்கி ரெட்புல்லின் திட்டம் ..

பதினெட்டு ..
டயர் மாற்றிவந்த அலோன்சா பத்தாம் இடம் ஒன்பதாம் இடம் ,எட்டாம் இடம் என முன்னேறி ஏழாம் இடத்து சென்னாவை தாண்டி ஆறாம் இடத்து மைகேல் ஷுமேக்கரை நெருங்க ,நான்காவது வளைவுவரை தாக்கு பிடித்த ஷுமேக்கர் வேறுவழியில்லாமல் அலோன்சாவை மோதுவது போல பயமுறுத்தி வழி விடவைக்கப்பட்டார் .இப்போது ஆறாம் இடம் அலோன்சா - டயர் மாற்றம் வேலை செய்தது .இருபது ..
சென்னாவும் - கொபயாஷியும் உரசி கொள்ள சென்னா கார் ஒரு சுற்று சுற்ற முன்பக்க விங் முழுவதுமாக சேதம் .அதுவும் டயரும்  மாற்றப்பட்டது
இப்போது கார்களின் நிலை
1.வெட்டல், 2.க்ரோஷ்ஜியன் ,3. ஹெமில்டன் ,4. அலோன்சோ ,5. டி ரெஷ்ட ,6. ரைக்கோனென் ,7. மல்டோனடோ , 8.மாசா, 9.ஹுல்கேன்பேர்க் ,10. பட்டன் .

இருபத்தி நான்காவது ...
இப்போதுவரை ஒருமுக்கியமான விஷயம் போர்ஸ் இந்திய அணியின் டி  ரெஸ்டா இப்போதுதான் முதன்முறையாக டயர் மாற்றுகிறார் ஐந்தாம் இடத்தை இழக்க விரும்பவில்லையோ ?இருபத்தி எட்டு ..
இப்போது க்ரோஷ்ஜியன் -வெட்டல் இடைவெளி 20 வினாடிகள் .போட்டியில்லாமல் பறந்துகொண்டு இருந்தார் வெட்டல் .
ஹெயக்கி கோவலைனன் - டோரோ ரோஷோவின் வெர்ஜினுடன் மோதல் . கோவலைனன் காரின் முன்புற இடத்து டயரும் - வெர்ஜின் இடத்து பின்புற டயரும் பஞ்சர் .களத்தின் எல்லா பகுதியிலும் டயரின் பதிவுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இப்போது டயரின் துண்டுகள் சிதறி கிடக்க , நிலைமையை சரிசெய்ய Safty Car வந்தது இந்த மோதலில் டோரோ ரோஷோவின் கார் போட்டியிலிருந்து வெளியேறியது .29 ஆவது முதல் - 33 ஆவது சுற்று ...
இந்த ஐந்து சுற்றுக்களும் Safty Car காரின் தலைமையில் இயக்கம் பெற்றாலும் 19 ஆம் நிலையிலிருந்து 23 ஆம் நிலை வரை உள்ள கார்கள் Safty காரை முந்தி செல்லலாம் என நியதி இருந்ததால் மேலும் கள சுத்தம் நடக்கும் காலம் நீடிக்கும் என அறிந்த முதல் வரிசை கார்கள் டயர் மாற்றத்திற்கு பயனபடுத்திக்கொண்டன .

 Adrian Newey (Red Bull )
இப்போது காமிராவின் பார்வை ரெட்புல்லின் கள என்ஜீனியரின் கால் பகுதியை காட்டியது .அங்கு ஒருவித டென்சன் அணியின் தலைமை நுட்பவியாளர் Christian Horner அணிந்திருந்த கேன்வாஷில் தொற்றிக்கொண்டு இருந்தது .காரணம் 29 சுற்றுக்கள் வரை இந்த களத்தின் வெற்றி ரெட்புல் அணியிடம் இருந்தது .ஆனால் இப்போது மிக சில வினாடிகள் வித்தியாசத்தில் அனைத்து கார்களும் ஒன்றாக  அணி வகுத்துள்ளது .இது ஒரு விதத்தில் போட்டி ஆரம்பத்திலிருந்து தொடங்குவதற்கு சமம் .அது மட்டுமல்ல 19 ஆம் இடத்திலிருந்த மார்க் வெப்பர்11ல்  இடத்திலிருந்த அலோன்சா ,12 ஆம் இடத்து ஷூமேக்கர் ,என பலரும் முதல் பத்து இடத்திற்குள் முன்னணியில் இருக்கிறார்கள் .மேலும் அலோன்சா வெப்பர் ,ரைகொணன் மிகவும் மோசமான எழுச்சியில் இருப்பது கவலையை தரத்தானே செய்யும் .


முப்பத்தி நான்காவது சுற்று ..
இப்போது Safety கார் களத்தை விட்டு வெளியேற முன்னணிக்கு சகல கார்களும் பாய்ந்து செல்ல முயற்சிக்க ,அலோன்சா வெறித்தனமான ஒரு வேகம்.மூன்றாம் இடத்து ஹெமிலடன் இரண்டாம் இடத்து க்ரோஷ்ஜியன் முதல் இடத்து வெட்டல் ...ஆம் ஒரே பாய்ச்சல் இப்போது ரேஸ் லீடர் - பெர்ரரியின் அலோன்சா .பெர்ராரியின் ரசிகர்கள் மத்தியில் ஒரே கொண்டாட்டம் வெடித்தது ..
பின்வரிசையில் அதே ஆலோன்சாவின் சகா மாசாவும் - கோபயாஷியும் வீல் டு வீல் உரசி மாசாவின் கார் டயர் பஞ்சர் .


முப்பத்தி ஐந்து ..
என்ன நடந்தது என்று உணரும் முன் வேறு அதிர்ச்சி காத்திருந்தது ..முதலிடத்து வெட்டல் கார் முற்றிலுமாக களத்தின் ஓர பகுதிக்கு சென்றது ..( ஒருவேளை Christian Horner உள்ளுணர்வு இதைத்தான் சொல்லியிருக்குமோ ?) ரெனால்ட் எஞ்சினால் வழங்கப்பட்ட - ஆல்டர் நேட்டர் மிகவு வெப்பமாகி என்ஜினை செயலிழக்க செய்து விட்டது .


காரை விட்ட வெளியேறிய வெட்டலின் கையுறையை கழற்றி வீசினார் .வெற்றியை உள்ளங்கையில் வைத்திருந்து அதை தவறவிட்ட ஆதங்கம் .. அங்கு ஒரு இறுக்கம் அழுத்தியது

நான்காம்  இடத்திலிருந்த ஹெமிலடன் ,ரைகொணனை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் .
இப்போது வேக நாயகர்களின் அணிவரிசை ..
1.அலோன்சா ,2.க்ரோஷ்ஜியன் ,3.ஹேமில்டன் ,4.ரைகொணன் ,5.டிக்கார்டியோ,6.ஷூமேக்கர் ,7.வெப்பர் ,8.மல்டோனடோ ,9.ஹுல்கேன்பேர்க் ,10.டி ரேஷ்டா .

முப்பத்தி எட்டு ...
ஆலோன்சாவிர்க்கும் அவரை தொடரும் க்ரோஷ்ஜியன் இடைவெளி ஒரு வினாடி .அடுத்துள்ள ஹெமில்டனுக்கும் க்ரோஷ்ஜியன் உள்ள வித்தியாசம் இரண்டு வினாடி .இன்னும் 19 சுற்றுக்கள் இருப்பது மீதம் இருக்கும் நிலையில் வேறு நிகழ்வுக்கு வாய்ப்பு இருக்கலாம் .
கடந்த மூன்று வளைவுகளில் வெப்பர் நான்கு இடத்திற்கு பின்தங்கினார் .


நாற்பத்தி ஒன்று ..
க்ரோஷ்ஜியன் மிக அதிகமான நெருக்கத்துடன் அலோன்சாவை நெருங்க அதற்கு பதிலடியாக செயல்பட தொடங்கினார் அலோன்சா ..
ஆனால் என்ன ஆனது க்ரோஷ்ஜியன் காருக்கு ?
 மெல்ல களத்தின் ஓரத்தில் தஞ்சமடைந்தது .கைகளை வேகமாக அசைத்துக்கொண்டு காரை விட்டு இறங்கினார் .அதே ரெனால்ட் ஆல்டர் நேட்டர் பிரச்சனை .கொஞ்சம் வித்தியாசம் இங்கு எரிபொருள் அழுத்தம் இல்லாமல் போனது .ஆனால் இடம் ஒன்றுதான் - ஆல்டர் நேட்டர்.
இப்போது க்ரோஷ்ஜியன் 2 ஆம் இடம் - ஹெமில்டனுக்கு தானாக வந்தது .

நாற்ப்பத்தி எட்டு ..
கேட்டர்ஹாம் அணியின் - விதாலி பெட்ரோவும் - டோரோ ரோசொவின் ரிக்கர்டியோவும் மோதி கொண்டதில் பெட்ரோவின் காரில் முன்பகுதி Wing காணாமல் போனது .விபத்து FIA - Stewart விசாரணைக்கு போனது - நீதிபதி -Mika Salo தீர்ப்பை தயார் செய்துகொண்டு இருந்தார்
அலோன்சா இப்போது ஹெமில்ட்டனை விட நான்கு வினாடிகள் வித்தியாசத்தில் அவர் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருந்தார் .

ஐம்பத்தி ஒன்றாவது சுற்று ..
அலோன்சாவை ஹேமில்டன் துரத்த ,ஹெமில்டனை மூன்றாம் இடத்து ரெய்கொணன் துரத்த ஐந்து வினாடிகள் வித்தியாசத்துக்குள் மூன்றுகாரின் வேக யுத்தம் வெப்பத்தை களத்தின் அதிகரித்தது .எட்டாம் இடத்தில் இருந்த மைக்கேல் ஷுமேக்கரின் டிரைவிங்கில் நிறைய பொறுமை மற்றும் வேகமும்  இருத்தது .(ஆமாம் மைக்கேல் நாங்கள் உங்களை போடியத்தில் பார்க்கவேண்டும் Go , go ).

ஐம்பத்தி மூன்று ..
 மைக்கேல் ஷுமேக்கர் - இப்போது ஒரு இடம் முன்னேறி ஏழாம் இடம் தொடர ..அவரை தொடரும் மார்க் வெப்பரும் , போர்ஸ் இந்திய டி -ரெஷ்டாவும் எப்போது பின் விளைவை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம் .நம்மை கவ்வுகிறது (எல்லாம் சும்மா இருந்தாலும் ஷுமேக்கருக்கு எந்த பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்று நீதிபதி -Mika Salo வுக்கு கூட தெரியாது .)

ஐம்பத்தி நான்கு...
அலோன்சா - ஹேமில்டன் போக்கில் எந்த மாற்றமும் இல்லை ..ஆனால் ரெய்கொணன் போக்கில் இரண்டாம் இடம் குறிக்கோளாய் இருந்தது .ஒவ்வொரு வளைவிலும் அந்த முயற்சியை முறியடித்தார் ஹேமில்டன் .ஆனால் ஒரு வினாடி இடைவெளி எதையும் நடத்தும் .
போர்ஸ் இந்தியாவின் டி ரேஷ்டா ஒருமுறை டயர் மாற்றியது மட்டுமே .மிச்சம் பண்ணும் நோக்கமில்லை .இடம் பறிபோய்விடும் என்பதால் ! ( அவருக்கு தெரியும் இந்தியா ஏழை நாடுதான் ஆனால் இந்தியர்கள் பணக்காரர்கள் என்று )

ஐம்பத்தி ஐந்து ..
களத்தின் கடைசி வளைவு அதாவது இருபத்தி ஐந்தாவது குறுகிய வளைவு நினைத்ததை சாதிக்கரெய்கொணன் பயன்படுத்த முயற்சிக்க ,ஹேமில்டன் அதை விடாமல் தடுக்க வளைவின் முடிவில் தடுக்க வேறு வழியே இல்லாத-  ரெய்கொணன் , ஹேமில்ட்டன் காரின் பின்பக்க டயரில் மோதிவிட அதனால் களத்தின் பக்கசுவரில் மோதி விபத்துக்கு உட்பட்டது .ஹெமில்டனின் இரண்டாம் இடத்து ஆசை அல்லது போராட்டம் ரேசிளிருந்து வெளியேற்றிவிட்டது !


ஐம்பத்தி ஆறு ..
இந்த விபத்தின் அலை ஓய்வதற்குள் ,மல்டோனடோ கார் ஹேமில்டன் காரில் மோதி மேலும் ஓர சுவரில் தள்ள ,மேலும் வெறுப்பான ஹேமில்டன் கோபத்தில் உச்சத்தில் சுமார் $ 2000 மதிப்புள்ள ஸ்டீயரிங்கை கழற்றி சுவர் பக்கம் வீசினார் .
இப்போது நான்காம் இடத்து போர்ஸ் இந்தியாவின் -நிகோ ஹுல்கேன்பேர்க்கை, மைக்கேல் ஷுமேக்கரின் கார் சட்டென முந்தியது இந்த நிலையில் மஞ்சள் கொடியசைக்க ரெட்புல்லின் வெப்பர் பின்தங்க வேண்டியாதாக ...ஷூமேக்கர் மூன்றாம் இடத்தை பிடித்தார் .

ஐம்பத்தி ஏழாவது கடைசி சுற்று ...
முதல் இடம் ..

ரெட்புல்லின் பெர்னாண்டோ அலோன்சா.வெற்றிக்கோட்டை தொட்டார் .இதுவரை ஏழு போட்டிகளில் ஏழு வீரர்கள் என்ற புதிய சாதனைக்கு முற்றுபுள்ளி வாங்க வைத்தார் ,இந்த ஆண்டில் இரண்டாவது முதல் இடம் ஆலோன்சாவினுடயது ( 5-1-9-7-2-3-5-1).உற்சாகமிகுதியில் களத்தை விட்டு வெளியேறாத அலோன்சா.தன் நாட்டின் ஸ்பானிஷ் கோடியை களத்தில் விரித்துவைத்து ரசிகர்களை நோக்கி ஆராவாரித்து கொண்டாடினார்.கோப்பையை பெற்றுக்கொள்ள அவர் போகாததால் Medical Car அவரை போட்டி நடத்தும் இடத்திற்கு அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டது .கோப்பை பெரும்முன் தேசிய கீதம் ஒலிக்கும்போது கண்களில் நீர் வழிய ஆரம்பித்து விட்டது ( எதிர்பாராத வெற்றி என்பதை விட 11 ஆம் இடத்தில் தொடங்கி முதல் இடத்தில் முடித்த உற்சாகம் !)

இரண்டாவது இடம்
கிமி ரைகொணன் மூன்றாவது முறையாக போடியம் வருகிறார் கிமி ரைகொணனும் , க்ரோச்ஜீயனும் அணியை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்திருப்பது லோட்டஸ் அணிக்கு பெருமை .அது மட்டுமல்ல இன்னும் பனிரெண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது .


மீண்டும் வருவேன் ... .என்கிறாரோ ?  அல்லது மீண்டு வந்து விட்டேன் என்கிறாரா ?
மூன்றாவது இடம் .
மைக்கேல் ஷுமேக்கர் .எத்தனை நாட்கள் ஆகிவிட்டது ? அல்ல எத்தனை ஆண்டுகள் 2006 பார்த்தது .43 வயதிலும் சிங்கம் ,சிங்கம்தானே ! வாழ்த்துக்கள் சுமி .

படத்தில் வரும் எல்லோரை பற்றியும் உடனே பேசி விடுகிறோம் .ஆனால் இவரை பற்றி எல்லோரும் பேசிவருகிறார்கள் .இந்த ஆண்டின் பார்முலா 1 சாம்பியன் யாராக வருவார் என இப்போது பேசிக்கொண்டு இருகிறார்களோ அவரோடு இவர் இருப்பார் .தேடுவோமே ?No comments: