உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, April 28, 2012

நீண்ட பெருமூச்சு ... ரெட்புல் ரெனால்ட் வெற்றி .
பல பிரச்சனைகளை கடந்து பக்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி - Sakhir International Circuit எந்த வித பயமும் (வெளியே தெரியாமல் ) இல்லாமல் முடிந்து .(போட்டி களத்திற்குமிக அருகில் சில நாட்களாக வன்முறைகள் நடந்தும்) .சென்ற ஆண்டு கைவிடப்பட்டு இந்த ஆண்டில் மிக குறைந்த ரசிகர்களின் வரவில் முடிவடைந்தது

கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரஆளும் .al-Khalifa குடும்பத்திற்கு மிக பெரிய வருமானம் பார்முலா ரேசால் இழக்க கூடாது என்பதுவும் ,அங்கு நடக்கும் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ப்ளூ சிப் கம்பனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கவும் ,உங்கள் கோபம் ஏதும் செய்ய முடியாது என எதிர்பாளர் Al-Wefaq குழுவுக்கு அறிவிக்கவுமே இந்த போட்டி .
ஆனால் பாராட்டியே ஆகவேண்டும் .நல்ல நிர்வாகம் .அருமையாக போட்டியை நடத்தி முடித்தார்கள் .

சரி .நாம் உள்ளே நடந்த போட்டியை பார்ப்போம் .

Pedro de la Rosa.
Sakhir International Circuit
களம்

இந்த போட்டியுடன் Sakhir International Circuit ல் நடந்த ஆறாவது போட்டியாகும் .ஐம்பத்தி ஏழு சுற்றுக்களை கொண்ட இந்த களத்தின் மொத்த நீளம் 308.238 கி. மீ .ஒரு சுற்றின் நீளம் 5.412 கி .மீ தூரம் .

இந்த களத்தின் முந்தய வேகபதிவாளர் 2005 ல் மெக்லரண் மேர்சடிஷின் - Pedro de la Rosa.அவரின் ஒரு சுற்றுக்கான நேரம் 1:31.447.இந்த களத்தில் மொத்தம் பதினைந்து வளைவுகள் உள்ளது நீண்ட வளைவுகளும் மாறி மாறி வருவது டிரைவர்களுக்கு சற்று சவாலான களம்தான்.

ஆரோக்கியமான நான்கு போட்டிகள்.இந்த ஆண்டில் மார்ச் 22 ஆம் தேதியில் ஞாயிறு பஹ்ரைன் போட்டியோடு  நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளது .ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறு அணிக்கு வெற்றிகளை தந்துள்ளது .

அதுமட்டுமா ?கடந்த 1971 ல் கடைசியாக மெக்சிக்கன் டிரைவர் -Pedro Rodríguez என்ற இரண்டாம் வந்தார் . 41 ஆண்டு வரை முதல் மூன்று இடத்திற்கான வெற்றியை பெறாத அந்த தேசத்து செர்ஜியோ பெரேஸ் இரண்டாம் மலேசியா போட்டியில் பெற்று தந்தார் .அவரை தொடர்ந்து 1998 ல் பிரான்ஸ் தேசத்து ஜீன் அலேசி ( Jean Alesi ) யின் வெற்றி அந்த தேசத்து வீரரின் மூன்றாம் இடத்திற்காக போடியம் கால் பதித்தது.இப்போது அதை மீண்டும் லோட்டஸ் அணிக்காக பஹரைன் போட்டியில் ரோமின் க்ரோச்ஜியன் பெற்று இருக்கிறார் .அதுமட்டுமா இதுவரை 111 ( பஹரைன் போட்டி இல்லாமல் ) போட்டியில் கலந்து கொண்டு கடந்த சீன போட்டியில் முதல் இடத்து வெற்றியை அதுவும் அந்த அணிக்காக 57 ஆண்டுக்கு பிறகு ஜெர்மனியின் - நிக்கோ ரோச்பெர்க் பெற்று தந்திருக்கிறார் .இப்படி பல மாற்றங்களால் அதுவும் ஆரோக்கியமான முடிவுகளை பார்முலா ரசிகர்களுக்கு 2012 ஆம் ஆண்டு வழங்கி கொண்டு  இருக்கிறது . 

 போட்டி.முதல் சுற்று ..
அற்புதமான துவக்கத்தை செபாஸ்டியன் வெட்டல் வெளிப்படுத்தி, முதலிடத்தை தக்கவைத்து கொண்டார் .அவரை தொடர்ந்து லீவிஸ் ஹேமில்டன் ,மூன்றாம் இடத்தில மார்க் வெப்பர் தொடர ..
அடுத்து ஏழாம் இடத்திலிருந்த லோட்டஸ் ரெனால்டின் ரோமின் க்ரோச்ஜியன் நாகாம் இடத்திற்கு பறந்தார் .அதே அணியின் கிமி ரேயகொனேன் பதினோராம் இடத்திலிருந்து ஒரே பாய்ச்சலாக ஏழாம் இடம் பிடித்தார் .என்ன ஆச்சர்யம் லோட்டஸ் ரெனால்ட் இந்த பாய்ச்சல் செய்கிறது ? ஐந்தாம் இடத்து மேர்சிடிசின் நிக்கோ ரோஷ்பெர்க் ஐந்தாம் இடத்தை தக்கவைத்து கொள்ள முடியாமல் பத்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் .
ஏற்கனவே கியர் பாக்ஸ் மாற்றத்தினால் பெனால்டியினால் பதினேழாம் இடத்தில் இருந்து இருபத்தி இரண்டாம் இடத்தில் துவங்கி பதினாறாம் இடத்தை பிடிக்க ..

நான்காம் சுற்று ...

DRS தொழில்நுட்பம் அனுமதிக்கப்பட்டது .ஏறக்குறைய இறக்கை கட்டிய குதிரை போல ரோமின் க்ரோச்ஜியன் கார் பறந்தது மூன்றாம் இடத்தை படிக்க முயல ,விட்டு கொடுக்காத வெப்பரின் மூன்றாம் இடத்து போராட்டம் தோல்வி ..அங்கு இப்போது க்ரோச்ஜியன்.இன்தாம் இடத்தில் பெர்ராரியின் ஆலோன்சாவும் ,எட்டாம் இடத்தில அந்த அணியின் பிலிப் மாசாவும் முன்னேறிக்கொண்டே இருக்க ...

எட்டாம் சுற்று .
ஏழாம் இடத்து ரேயகொனேன் இப்போதுஜென்சன் பட்டனை நெருங்க  அவருக்கு டயர் பிரச்சனை வர அந்த இடம் பறிபோனது .வழக்கம் போல பின்புறம் இடது வீலில் பிரச்னை .

பனிரெண்டாம் சுற்று ..
செபாஸ்டியன் வெட்டல் தன்னுடைய முதல் பிட் ஸ்டாப்புக்கு வந்தார் .அதே சமயம் பால்டி ரெஷ்டாவும் வந்தார் பிட் ஸ்டாப் .ஏழாம் இடத்தை தக்கவைதுகொள்ளும் .போட்டியில் பெர்ராரி அலோன்சா - மேக்ளரனின் ஜென்சன் பட்டன் .

பதினாறாம் சுற்று ..
லோட்டஸ் ரெனால்டின் ,கிமி ரேயகொணன் வேகம் மலைக்க வைத்தது .அவரை தொடரும் க்ரோச்ஜியன் நிச்சயம் அடுத்த அடுத்த சுற்றுக்களில் சவாலாக இருப்பது நிச்சயம் என தெரிந்தது ..

இருபதாம் சுற்று ...
பத்தாம் இடத்தின் பால்டி ரேஷ்டாவை பின்னுக்கு தள்ள ஷுமேக்கர் முயற்சி செய்து கொண்டுஇருக்க ..
வெட்டல் தன்னுடைய அனுபவத்தை கையில் எடுத்துகொண்டு மிக நேர்த்தியான ட்ரைவிங்கை தொடர்ந்தார் ..

இருபத்தி நான்கு ...
லோட்டஸ் -ரெனால்ட் அணிக்குள் மூன்றாம் இடத்து ரேயகொணன் இரண்டாம் இடத்து க்ரோஜியனை பின்னுக்கு தள்ளினார் .ஒருவேளை சீனியாரிட்டி யுத்தம் போல !
மௌரிஷ்யா - காஷ்வோத் அணியின் சார்லஸ்பிக் ஏர் பிரசர் பிரச்சனையால் வெளியேறினார் 

இருபத்தி எட்டு...
ஆலோன்சாவின் புகார் அணி ரேடியோ தொடர்புமூலம் வந்தது .. தன்னை நிக்கோ ரோஷ்பெர்க் பாதையிலிருந்து தள்ளி விட்டார் என்பதாக ..அதை கள நீதிபதி ஷ்டுவர்ட்ர்ஸ் ஆராய்ச்சிக்கு போனது 
முதல் பத்து கார்களும் சுமார் இருபது வினாடிகள் வித்தியாசத்தில் ஒன்றை ஒன்று துரத்திக்கொண்டு இருந்தன .வெட்டல் - ரேயகொணன் - க்ரோஜியன் -வெப்பர் -பால்டி ரெஸ்டா - பட்டன் - கோபயாஷி - நிகோ ரோஷ்பெர்க் - அலோன்சா மற்றும் மாசா .

வில்லியம் காஷ்வோர்த்தின் - பாஸ்டர் மால்டோனாவின் கார் பஞ்சர் .ரேசிளிருந்து விலகியது 

முப்பத்தி இரண்டு ...
ரோஷ்பெ கின் டிரைவிங் முறை முற்றிலுமாக மாறி இருக்கிறது . ஆம் நிறைய ஓவர் டேக்கிங் எடுப்பதுவும் கொடுக்க மறுப்பதுவுமாக நடந்தது .தன்னாலும் முடியும் என்ற வேகம் அவருக்குள் விதை விட்டு வளர காரணம் சீன ரேஸ் வெற்றி !

முப்பத்தி ஆறு ...
வெட்டலை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் கிமி ரேயகொணன் தீவிரம் காட்ட ,இதை புரிந்து கொண்ட ரெட்புல் அணி தொடர்ந்து வெட்டளுக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டே இருந்தது .ஆனால் வெட்டலின் பதில் கிமியை பார்த்து நீங்கள் 2007 ல் தான் சாம்பியன் நான் 2010 - 2011 என்பதாக இருந்தது .வாய்ப்பே தரவில்லை .

நாற்பது ...
டயர் மாற்றிய பின் வந்த பிலிப் மாசா பத்தாம் இடத்து ஹெமிலடனை குறிவைத்து துரத்த ,அவர் தன்னுடைய வேகத்தை 1:37.733 நிமிடமாக பதிவு செய்தார் 

நாற்பத்தி மூன்று ..
வெட்டல் மிக அற்புதமான ட்ரைவின்கை வெளிபடுத்தினாலும் அவரை ஆழம் பார்ப்பது போல தொடரும் ரேயகொணன் வாய்ப்பை தொடர்ந்து கொண்டே இருந்தார் .என்ன நினைத்தாரோ வெட்டல் அடுத்த இரு சுற்றுக்குள் தன்னுடைய இடை வெளியை மூன்று வினாடிக்கு உயர்த்தினார் .

நாற்பத்தி ஆறு ...
ஷூமேக்கரும் தன்னை - சாபெர் பெர்ராரியின் கமுய் கோபயாஷி முன்னேறுவதை கண்ணாடியில் பார்த்த போதும் ஏதும் செய்ய இயலாத ஒரு நிலையை தொடர ,அதே அணியின் செர்ஜியோ பெர்ஷும் ஷூமேக்கரை இந்த நேரத்தை பயன்படுத்தி முந்த முயல ஷூமேக்கர் சுதாரித்து தன்னுடைய தக்க வைத்து கொண்டார் ..

நாற்பத்தி ஒன்பது ..
வெட்டலும் - கிமி ரெய்கொணன் இடை வெளி 2.6 வினாடியாக குறைந்தது .ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பது போல இருவரும் போட்டி இட்டுக்கொண்டு இருக்க இரு அணிகளின் தலைமை, பெருமூச்சில் மூழ்கி இருந்தது ..

ஐம்பதாவது சுற்றில் ..
போர்ஸ் இந்தியாவின் பால்டி ரெஷ்டாவின் ஐந்தாம் இடத்தை பிடிக்க ரோஷ்பெர்க் முயல ,இருவருக்கும் இடைவெளி ஒருவினாடிக்கும் குறைய ரோஷ்பெர்க்கின் பலம் அதிகரித்தது .. தான் ஒரு ஜெர்மானிய டிரைவர் என்பதை ரோஷ்பெர்க்கும் ,அது அவ்வளவு சுலபமில்லை என்பதை பிரிட்டிஷ் டிரைவரும் சொல்லிக்கொண்டு இருக்க ..

ஐம்பத்தி இரண்டு 
வாவ் ! அருமையான ரோஷ்பெர்க் முயற்சி .ஆம் பால்டீ ரேஷ்டாவை மிக சாதுர்யமாக வளைவின் உள்வட்டத்தில் முன்னேறி அடுத்த வளைவில் பின்னுக்கு தள்ளினார் ரோஷ்பெர்க் .இது தந்திரமா ? தனி திறமையா ? இவ்வளவு நாள் எங்கு போயிருந்தது ரோஷ்பெர்க் ?

இப்போது ஐந்தாம் இடத்தில் ரோஷ்பெர்க் ...

ஐம்பத்தி மூன்று ...
லீவிஸ் ஹேமில்டன் ஒன்பதாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்து அலோன்சாவை ஒருவினாடி இடைவெளியில் துரத்தி கொண்டு இருக்க ..

ஐம்பத்தி நான்கு ...
வழக்கம் போல ஜென்சன் பட்டனின் காரின் இடத்து பக்கம் பின்புற வீலில் பிரச்சனை ஆனால் இந்த முறை Differential பகுதியில் .அவர் கார் பிட்லேனை விட்டு கிளம்பும்போது மெக்கானிக் கையில் சுடச்சுட ஒரு நட் இருந்தது .
மீண்டும் பதிமூன்றாம் இடத்தையே தொடர முடிந்தது பட்டன் .

வில்லியம்ஸ் அணியின் இன்னொரு டிரைவர் ப்ருனே சென்னா காரை செலுத்துவதில் பிரச்சனை சொல்லபட்டது ( a worsening problem with the handling of the car ) அது அணியின் தொழில் நுட்பவியலார்களுக்கு புதிதாய் தெரிய வரவே கார் திருப்பி அழைக்க பட்டு ரேஷிளிருந்து வெளியேறியது .இதன் மூலம் இரண்டு வில்லியம்ஸ் கார்களும் வெளியேறிவிட்டது .

ஐம்பத்தி ஐந்து ..
ஜென்சன் பட்டன் கார் பிட்லேன் திரும்பியது .ரேசில் தொடரவில்லை .ஐம்பத்தி ஆறு ...
ஜென்சன் பட்டனின் பத்தாம் இடம் காலியாக அந்த இடத்தை செர்ஜியோ பெரஸ் நிரப்ப முயல ,அந்த ரிஸ்க் உனக்கு வேண்டாம் என்பது போல ஷூமேக்கர் பிடித்தார் .

இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து காத்திருந்த முதலிடம் கை நழுவலாம் என உணர்ந்த வெட்டல் ஒரே வேகத்தில் மீண்டும் கிமி ரெய்கொனனுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியை மூன்று வினாடி என நிர்ணயம் செய்தார் ..ஐம்பத்தி எழு ..கடைசி சுற்று ...

முதலிடம் ..


இந்த ஆண்டின் முதல் வெற்றி செபாஸ்டியன் வெட்டளுக்கு .( ஆஸ்த்ரேலியாவில் இரண்டாம் இடம் ) கடைசி சுற்றின் வளைவில் காரை நிறுத்திவிட்டு ,போடியம் பகுதிக்கு - வெட்டல் ஓடி வந்தது சற்று வித்தியாசமாக இருந்தது . நீண்ட காத்திருத்தலின் அழுத்தத்தை வெளியேற்றவே அவ்வாறு செய்திருக்கலாம் !


வழியில் அவரின அணி தலைமை மெக்கானிக் Christian horner அவர் ஓட்டத்தில் பங்கெடுத்து கொண்டார் .நீண்ட அழுத்ததிலிருந்து அந்த அணி வெளிவந்து இருக்கிறது .அந்த அணியின் மார்க் வெப்பர் நான்காம் இடத்தை எழுதி வாங்கிகொண்டது போலவே இந்த முறையும் வந்தார் .


போடியத்தில் பரிசு வழங்கும் முன் வெற்றி பெற்ற டிரைவரின் தேசிய கீதம் ஒலிப்பது வழக்கம் .அப்போது வெட்டலின் நீண்ட பெருமூச்சின் வெளிப்பாட்டின் மூலம் அந்த அணியின் உணர்வு வெளிப்பட்டது .அது மட்டுமல்ல வெட்டளுக்கு பக்ரைன் தேசத்தில் கிடைத்த முதல் - முதலிடம்...

இரண்டாம் இடம் ...


லோட்டஸ் ரெனால்டின் - கிமி ரேயகொணன் பின்னிஷ் தேசத்தை சேர்ந்தவர் .2009 ஆண்டில் இத்தாலியில் பெர்ராரி அணிக்காக போட்டியிட்டபோது  கொண்டபோது மூன்றாம் இடம்வந்து ,போடியம் ஏறியவர் .( இடையில் 2010,2011 ஆம் ஆண்டுகளில் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வேறு விஷயம் ) போடியத்தில் இவரின் முகத்தில் சற்று சந்தோசம் குறைந்து இருந்தது .ஆம் ,முதலிடம் போச்சே .இன்னும் கொஞ்சம் முயற்சி இருக்கலாம் என்பது போல !

மூன்றாம் இடம் ...

அதே லோட்டஸ் ரெனால்டின் இன்னொரு வீரர் .இவர் ரோமின் க்ரோஷ்ஜிய .இவர் பிரெஞ்சு தேசத்தை சேர்ந்தவர் .இவர் பார்முலா 1 போட்டிக்கு புதியவர் .பார்முலாவுக்கு முந்திய GP2 Asia (Champion) & GP2 (Champion) .இவரை கொண்டு வந்த பெருமை லோட்டஸ் அணிக்கு சேரும் .

வீரர்களின் புள்ளி பட்டியல். 1 Sebastian Vettel (Germany) Red Bull 53
2 Lewis Hamilton (Great Britain) McLaren 49
3 Mark Webber (Australia) Red Bull 48
4 Jenson Button (Great Britain) McLaren 43
5 Fernando Alonso (Spain) Ferrari 43
6 Nico Rosberg (Germany) Mercedes AMG 35
7 Kimi Raikkonen (Finland) Lotus F1 34
8 Romain Grosjean (France) Lotus F1 23
9 Sergio Perez (Mexico) Sauber 22
10 Paul di Resta (Great Britain) Force India 15
11 Bruno Senna (Brazil) Williams 14
12 Kamui Kobayashi (Japan) Sauber 9
13 Jean-Eric Vergne (France) Toro Rosso 4
14 Pastor Maldonado (Venezuela) Williams 4
15 Daniel Ricciardo (Australia) Toro Rosso 2
16 Nico Hulkenberg (Germany) Force India 2
17 Felipe Massa (Brazil) Ferrari 2
18 Michael Schumacher (Germany) Mercedes AMG 2
19 Timo Glock (Germany) Marussia 0
20 Charles Pic (France) Marussia 0
21 Vitaly Petrov (Russia) Caterham 0
22 Heikki Kovalainen (Finland) Caterham 0
23 Pedro de la Rosa (Spain) HRT 0
24 Narain Karthikeyan (India) HRT 0

சஹாரா போர்ஸ் இந்திய அணி 


சஹாரா போர்ஸ் இந்திய அணி பால்டி ரெஸ்டா ஆறாம் இடம் வந்து ,எட்டு புள்ளிகளை ஈட்டி இருக்கிறார் .

பெண் போராளிகள் அல்ல.

பயந்து விட வேண்டாம் ! இவர்கள் பெண் போராளிகள் அல்ல .பாஹரைன் களத்தின் வீரர்களையும் ,ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் மங்கைகள்தாம் .பெண்களின் ஓட்டு மற்றும் உடை போன்ற அடிப்படை உரிமைகளுக்காக போராடும் நிலையில் - அவர்களின் வரையறுக்கப்பட்ட சுதந்திர உடைகளுடன் காட்சி அளிப்பதைத்தான் பார்கிறீர்கள் .


1 comment:

Caricaturist Sugumarje said...

நடக்குமா என்றிருந்தது பாய்ந்தோடிவிட்டது.

வர்ணனை அருமை. களம் பார்க்கும் பொழுதே வித்தியாசம் தெரிகிறது (15 வளைவுகள்)

வெட்டல் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் போல! :)