உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Saturday, April 21, 2012

பார்முலா 1ன் வேகத்தை பயமுறுத்தும் பயங்கரவாதம்




எல்லோரின் மனதிலும் அடுத்து பஹ்ரைனின் - Sakhir International Circuit நடக்க இருக்கும் போட்டியை பற்றிய ஆர்வம் இருக்கும் அளவுக்கு அங்கு நடந்து கொண்டு இருக்கும் அசம்பாவிதங்களையும் அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது .நேற்று பெயரிப்படாத அமைப்பு அமைப்புகள் வலைத்தளத்தில் பயமுறுத்துகிறது .ஏற்கனவே சஹாரா போர்ஸ் இந்திய அணி வெள்ளிகிழமை நடந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் கலந்து கொள்வதை கைவிட்டது அதை தொடர்ந்து சாபர் அணியின் மெக்கானிக்குகள்  சில கலகக்காரர்களை, முகமூடி அணித்து கையில் பெட்ரோல் பாட்டில்களுடன் ( தாங்கள் பயணம் செய்த பஸ் அருகே பார்த்த பயத்தில் உறைந்து போய் இரண்டாவதுபயிற்சி போட்டியில் கல்ந்துகொள்ளமால் கைவிட்டார்கள் .



பார்முலாவின் அமைப்பாளர் Bernie Ecclestone தன்னுடைய கவலையை ஆளும் அழ -க்ஹளிபா (  al-Khalifa ) மன்னர் குடும்பத்திடம் தெரிவித்துள்ளார் ஆனால் அவர்களோ எங்கள் நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்பதாக உலகுக்கு காட்டவே இந்த போட்டி நடந்து ஆகவேண்டும் என பிடிவாதமாக இருக்கிறார்கள் .அவர்களின் ஆட்டத்தை ஆட பார்முலா போட்டிகளும் அதன் வீரர்களின் உயிரும்தான் மேடையா ? உடன்பாட்டில் கையெழுத்திட்ட Bernie Ecclestone தலை எழுத்தை முடிவு செய்யட்டும் .


பயிற்சி போட்டி ...
வெள்ளிகிழமை பயிற்சி போட்டியில் மெக்லரண் மெர்சீடிஷின்- லீவிஸ் ஹெமிடன் ,ரெட்புல்லின் -செபாஸ்டியன் வெட்டல் ,டா சஹாரா போர்ஸ் இந்திய - பால்டி ரெஸ்டா வந்தனர் அடுத்த பயிற்சி போட்டியில் மெர்சீடிஷின் - நிக்கோ ரோஷ்பெர்க் ,ரெட்புல்லின் மார்க் வெப்பர் ,செபாஸ்டியன் வெட்டல் வந்தனர்
சனிகிழமை இறுதி பயிற்சி போட்டியில் -  நிக்கோ ரோஷ்பெர்க் ,செபாஸ்டியன் வெட்டல் , மார்க் வெப்பர்.வந்தனர் .ரெட்புல்லின் வசம் பிசி போட்டி மட்டுமா போனது ?
தகுதி சுற்று ,,,
( Q1 ) இருபத்தி நான்கு கார்களின் பலப்பரிட்சையில் முதல் சுற்றில் அதிவேக பதிவையும் அதே சமயம் 107% சதவிகிதத்தையும் நிறுவியது வழக்கம்போல சாபெர் பெர்ராரியின் செர்ஜியோ பெரஸ் 1:33.814 நிமிட :வினாடி .மில்லி வினாடியில் பறந்து.+(107%) 06.567=1:40.381 நல்ல வேலை இந்த முறையும் யாரும் இல்லை
(Q2) பதினேழு காரில் லீவிஸ் ஹேமில்டன் 1:33.209 வேக பதிவை செய்தார் .

 வீழ்வேன் என்று நினைத்தார்களோ ?


(Q3) பத்துக்குள் இப்போது வீழ்வேன் என்று நினைத்தார்களோ ? என்ற கேள்வியுடன் ரெட்புல்லின் - செபாஸ்டியன் வெட்டல் முதலாகவும் அடுத்து லீவிஷும் ,மார்க் வெப்பரும் வந்தார்கள் .

அழகிய பக்ரைன் 



நாளை இந்தியா நேரப்படி மாலை (மின்சாரம் இருக்கும் நேரப்படி) ஐந்து முப்பதுக்கு ஆரம்பிக்கும் .ஆனால் அழகிய பக்ரைன் தீவை ரசிக்க முன்னரே ஒருநேரத்திற்க்கு மணிக்குமுன்னரே  டி, வி முன் அமரவும் .

No comments: