உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Wednesday, April 4, 2012

மலேஷிய வெற்றி - பெர்ராரிக்கு உற்சாகம்
பார்முலாவின் வெப்பம் மலேஷ்யாவிர்க்கு பரவியது என்று நம் வலைப்பூவில் பதிவு செய்ததை நம் இந்திரன் படித்து விட்டார் போல ! மழையின் உற்சாக வரவேற்ப்புடன் , கடந்த 25 மார்ச் 2012 மலேஷ்யாவின் செபாங் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் தொடங்கியது .

 அற்புதமான மற்றும் சவாலான களம் மலேஷ்யாவின்  செபாங் இன்டெர் நேசனல் சர்க்யுட்.    310.408 கி.மீ நீளமுள இந்த களத்தின் நீண்டநாள் வேக பதிவாளார் வில்லியம்ஸ் -பி எம் டபிள்யு வின் - கொலம்பிய தேசத்தின் - Juan Pablo Montoya .அற்புதமான வடிவமைப்பில் உலகின் சகலரையும் ஈர்க்கும் களம்

முதல் இரண்டு கார்கள் மெக்ளறேன் மேர்சீடிஸ் கார்களின் லீவிஸ் ஹெமில்டனும் ,ஜென்சன் பட்டனும் தலைமை தாங்குவதுபோல காத்திருக்க ,அடுத்து முதன்முறையாக மெர்சீடிசின் மைக்கேல் ஷூமேக்கர் மூன்றாவது இடத்திலும் ,நான்கில் மார்க் வெப்பரும், ஐந்தில் செபாஸ்டியன் வெட்டலும் ,ஆறில் ரோமின் க்ரோச்ஜியன் ,ஏழில் நிக்கோ ரோஷ்பெர்க்கும் ,எட்டில் பெர்னாண்டோ அலோன்சா ,ஒன்பதில்
செர்கியோ Péரெழ் ,பத்தில் கிமி ரெய்கொணன் .ஏன் இவ்வளவு பெரிய இட விளக்கம் என்றால் , எப்போதும் போல முன்வரிசையில் இருப்பவர்கள் செய்ததை விட பின்வரிசையில் அதாவது ஆறாம் இடமும் ,  எட்டாம் இடம் கவனிக்க தகுந்தது .புதிரின் விடையை பார்ப்போம் ..


முதல் சுற்று ...
லீவிஸ் ஹெமில்டனின் மெக்லரன் அருமையான துவக்கத்தை செய்தார் .ஜென்சன் பட்டன் வேறு ஒரு யுக்தியை பயன்படுத்தி முன்னேற அனைத்து கார்களும் ட்ராக்கின் நடுப்பகுதியை நோக்கி முன்னேறும் என்பதால் அவர் ட்ராக்கின் வெளிப்புறமாக முன்னேறினார் .இதனிடையே மூன்றாம் இடத்தை நோக்கி லோட்டஸ் ரெனால்ட்டின் ரோமின் கோர்ச்ஜியன் பாய்ந்து செல்ல அந்த அதனை மார்க் வெப்பர் தக்கவைதுகொண்டார் .

அதே சமயம் மூன்றாம் இடத்தை இழந்த மைக்கேல் ஷூமேக்கர் மிகவும் மோசமான துவக்கத்தை செய்ய ,அவருக்கு பின்னால் வந்த ரோமின்  கோர்ச்ஜியன் - ஷூமேக்கரை ஒரு தட்டு தட்டி காரை முழு சுற்று ,சுற்றவிட்டார் .நல்லவேளை யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை .பதினாறாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் .

இரண்டாம் சுற்று ...
மழையின் சீற்றம் அதிகரிக்கரிதது .அனைத்து அணிகளின் பிட் லேனும் டயர் மாற்ற வரும் கார்களுக்காக காத்திருக்க ஆரம்பித்து ...

மூன்றாம் சுற்று ...

மீண்டும் ஒரு சோதனை ரோமின் கோர்ச்ஜெஈனுக்கு நடந்தது .ஐந்தாவது வளைவில் ட்ராக்கின் ஓரத்தின் சரளை கற்கள் மேல் பாய்ந்தது .பிறகு வரவில்லை .( ஒரு வேலை ஷூமேக்கரின் கோபமோ ? )

ஆறாம் சுற்று..
முன்னணியில் இருந்த ஜென்சன் டயர் மாற்ற வந்தார் .அடுத்து அலோன்சா ,நிகோ ரோஷ்பெர்க் என பிட் லேன் நிரம்ப தொடங்கியது .டயர் மாற்றிய ஜென்சன் பிட் லேனை விட்டு ட்ராக்கில் இணையும்போது அவருக்கு முன் பத்தாம் இடத்தில் ஷூமேக்கர் .எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ,சிறு போட்டி கூட இல்லாமல் ஜென்சன் கார் பறந்தது .தொழில்நுட்ப வளர்ச்சியில் மேக்ளறேன் அணியின் சவால் புரிகிறது .

ஏழாம் சுற்று ....
மழை வலுக்கவே ,அப்போது ஜென்சன் தன்னுடைய அணிக்கு ஒரு ஏரிக்குள் மிதந்து செல்வது போல இருப்பதாக அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் .இதை வர்ணனையாளர்களும் ரசித்தார்கள் .
சேப்டி கார் தன் கடமையை செய்ய வந்தது ,இப்போது மீண்டும் ஹேமில்டன் முதலிடத்தில் தொடர அடுத்து ,ஜென்சன் , பெரேஸ் , வெப்பர், அலோன்சோ , வேட்டல் , வேர்க்னே , மாசா, ரோச்பெர்க் மற்றும் நம் நாராயண் கார்த்திகேயன் என சேப்டி காரை தொடர ..
ஒன்றன் பின் ஒன்றாக தொடரும் வண்டிகள்கூட தெளிவாக தெரியவில்லை அவ்வளவு மழை !

ஒன்பதாவது
மழை மேலும் அதிகரிக்க ,சிவப்பு கொடியாசைக்கப்பட்டு தற்காலிகமாக போட்டி நிறுத்தப்பட்டது .  பத்தாம் சுற்று ...
51 நிமிடம் வரை போட்டி நிறுத்தப்பட்டது . பிறகு மழையின் கோபம் குறையவே - மெர்செடெஸ் பென்ஸ் C63 AMG Estate Official F1 மெடிக்கல் கார் ,கள பரிசோதனை செய்தது .பிறகு மெர்செடெஸ் பென்ஸ் SLS AMG Official F1 சேப்டி கார் பத்தாம் சுற்று முதல் - பதிமூன்று சுற்று வரை கார்களை ஊர்வலம் போவது போல அழைத்து சோதித்து விலகியது .

பதினைந்தாம் சுற்று ...
பட்டன் ,ரோஷ்பெர்க் ,இப்போது முன்வரிசை காலியாகவே சாபர் அணியின் செர்கியோ பெரஸ் இரண்டாம் இடத்தை தொடர்ந்தார் .இது ஒரு மாற்றத்தை உருவாக்கியது.இப்போது ஆலோன்சாவும் ,ஹெமில்டனும்,வெட்டலும் பிட் லேன் வரவே ஒரே களேபரமாக பிட் லேன் மாறியது .
ஹேமில்டன் கார் மெதுவாகவே பிட்லேனை விட்டு வெளியேறியது .

பதினேழாம் சுற்று ...
ஜென்சன் பட்டன் எதிர்பாராவிதமாக நம் நாராயண் கார்த்திகேயன் காரின்  பின்பகுதியில் மோதி தன்னுடைய பிரன்ட் விங்கை ( Front wing) சேதப்படுத்திகொண்டார் .எனவே மீண்டும் பிட்லேன் திரும்பி தன் இரண்டாம் இடத்தை இழந்தார்.அவர் பத்தொன்பதாம் இடத்தையே தொடர வேண்டியாதாகிவிட்டது .இந்த தருணத்தை பயன்படுத்திகொண்ட செர்கியோ பெரஸ் பிட்லேன் வந்து விரைவாக திரும்பி அலோன்சாவை பின்தொடர்ந்து தன்னுடைய இரண்டாம் இடத்தை தக்வைத்துகொண்டார் .

இந்த இடம்தான் போட்டியினை பற்றி நாம் ஆரம்பிக்கும்போது சொன்ன புதிர் (அதாவது ஆறாம் இடமும் ,  எட்டாம் இடம் கவனிக்க தகுந்தது .) அத்தனையும் மாறியது இப்போது ,ஆம் .முதலிடத்தில் தொடருவது அலோன்சா ,அடுத்து செர்கியோ பெரஸ் ,மூன்றாம் இடத்தில் ஹேமில்டன் .

இருபத்தி ஒன்று ...
ரோச்பெர்கின் நான்காம் இடத்தை வெட்டலும் , கிமி Räikköனேன் பறிக்க முயல மிக பெரிய வேக யுத்தம் நடத்தி கொண்டுஇருக்க ..இந்த சமயத்தில் DRS - (Drag Reduction System) அனுமதிக்கப்பட்டது .

இருபத்தி மூன்று ...
ரோச்பெர்கை, தன்னுடைய DRS  அஸ்திரத்தை பயன்படுத்தி , நான்காம் இடத்தை பிடித்தார் செபஸ்டியன் வெட்டல் .

இருபத்தி நாலு ...
ஒரு சிறப்பான முயற்சியை செர்கியோ பெரஸ் செய்தார் .முதலிடத்தின் அலோன்சாவை முந்திசெல்ல முயல ,பெர்ராரி கிடைத்த இடத்தை கொடுக்குமா ? ஒரு பிடி பிடித்தார் அலோன்சா ! அதிவேக பதிவு அது .

முப்பதாவது சுற்று ..
 வெட்டல் நான்காம் இடத்தில் ஹெமில்டனுடன் எட்டு வினாடிகள் வித்தியாசத்தில் வந்துகொண்டு இருதார் ..

அதே சமயம் பனிரெண்டாம் இடத்தில் வந்து கொண்டு இருக்கும் ஷூமேக்கரை மிக சாதாரணமாக கமுய் கொபயாசி முந்தி சென்றார் .இதே நிலை இருபத்தி ஆறாம் சுற்றில் ரோச்பெர்க் வெப்பரிடம் அனுபவித்தார் .ஆம் மேர்சீடிஷில் எதோ மிக பெரிய விஷயம் பின்தங்கி இருக்கிறது .இங்கு நடப்பதை பார்த்தால் அதை ஒத்து கொள்வதுபோல தெரிகிறது .இது டிரைவர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கும் .

முப்பத்தி ஐந்து ..
பட்டன் 17 ஆம் இடத்திலிருந்து மாசாவை பின்னுக்கு தள்ளி 16 ஆம் இடம்பிடித்தார் .

முப்பத்தி ஏழு ...
மீண்டும் மாசாவை டேனியல் ரிக்கர்டியோ பின்னுக்கு தள்ளினார் .

நாற்பத்தி இரண்டு ...

ஆண்ட்ரியன் சென்னா ,பால்டி ரெஸ்டா ,ஷூமேக்கர் ,மால்டோனா அனைவரும் பிட்லேனில் .கடைசி செட் டயர் பொருத்திக்கொண்டு இருந்தார்கள் .
மழை மீண்டும் வரவா? என காற்றிடம் விசாரித்து கொண்டு இருந்தது !.

நாற்பத்தி ஆறு ...
சாபர் அணியின் கமூய் கோபயாஷி ப்ரேக் பெய்லியர் ஆனதால் தனது போட்டியை தொடர முடியாமல் கைவிட வேண்டியதாகிவிட்டது

நாற்பத்தி எட்டு ..
ஹேமில்டன் இடத்தை பிடிப்பதில் வெட்டல் தீவிரமாக 2.8 வினாடி வித்தியாசத்தில் பிடிக்க முயல ,மோசமான ஒருவிசயம் அங்கு நடந்தது , நாராயண் கார்த்திகேயன் கார் ,வெட்டலின் காரின் இடது பின்பகுதி டயரில் மோதி பஞ்சர் ஆகிவிட்டது மூன்றாம் இடத்தை எளிதாக பிடிப்பார் என எண்ணிக்கொண்டு அணி காத்திருக்க ஏமாற்றம் ஆகிவிட்டது .இதற்காக கார்த்திகேயன் கார் பெனால்டி அனுபவித்தது .ஆனாலும் ஜெர்மன் சதோரர் ,வெட்டல் இந்த நிகழ்வை மிகமோசமாக வருணித்தார் .

 "He was off the track. In my view, it was over. As in real life, there are a few cucumbers on the road"


வெட்டல் நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என இந்தியர்கள் அனைவரும் ஆசைப்படுகிறோம் .ஆனால் இந்த விமர்சனம் .எங்களை வருந்த வைக்கிறது .

 ஐம்பதாவது சுற்று ...

முதலிடத்தில் தொடரும் ஆலோன்சாவுக்கும் .இரண்டாம் இடத்தில் அவரை தொடரும் பெர்ஷுக்கும் இடைவெளி ஒரு வினாடியாக குறைந்தது .மழை பெய்த களம் இவர்களிருவரின் வேகத்தால் வெப்பத்தை மீதும் பெற்றது .இவர்களை தொடர்ந்த ஹேமில்டன் ,வேட்டலின் துறத்தல் இல்லாததால் நிம்மதியாக தொடர்ந்தார் .

இந்த சமயத்தில் முன்வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த பெரஸ் கார் 14 ஆம் வளைவில் வரும்போது ,சட்டென பாதை விலகி நல்வேளை நிலைமை சுதாரித்து தன்னிலையை மீண்டும் பெற்றார் .அருமையான டிரைவ் .

ஐம்பத்தி இரண்டு ...

பனிரெண்டாம் இடத்திலிருந்த வெட்டல் மிக பெரிய வேகத்துடன் புள்ளி பட்டியலில் தான் பங்கை பதிவு செய்ய எத்தனித்து கொண்டு இருந்தார் .நான்காம் இடத்தில் அவருடைய அணியின் வெப்பர் நான்காம் இடத்தில் வலுவாக இருபது அணிக்கு ஆறுதல் .

ஐம்பத்தி நான்கு ..


 பத்தாம் இடத்திலிருந்த ,வில்லியம்சின் - பாஸ்டர் மல்டோனடோ எஞ்சின்  பிரச்சனை ஏற்படவே அவரை தொடர்ந்து வந்த ஷூமேக்கருக்கு பத்தாம் இடம் மிக எளிதாக கிடைத்தது .அதே சமயத்தில் ரோஷ்பெர்க் பதினைந்தாம் இடத்தில் போராடிக்கொண்டு இருந்தார் .

ஐம்பத்தி ஐந்து ...
இண்டாம் இடத்தில் தொடர்ந்த பெரஸ் தன்னுடைய நிலையை சரிசெய்து ஆலோன்சாவின் இடைவெளியை 2.7 வினாடிகளில் பாதுகாத்து கொண்டார் .

ஐம்பத்தி ஆறு, இறுதி சுற்று ...

முதல் இடம் .


எந்த மாற்றமும் இன்றி , பெர்ராரியின்- ஸ்பானிஷ் தேசத்தின் டிரைவர் பெர்னாண்டோ ஆலோனசா முதலிடத்தினை படித்தார் .இவர் ரெனால்ட் அணியிளிருந்தபோது ( 2003 - 2006 ,2008 - 2009 ) 2005 மற்றும் 2006 ல் உலக சாம்பியன் .இப்போது பெர்ராரியில் 2010 ஆம் ஆண்டிலிருந்து இருக்கிறார் .2010 ல் இரண்டாம் இடமும் , சென்ற ஆண்டில் நான்காம் இடமும் வந்தார் .இந்த வருடத்தின் முதல் வெற்றி இது .ஏற்கனவே இருபத்தி ஏழு வெற்றிகளை பதிவு செய்துள்ளார் .இந்த களத்திற்கும் பெர்னான்டோ ஆலோன்சாவிர்க்கும் ஒரு ராசி உண்டு .ஆம் கடந்த 2005 ல் ரெனால்ட் அணியில் இருந்தபோதும அடுத்து 2007 ல் மேலரண் மெர்சீடிசில் இருந்தபோதும் ,அதர்க்கு அடுத்து இந்த ஆண்டு பெர்ராரியில் இருக்கும்போதும் வெற்றி பெற்றுள்ளார் .


இரண்டாம் இடம் ..


சாபெர் பெராரியின் - செர்கியோ பெரஸ் .சென்ற ஆண்டில் இந்த அணி மூலம் F 1 க்குள் அடியெடுத்து வைத்தவர் .சென்ற ஆண்டில் 14  புள்ளிகள் எடுத்து 16 ஆம் இடத்தை பிடித்தார் .இந்த ஆண்டு மிக சிறந்த துவக்கம் .அது மட்டுமல்ல ஒரு மெக்சிகன் டிரைவர் போடியம் ஏறுவது இதவே முதல் முறையாகும் ,அந்த நாடே கொண்டாடும் வெற்றி இது .

மூன்றாவது இடம் .

நம் இங்கிலாந்து தேசத்தின் லீவிஸ் ஹேமில்டன் .மேக்ளரேன் மெர்சிடிஸ் அணி மூலம் 2007  F1 க்குள் அறிமுகமானவர் .2008 ல் உலக சாம்பியன் .இது அவரின 44 ஆவது போடியம் வெற்றி .இந்த முறை சஹாரா போர்ஸ் இந்திய அணி ஏழாம் , மற்றும் ஒன்பதாம் இடத்தையும் தக்கவைத்து கொண்டது குறிப்பிட வேண்டிய விஷயம் .

நியுட்டன்ஸ் விதி (சரியாக படிக்காததால்!)


 கார்களின் வெப்பத்தை மழை தனித்து .காணவந்த ரசிகர்கள் மனது - மலேஷ்யாவின் மங்கைகளால் வெப்பமானது .சரியாக படிக்கவில்லை என்றால் நியுட்டன்ஸ் விதியை தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது ஒவ்வொரு வெப்பத்தையும் , தனிக்கும்போது அதர்க்கு சமமான எதிர்வெப்பம் உருவாகும் என்பதாக !


ஒரு தலைப்பு செய்தி ,ஆனால் கடைசியில் !.


நண்பர் சுகுமார் ( "Sugumar Je" <sugumarje@gmail.com> Caricaturist ) மீண்டும் ஒரு அருமையான வலைப்பூ தளவடிவமைப்பு,புதிய சேர்க்கைகளுடன்  தந்திருக்கிறார் .அவருடன் பள்ளித்தோழனாக நான் இருக்கும்போது ( 1984 - 85 ) அவரும் நானும் திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி - அருகில் உள்ள குமரன் பூங்காவில் உட்கார்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டை மற்றும் அங்கு ஏதாவது காட்சியை படம் வரைவார். அதர்க்கு நான் கவிதை ! எழுதுவேன் . இன்றும் அவருக்கு படம் வரைவது தொழில் ,எழுதுவது ( கணக்கு ) எனக்கு தொழிலாகி விட்டது .இதைத்தான் “The Secret” புத்தகத்தில்“You can have anything that you want”. அதனை எழுதிய Rhonda Byrne சொல்கிறார்போல !

1 comment:

Sugumar Je said...

நல்ல விறுவிறுப்பு... 51 நிமிட மழை... இவ்வளவு அழுத்தமான மழை போட்டியின் வெப்பத்தை தணிக்கவில்லை :)

மழையின் கதாநாயகன் மைக்கேல் ஷுமேக்கர் தவறவிட்டது சோகம்.

நம்ம நரேனுக்கும் நேரம் சரியில்லையோ???

ஓவ்வொரு போட்டியிலும் இந்தியா அணி, நானும் இருக்கேன் என்கிறதோ?

:D பாராட்டுக்கு நன்றி!