உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Tuesday, June 19, 2012

கனடாவின் வெற்றி கோப்பையை பறித்தார் - லீவிஸ் ஹெமில்டன்



கடந்த ஜூன் 10 ஆம் தேதி கனடாவின் - Circuit Gilles Villeneuve ல் பார்முலா 1 ன்  ஏழாவது சுற்று போட்டி நடந்து முடிந்து விட்டது


பயிற்சி மற்றும் தகுதி போட்டி ..
சனிக்கிழமை நடந்த கடைசி பயிற்சி போட்டி நம் இந்தியா நேரப்படி மாலை 7:30 க்கு நடந்தது .இதில் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் முன்னிலை பெற்றார் .


அடுத்து, இரவு இந்தியா நேரப்படி11:30 க்கு நடந்த தகுதி சுற்றில் 107% நிர்ணயம் செய்தவர் வேறு யாருமல்ல சாட்சாத் நம் செபாஸ்டியன் வெட்டல் .அவர் நிர்ணனயித்த நேரம் 1:14.661 + 05.226 = 1:19.887 .நல்ல வேலை யாரும் இந்த தலையை வாங்கும் நேரத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை .

முதல் பத்து இடங்களுக்குள் போல நான்காம் இடத்து மார்க் வெப்பரும் , ஜென்சன் பட்டனும், Soft Tyre ஐ பயன்படுத்தி மொத்த சுற்றுக்கள் 70 ல் சுமார் 40 - 50 சுற்றுக்களில் முதல் ஐந்து இடங்களுள் வந்து பிறகு டயர் மாற்றம் செய்யலாம் என கணக்கிட்டார்கள் .ஆனால் Super Soft Tyre  ஐ பயன்படுத்தினால் நல்ல துவக்கம் கிடைக்கும் ஆனால் இன்றைய களத்தின் வெப்பநிலையை கவனித்தில் எடுத்து கொண்டால் விரைவில் டயர் மாற்றும் நிலை வரலாம் ,இதனால் ஏற்ப்படும் நேர இழப்பு தவிர்க்கப்படும் என யோசித்தார்கள் .விளைவு ?


அணி வீரர்களின் வரிசை ..
1 ,ரெட்புல் - செபாஸ்டியன் வெட்டல் 2.மெக்லரண் மெர்சீடிசின் - லீவிஸ் ஹெமில்டன் 3.பெர்ராரியின் - பெர்னாண்டோ அலோன்சா .4.ரெட்புல் - மார்க் வெப்பர் 5.     மெர்சீடிசின் - நிக்கோ ரோஷ்பெர்க் 6.பெர்ராரியின் - பிலிப் மாசா .7. ரோமின் க்ரோஜியன் 8.சகாரா போர்ஸ் இந்தியாவின் - பால்டி ரெஸ்டா 9. மெர்சீடிசின் - மைக்கேல் ஷூமேக்கர் .10.மெக்லரண் மெர்சீடிசின் -ஜென்சன்  பட்டன் .

முதல் சுற்று ...
முதல் காரிலிருந்து இருபத்திநான்கு கார்கள் வரை அனைத்துமே நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள் .

இரண்டாவது சுற்று ..
பெர்ராரயின் - பிலிப் மாசா ஆறாம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்கு முன்னேறி  அங்கிருந்த நிகோ ரோஷ்பெர்க்கை பின்னுக்கு தள்ள ,அவரை தொடர்ந்து பால்டி ரெஸ்டா மீண்டும் ரோஷ்பெர்க்கை ஏழாம்  இடத்துக்கு தள்ளினார் .ஊருக்கு இளைத்தவன் (வலிமையில் குறைந்தவன் ) பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல இந்த ஆண்டில் சீனா மற்றும் மொனாக்கோ ரேஸ் தவிர மற்றைய ஐந்து போட்டியிலுமே மெர்சடிஸ் அணி மிக பல பின்னடைவே சந்தித்துள்ளது என்பது சோகமான விஷயம் .

ஆறாவது சுற்று ..
ஐந்தாம் இடத்தில் சென்றுகொண்டு இருந்த பிலிப் மாசாவின் கார் ஒரு சுற்று சுற்றி களத்தை விட்டு வெளியேறி , மீண்டும் சுதாரித்து வருவதற்குள் பனிரெண்டாம் இடம்தான் காத்து இருந்தது ..

இருபதாவது சுற்று ...
அலோன்சா டயர் மாற்றி வரும்போது இரண்டாம் இடத்தை தொடர முயற்சிக்க அதற்குள் அந்த இடம் இப்போது ஹெமில்டன் காருக்கு கிடைத்தது

இருபத்தி இரண்டாவது சுற்று ..
பிரேக் ஷூ பிரச்சனையால் நம் நாராயண் கார்த்திகேயன் போட்டியை விட்டு வெளியேறினார் ..


இருபத்தி நான்காவது சுற்று ..
நமது நாராயண் கார்த்திகேயனின் HRT அணியை சேர்ந்த இன்னொரு டிரைவர் Pedro de la Rosa அதே ப்ரேக் பிரச்சனையால் வெளியேற அந்த அணி சோகத்தை சந்தித்தது



இருபத்தி ஆறு ..
இப்பொழுது டயர் மாற்றி வந்த வெட்டல் மூன்றாம் இடத்து அலோன்சாவை மிக உக்கிரமான துரத்தல் மூலம் இரண்டாம் இடத்தை கைப்பற்ற பாய்ந்து கொண்டு இருந்தார் .

நாற்பத்தி ஆறு ...
மைக்கேல் ஷூமேக்கர் காரில் - Drag Reduction System செயல்பாட்டில் Airflow தகடுகள் முற்றிலுமாக செயல் படாததால் போட்டியை விட்டு வெளியேறினார் .இந்தவருடம் எனது வலைப்பூவின் நாயகன் மைக்கேல் ஷூமேக்கருக்கு என்னதான் கெட்ட வேலையோ ? இதுவரை நடந்த ஏழு போட்டியில் ஐந்தில் ரிட்டயர்ட்,இரண்டில் பத்தாவது இடம்



.கடந்த 2006 ஆம் ஆண்டில் அவரின பிரசித்தம் பெற்ற போடியம் ஜம்பை பார்த்தது ..காத்திருகிறார்கள் பலகோடி ரசிகர்கள் .எப்போது அது மீண்டும் எப்போது பார்க்கப்போகிறோம் சுமி ?



ஐம்பத்தி ஒன்று ..

ஹெமில்டன் டயர் மாற்றம் செய்த உடன்அங்கே வலது பின்பக்க டயர் மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டதனால் சில மில்லி வினாடிகள் கார் தயங்கி கிளம்பியது .நல்லவேளை!  மீண்டும் களத்திற்குள் வந்த ஹெமிலடன் மூன்றாம் இடத்தை தக்கவைத்து கொள்ளவே முடிந்தது .

ஐம்பத்தி மூன்று ..
அதுவரை மூன்றாம் இடத்தை தக்கவைத்து கொண்டு இருந்த மார்க் வெப்பர் டயர் மாற்ற வர ,மிகப் பெரிய இடைவெளியாக மீண்டும் தொடர எட்டாம் இடமே கிடைத்தது வெப்பருக்கு.

ஐம்பத்தி ஆறு ..
இப்போது அலோன்சா - செபாஸ்டியன் வெட்டல் - ஹெமிலடன் -க்ரோஜியன் - மாசா - ரோஷ்பெர்க் என சின்ன சந்தேகம் வராத அளவுக்கு போட்டி போய்கொண்டு இருந்தது .ஆலோன்சாவின் இந்த வெற்றி ..என பார்முலா போட்டி அறிவிப்பாளர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .இந்த வரிசை மாறாது என பெர்ராரி ரசிகர்களின் உற்சாக கொடியசைவு ஒரு புதிய அலையை உற்பத்தி செய்துகொண்டு இருந்தது
ஐம்பத்தி எழு ..
இப்போது மாசாவை ,ரோச்பெர்க் தாண்டி அற்றம் இடத்தை தக்கவைதுகொண்டு அற்புதமான ட்ரைவின்கை வெளிபடுத்தினார் .

ஐம்பத்தி ஒன்பது ..
மாசா டயர் மாற்ற வந்த தன்னுடைய ஏழாம் இடத்திலிருந்து பத்தாம் இடத்தையே தொடர முடிந்தது ..

 அறுபத்தி இரண்டு ..
ஹெமிலடனின் காரின் வேகம் இப்போது ஆக்ரோசமாக இருதது ..மூன்றாம் இடத்திலருந்து இரண்டாம் இடத்து வெட்டலை மிக லாகவமாக பின்னுக்கு தள்ளினார் .அதுவரை முடிவு செய்து வைத்து இருந்த போட்டி முடிவுகளை ஏதோ ஹெமில்டன் செய்ய போகிறார் என எல்லோரும் மிக ஆர்வமாக கவனிக்க ..அங்கு பிரெல்லி டயரின் தர முக்கியத்துவ ஆதிக்கம் தெரிந்தது .


அறுபத்திநான்கு ..
இனியும் தாமதிக்க கூடாது என முடிவெடுத்த வெட்டல் டயர் மாற்ற வர மூன்றாம் இடத்திலிருந்து ஆறாம் இடம் பின் தங்க வேண்டியதாகிவிட்டது .
இப்போது இன்னொரு அற்புதம் .ஹெமில்டனின் காரின் வேக தாகம் இன்னும் அதிகரித்தது DRS பகுதியில் அலோன்சாவை பின்னுக்கு தள்ளி ..ஆமாம் முதலிடத்தில் இப்போது லீவிஸ் ஹெமில்ட்டன் .அவரின காதலி .Nicole Scherzinger மெக்லரண் அணியின் குழுக்களிடையே இருந்து துள்ளி குதித்தார் ..


அறுபத்தியாறு ...
இந்த அருமையான தருணத்திற்காக காத்திருந்தது போல லோட்டஸ் ரெனால்ட்டின்ரோமின் க்ரோச்ஜியன் அலோன்சாவை குறிவைத்து துரத்த எல்லோரும் ஆச்சர்யத்தில் நுனி சீட்டில் தொங்கிக்கொண்டு இருந்தார்கள் முடிவில் க்ரோச்ஜியன் அலோன்சாவை பின்னுக்கு தள்ளினார் .அபாரம் !.

அறுபத்தி ஏழு ..
இந்தாவருகிறேன் இழந்த இடத்தை பிடிக்க என்று அவசரபட்ட வெட்டல் களத்தின் சுவரில் உரச .. அணி பதட்டப்பட்டது .

அறுபத்தி எட்டு ..

சாபெர் பெர்ராரியின் - செர்கியோ பெரசுக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ நான்காம் இடத்திலிருந்து பேயாக பறந்து மீண்டும் ஒரு இடம், நான்காம் இடத்திற்கு அலோன்சாவை தள்ளினார் ..அட பாவமே !

அறுபத்தி ஒன்பது ...
அட அட பாவமே இப்போது வெட்டலும் அலோன்சாவை பின்னுக்கு தள்ள ஐந்தாம் இடம் அலோன்சாவை ஏற்றுகொண்டது .நல்லவேளை இன்னும் நிக்கோ ரோஷ்பெர்க் விட்டுவிட்டார் .அவருக்கும் ஆலோன்சாவிர்க்கும் வெற்றிக்கு உள்ள இடைவெளி வெறும் 431 மில்லி வினாடிகளேயாகும்.

எழுபது ....இறுதி சுற்று ...


முதல் இடம் ..
லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார் .வேட்டளிடம் இருத்த கனடாவின் பார்முலா கோப்பையை தட்டி அல்ல எட்டி பறித்தார் .மெக்லரண் மெர்சடிசின் அணிக்காக மூன்று முறை மூன்றாவதாகவும் இந்தமுறை முதலாவதாகவும் வந்து அசத்திவிட்டார் .

இரண்டாவது இடம் .



லோட்டஸ் ரெனால்ட்டின்ரோமின் க்ரோச்ஜியன்.இரண்டாவது முறையாக போடியம் ஏறுகிறார் இவர் .கலந்து கொண்ட ஏழு போட்டிகளில் மூன்றில் ரிட்டயர்ட் .இப்போது சுதாரித்து கொண்டார் .தரமான வெற்றி .

மூன்றாவது இடம் .



சாபெர் பெர்ராரியின் - செர்கியோ பெரேஸ்.இந்தமுறை யாருமே எதிபார்க்காத மெக்சிக்கன் டிரைவரின் வெற்றி சுவாரஷ்யமானது .


Pirelli-“It’s clear that the key for performance is the tyres.”

சாதரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம் .பார்முலா 1 கார் அணி வெற்றிகரமாக செயல்பட1. நல்ல நிதியுதவி 2
சிறந்த அராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை (R & D ) 3அனுபவமுள்ள ஓட்டுனர்கள் , 4.தொழில்நுட்ப குழு .ஆனால் இத்தனையும் போக நல்ல டயர் தேர்வு என்பதுதான் இப்போதய பார்முலா 1 அணி நிர்வாகத்திற்கு முன் நிற்கும் பிரச்சனை .அதன் விளைவை கனடாவின் போட்டி முடிவுகள் பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டது .
Pirelli டயர் மட்டுமே பயன்படுத்தும் படி போட்டியை நடத்தும் FIA சொல்லியிருகிறது .அதுவும் பொதுவாக நான்கு வண்ணங்கள் ( super soft - red; soft - yellow; medium - white; hard - silver.) கொண்ட டயர்கள் பயன்படுத்தப்படும்போது பிரச்சனை எப்படி வருகிறது ? அங்குதான் களத்தின் வடிவ அடிப்படையும் முக்கியத்துவம் பெருகிறது கனடா போன்ற குறுகிய அகலத்தை கொண்ட களத்தில் 70% வெற்றியை DRS பயன்படுத்தும் பகுதி (DRS -Zone) தீர்மானிக்கிறது .

இந்த களத்தில் பெர்ரரியின் தொழில்நுட்ப குழு ஒரே ஒரு முறை One-Stop Strategy டயர் மாற்றினால் போதும் என்று முடிவு செய்து இருந்தது .ஆனால் மெக்லரண் மெர்சிடஸ் அணியோ இருமுறை டயர் மாற்றம் செய்ய திட்டம் வைத்து இருந்தது .ரெட்புல் அணியோ இந்த இரு அணிகளின் முடிவுகளையும் பொருத்து செயல்படலாம் என இருந்தது .
செபாஸ்டியன் வெட்டல் முதல் 16 சுற்றுக்கு Super Soft டயரை பயன்படுத்திய பிறகு அடுத்த 47 சுற்றுவரை Soft டயரை பயன்படுத்தியதை தவிர்த்து 35 சுற்றில் வெட்டல் மாற்றியிருக்க வேண்டும் அதை தவிர்த்து 63 ஆவது சுற்றில் டயர் மாற்றியது தவறு .அதுவும் கூட 62 ஆவது சுற்றில் ஹெமில்ட்டன் பின்னுக்கு தள்ளிய பிறகு யோசித்து இருக்ககூடாது இந்த மோசமான் முடிவுதான் ரெட்புல்லின் செபாஸ்டியன் வெட்டல் முதலில் தொடங்கி வெற்றிபெற முடியாமல் நான்காவதாக வரும் நிலை . நல்லவேளை அப்போதாவது டயர் மாற்றியதால்தான் அலோன்சாவை வெட்டளால் 69 ஆவது சுற்றிலாவது பின்னுக்கு தள்ளமுடிதது .


பெர்ராரியோ இதை விட .Super Soft தொடங்கி அதில் 19 சுற்றும் மீதி 51 சுற்றுக்கள் Soft - Yellow .எனவேதான் ஐம்பது சுற்றுக்கு பிறகு லீவிஸ் ஹெமில்டன் முதல் 17 சுற்றுக்கு Super Soft .அடுத்த 33 சுற்றுக்கு Soft .கடைசி 20 சுற்றுக்கும் அதே Soft .இந்த கணக்கில் டயர் மாற்றி வந்தவுடன் ஆலோன்சாவால் ஈடு கொடுக்கமுடியாமல் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் .

ஏழாம் இடத்தில் தொடங்கி,லோட்டஸ் ரெனால்ட்டின் ரோமின் க்ரோச்ஜியன் முதல் 21 சுற்றை Super Soft டயரிலும் அடுத்த 49 சுற்றுக்களையும் Soft டயரையும் பயன்படுத்தி இரண்டாவதாகவும் ,அவரை தொடர்ந்து பதினைந்தாம் இடத்தில் தொடங்கிய சாபெர் பெர்ராரியின் - செர்கியோ பெரேஸ் முதல் 41 சுற்றை Soft டயரிலும் அடுத்த 29 சுற்றை Super Soft டயரையும் பயன்பத்தி மூன்றாவதாகவும் எபாடி வரமுடிந்தது சரி இந்த கணக்கு இவர்கள் கணக்கில் ஒத்துவரவில்லை .காரணம் ?
இவர்கள் இருவரும் அவர்கள் இருவரும் தங்களின் அணியின் சொல்படி டயரின் தன்மையை பாதுகாத்ததே இந்த வெற்றிக்கு அடிப்படை என பார்முலாவின் கருதுரையாளர் Jamesallen ரகசிய முடிச்சை அவிழ்க்கிறார் .


எனவே இந்த முடிவுகள் லோட்டஸ் அணியின் பாஸ் எரிக் புல்லர் “It’s clear that the key for performance is the tyres.”சொன்னது எவ்வளவு உண்மை என தெரிகிறது


இதில் இன்னொரு அருமையான வெற்றி பங்களிப்புக்கு உரியவர்கள் மெக்லரண் மெர்சிடஷின் தொழில்நுட்ப குழு .ஆமாம் .அவர்கள் மூன்றுமுறை ஹேமில்டன் காருக்கு டயர் மாற்ற எடுத்துக்கொண்ட நேரம் 21.115 வினாடிகள் மட்டுமே .எனவே கனடாவின் வெற்றிகோப்பை தானாக ஹெமிலடன் கைக்கு வரவில்லை .அத்தனையும் கணக்கு+ உழைப்பு = வெற்றி

 நடந்த ஏழு போட்டியில் ,முடிவுகள் மிக அற்புதமான ஏழு வித்தியாசமான போட்டியாளர்களை தேர்வு செய்து இருக்கிறது .அதிலும் மூன்று பேர் முன்னாள் உலக சாம்பியன் அல்லாதவர்கள் .


விறு விறுப்பான வெற்றியை சுமந்த கணம் தாங்காத லீவிஸ் அதனை காதலி Nicole Scherzinger ரிடம் பகிர்ந்துகொண்டார் அதற்காக, The Sun பத்திரிக்கை இப்படி சொல்லலமா Got your wet tyres on, Lew? 




இங்கு லீவிசின் காதலி நிகோலே ச்செர்ஜிங்கேர் பற்றி குறிப்பிடும் படி சொல்லவேண்டுமானால் இவர் ஒரு பாடலாசிரியர் ,பாடுபவர் ,நடிகர் ,நடனமணி, மாடல்,ரெகார்ட் தயாரிப்பாளர் ,டான்ஸ் மாஸ்டர் .அப்புறம் இன்று லீவிசின் காதலி






ஆனால் இவருக்கும் நமது எ.ஆர் ரகுமானுக்கும் இசை தொடர்பு Slumdog Millionaire - "Jai Ho! (You Are My Destiny)"ஆங்கில பாடல் வெளியீட்டில் தொடங்கி The Pussycat Dolls வரை தொடர்கிறது என்பது கூடுதல் தகவல் .




No comments: