உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, April 20, 2012

ஐம்பத்தி ஏழு ஆண்டுக்கு பிறகு...மெர்சீடிஸ் அணிக்கு வெற்றி


பார்முலா 1 ன் மூன்றாவது போட்டி கடந்த மார்ச் 15 ஆம் நாள் சீனாவின்  ஷாங்காய்  இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் பல வித்தியாசமான முடிவுகளுடன் நடந்தது .அற்புதமான ஷாங்காய் சர்க்யூட்டில் இன்று நடப்பது  ஒன்பதாவது போட்டியாகும் .இந்த  சர்க்யூட் மிகவும் டிரைவர்களால் விரும்ப்படுவதர்க்கு காரணம் இதன் நீண்ட வேக பாதை மற்றும் வளைவுகள் சவாலாக இருப்பதுதான் .

 ஷாங்காய் சர்க்யூட்களத்தின் மொத்த நீளம் 305:066 கி.மீ .ஒரு சுற்றின் தூரம் 5.451 கி .மீ .இதனை பெர்ராரியின் F2004 காரில் 2004 ஆண்டில் அதிவேகத்தில் கடந்த வேக நாயகன் திருவாளர் மைக்கேல் ஷுமேக்கர் அண்ணாச்சிதான் .அவரின அதிவேக பதிவு ஒரு நிமிடம் :முப்பத்தி இரண்டு வினாடிகளும் .இரநூற்றிமுப்பத்திஎட்டு மில்லி வினாடியாகும் .( இதுதான் நீளம் ).

பயற்சி போட்டி நிலவரம் ..

மார்ச் பதிமூன்றில் நடந்த பயிற்சி  போட்டியில் முதல் போட்டியில் லீவிஸ் ஹெமில்டனும் .இரண்டாவது போட்டியில் மைக்கேல் ஷூமேக்கரும் ,14 தேதி  நடந்த பயிற்சி  போட்டியிலும்,லீவிஸ் வந்தார் .

தகுதி சுற்றில் ...


(Q1) முதல் தகுதி சுற்றின் 107 % தலை விதி யை நிர்ணயம் செய்தவர் சாபெர் -பெர்ரரியின் செர்கியோ பெரஸ் அவரின் 1:36.198 வேக பதிவு + (107%) 0:06.733 =1:42.931 .நல்லவேளை யாரும் இந்த வம்பில் மாட்டவில்லை இந்த முறை .இரண்டாவது (Q2) மார்க் வெப்பர் 1:35.700 அதிவேக பதிவை செய்தார் ஆனால் இறுதி பத்துக்குள் ஒன்றில் மேசீடிஷின் நிக்கோ ரோஷ்பெர்க்  1:35.121 முதலிடத்திலும் .இரண்டாவது இடத்தில் லீவிஷும் 1:35.626 , மூன்றாவது இடம் மைக்கேல் ஷுமேக்கரும் 1:35.691 போட்டியின் துவக்க நிலையை ( Grid ) தக்கவைத்து கொண்டனர் .
மழை எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் சீதோஷ்ண நிலை ஜில் ,ஜில்தான் .

ரேஸ் ...


ஞாயிறு மதியம் இந்தியா நேரப்படி 12:30 க்கு போட்டி அணிவரிசையில் இந்த ஆண்டு மேற்சீடிஷின் இரண்டு கார்களும் முதல் வரிசையில் நின்றன . 57 ஆண்டுக்கு  பிறகு அந்த அணியின் வெற்றி கோப்பை கனவு வெகுதூரத்தில் நின்று கொண்டு  இருக்கிறது .ஆம் கடந்த 1955 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள் இத்தாலியில் நடந்த போட்டியில் அந்த அணியின் அர்ஜென்டினா தேசத்தின் டிரைவர் - Juan Manuel Fangio மேர்சீடிஸ் W196 கார் முதலிடத்தில் தொடங்கியது .அந்த வெற்றி அதன் உலக சாம்பியன் பட்டதையும் பெற்று தந்தது ( அப்போது அணிகளுக்கான சாம்பியன்ஷிப் இல்லை ) இன்று அந்த தொடக்கம் பார்க்க உற்சாகமாக இருந்தது அதன் ரசிகர்களுக்கு ..


முதல் சுற்று ....


அற்புதமான துவக்கத்தை ரோஷ்பெர்க் ஏற்படுத்தினார் .அவரை தொடர்ந்து .மைக்கேல் ஷூமேக்கர் அடுத்து சாபர் அணியின் கோபயாஷியையும் ,லோட்டஸ் அணியின் ரெய்கொனனையும் பின்னுக்கு தள்ளி மேக்ளரனின் - ஜென்சன் பட்டன் மூன்றாம் இடத்தை பிடித்தார் .ஆனால் அந்த அணியின் ஹேமில்டன் கியர் பாக்ஸ் மாற்றத்தினால் தண்டிக்கப்பட்டு இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திலிருந்து துவங்கி தனக்கு முன் இருந்த மார்க் வெப்பறை பின்னுக்கு தள்ளி ஹெமிலடனை தொடர்ந்தார் .
பின்வரிசையில் இதை விட அனல் பறக்க மாற்றங்கள் நடத்து கொண்டு  இருந்தன .

மூன்றாவது சுற்று ..
பட்டனுக்கும் - அவரை தொடரும் ரெய்கொனனுக்கும் மிக பெரிய போட்டி நடந்து கொண்டு இருந்தது .ஆனால் மேக்ளரனின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் கை கொடுத்தலை பட்டன் பயன்படுத்திக்கொண்டு அனாயாசமாக முன்னேறிக்கொண்டு இருந்தார் .

ஆறாவது சுற்று ...
செபாஸ்டியன் வெட்டல் மன நிலையை போல காரும் பதினோராம் இடத்திலிருந்து பின்னோக்கி போய்கொண்டு  இருந்தது . முன்வரிசையில் ரோஷ்பெர்க் - ஷூமேக்கர் இடைவெளி நீள தொடங்கியது ..

ஒன்பதாவது சுற்று ...

ரோஸ்பெர்க் தன்னுடைய இடைவெளியை நான்கு வினாடிகளாக அதிகபடுத்த ,எப்போதும் அவரை முந்தி செல்லும் ஷூமேக்கர் மிக பொறுமையாக பின்தொடர்ந்தார் .

பனிரெண்டாவது சுற்று ...


ஷூமேக்கர் பிட்லேன் டயர் மாட்டும்போது வலது முன்பக்க வீல் நட் சரியாக பொருத்தாததால் அதனை அதன் மெக்கானிக் Frantically படத்தின் இடது பக்கம் கையுறையுடன் சைகை செய்வது தெரியும் .ஆனால் இதை கவனிக்காது கிளம்பவே ட்ரம்மை விட்டு டயர் விலகவே ஷுமேக்கரின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வெற்றி மீண்டும் கை நழுவியது .அவரின பயணம் முற்றுபெற்றது .

பதினைந்தாவது சுற்று ...
இந்த பாதிப்பு ஏதும் இல்லாத ரோஷ்பெர்க் தன்னுடைய அழகான பயணத்தை தொடர ..

பதினெட்டாவது சுற்று ..
எட்டாம் இடத்திற்கு  ரோமின்  க்ரோச்ஜீனும் - பெர்ஷும் வேக யுத்தம் செய்ய ,வெட்டல் தன்னுடைய சக்தியை திரட்டி பத்தாம் இடத்தை தொட சென்னா அவரை துரத்திக்கொண்டு இருந்தார் ..

இருபத்தி இரண்டு ...
மிக நீண்ட மாற்றங்களுக்கு பிறகு ரோப்ஷ்பெர்க் , பட்டன் .ஹேமில்ட்டன் ,வெப்பர்,ரெய்கொனான் ,அலோன்சா ,கோபயாஷி ,க்ரோச்ஜியன் .வெட்டல் ,பெரஸ் ,சென்னா ,மால்டோனா ,டி ரெஸ்டா, மாசா,வெர்ஜின் ,ஹுல்பெர்க் ,கொவளைனேன் ,ரிகார்டியோ ,பெட்ரோவ் ,கிளாக் ,சார்லஸ் பிக் ,ரோசா ,நம் கார்த்திகேயன் என வரிசை தொடர்ந்தது .

இருபத்தி ஆறு ...
வெட்டல் ,நீண்ட உத்வேகத்துடன் நான்காம் இடத்தை நோக்கி முன்னேறி  இருந்தார் ஆனால் இன்னும் அவரின இரண்டாவது நிறுத்தத்தை செய்யவில்லை .எனவே அந்த இடம் நிரந்தரம் இல்லை ,ஆனால் 11 ல் தொடங்கி,15 க்கு தள்ளப்பட்டு ,நான்காம் இடம் பிடிப்பது தொழில்நுட்ப சாத்யத்தினால் மட்டும் முடியாது .

முப்பது ...
மாசா வழிகொடுத்து தன்னுடைய அணியின் அலோன்சாவை முன்னேற செய்தார் .மூன்றாம் இடத்தை பிடிக்க முன்னேறிய வெட்டலை பின்னுக்கு தள்ளி பட்டன் மூன்றை தக்கவைத்தார் ,

முப்பத்தி நான்கு ...
நான்காம் இடத்திலிருந்த ஹெமில்ட்டனை நெருங்க முயற்சி செய்த வெப்பரின் ஆசை நிறைவேறவில்லை .மிகப்பெரிய தடுப்பாட்டமாக் ஹெமில்டனின் நகர்வு இருந்தது .Gate.

முப்பத்தி  எட்டு ..
பிட்லேன் சென்று வந்த ரோஷ்பெர்க் இரண்டாம் இடத்தில் தொடர பட்டன் இப்போது ரேஸ் லீடர் .அடுத்து மூன்றில் ,ஹேமில்டன் .இரண்டு இங்கிலாந்து வீரகளுக்கு இடையே ஒரு ஜெர்மானியர் .அதோடு வரிசையாக மூன்று மேர்சீடிஸ் எஞ்சின் உறுமல் சத்தத்தில் ஒருவிசயம் சொல்லப்பட்டது .ஆம். இந்த ஆண்டு எங்களின் ராஜ்ஜியம் - ரெனால்ட் இல்லை, என்பதுபோல ! ( பார்ப்போம் )

நாற்பத்தி இரண்டு
ஐந்தாம் இடத்திலிருந்த மாசா பிட்லேன் செல்ல ,அந்த இடத்தை கிமி ரைகொணன் பிடிக்க ..
அனைத்து அணிகளின் கவனம் பிட்லேன் தாமதத்தை தவிர்ப்பதுவும் , டயர்களின் மாற்றங்களில் போராட்டத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்பதிலேயே இருந்தது .

நாற்ப்பத்தி ஆறு ...
இப்போது எதிரிகளே இல்லாத குதிரைப்படை தலைவன் போல ரோஷ்பெர்க் இருபது வினாடிகள் வித்தியாசத்தில் தன் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டு இருக்க ..

ஐம்பது ...
இரண்டாம் இடத்தில் இருந்த வெட்டலை பின்னுக்கு தள்ள பட்டன் தன்னுடைய வேக பிரயோகத்தை கையில் எடுத்தார் .அவரை தொடர்ந்த ஹேமில்டன் பட்டனின் யுத்தத்தை பயன்படுத்தி கொள்ள பின்தொடர ,கிமி தன்னுடைய டயர் ஒத்துழைப்பு இல்லாது பின் தங்க, வெப்பர் ஐந்தாம் இடத்தை எளிதில் பிடித்தார் .இன்னும் ஆறு சுற்றுகளே மீதம்முள்ள நிலையில் முன்னணியில் அனல் பறக்க டயர்கள் தேய்ந்து கொண்டு இருந்தன ...

ஐம்பத்தி ஒன்று ..
வளைவில் முழு கவனமும் வெட்டளுக்கு இருக்கும்போது . பட்டன் சமயோகிதமாக ட்ராக்கின் வளைவின் உள்பகுதியில் அற்புதமான மெக்ளரனின் வேகத்தை பயன் படுத்தி முன்னேறி பாய்ந்து இரண்டாம் இடத்தை பறித்தார் ....

ஐம்பத்தி நான்கு  ...வில்லியம்ஸ் அணியின் மால்டோனாவும் , சென்னாவும் அருமையான வேக பாய்ச்சலை ஏற்படுத்தி பத்து இடத்துக்குள் தங்கள் அணியை தக்கவைத்துக்கொள்ள இறக்கு இன்றி பறந்து கொண்டு இருந்தது ,,,பெர்ராரியின் அலோன்சா தன்னுடைய எட்டாம் இடத்தை இழக்கும் அபாயம் துவங்கியது ..

ஐம்பத்தி ஐந்து ...
நான்காம் இடத்திலிருந்த ஹேமில்டன தன் சகா பட்டனின் நுட்பத்தை பயன்படுத்தி மீண்டும் வெட்டலை இன்னும் ஒரு இடம் பின்னோக்கி தள்ளி நான்காம் இடம் தள்ளினார் .மெக்ளரனின் என்ஜீனியர்கள் இந்த ஒரு கனத்தை உற்சாகமாக கொண்டாடினர் .

ஐம்பத்தி ஆறு ,கடைசி சுற்று ...


வெட்டலின் இந்த சறுக்கலை மெக்லரண் அணிமட்டுமல்ல உபயோகபடுத்தியது அவர் அணியின் மார் வெப்பரும்தான் .ஆம்.அவரும் வெட்டலை பின்னுக்கு தள்ளி முன்னேற -  இரண்டாம் இடத்தில் வந்துகொண்டு இருந்த வெட்டல் ஐந்து சுற்றுக்குள் ஐந்தாம் இடம் தள்ளப்பட்டுவிட்டார் .இந்த கோபம் கட்டாயம் அந்த இளம் ஜெர்மானிய வீரரின் மனதில் பதிந்து அடுத்த ரேசில் வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை .கடந்த இரண்டு ஆண்டும் அவர் ரெட்புல் காரை மட்டுமே இயக்கினார் . இந்த ஆண்டு அவரையே அவர் இயக்க கற்றுக்கொண்டு வருகிறார் ...வாழ்த்துக்கள் வெட்டல் .

முதலாம் இடம் ..


மெர்சீடிசின் முதல் வெற்றி .நிக்கோ ரோஷ்பெர்க்குக்கும் இதுவே கன்னி வெற்றி .அருமையான வெற்றி ,இரண்டாவது வந்த ஜென்சனுக்கும் - ரோஷ்பெர்குக்கும் இடைவெளி  20.626 வினாடிகள் .ஏற்கனவே ஐந்து மொழிகளை அறிந்த ரோஷ்பெர்க் ஆறாவது மொழியாக வேகம் எனும் மொழியையும் அறிந்தார் .


இரண்டாம் இடம் ..இங்கிலாந்தின் - மெக்லரண் மெர்சீடிசின் ஜென்சன் பட்டன் .மூன்று போட்டிகளில் 1 - 3 - 2 என போடியத்தில் தான் காலை பதித்து கொண்டே இருக்கிறார் .அவரின் வெற்றியை கொண்டாடும்காத்து  இருக்கிறது அவர் அணி மட்டுமல்ல அவரின இனிய காதல் தேவதை - Jessica Michibata வும்தான் .

மூன்றாம் இடம் ...


அதே அணியை சேர்ந்த லீவிஸ் ஹேமில்டன் .3 - 2 -3 என வது கொண்டு இருக்கிறார் .முதல் மூன்றி இடங்கள் நிச்சய வெற்றி என தாரக மந்திர உச்சாடனம் மெக்லரண் மெர்சீடிசின் கொள்கை போல .இந்த அணிதான் 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

நான்காம் இடம்..


இதை பற்றி இந்த முறை சொல்ல காரணம் ? நம் மார்க் வெப்பர்தான். கடந்த மூன்று போட்டியிலும் அவரே நான்காம் இடம் பிடித்து கொண்டார் .4 - 4 - 4 .இவரின் இந்த தொடர்ந்து மூன்று ரேஸ்களிலும் , வெற்றியின் புள்ளிகள் அணியின் இரண்டாம் இடத்தை தக்கவைக்க உதவுகிறது .அருமை வெப்பர்

இந்த போட்டியில், சஹாரா போர்ஸ் இந்திய அணி புள்ளிகளை பெறாமல் ஏமாற்றி விட்டது .

இந்த தாமத பதிவுக்கு காரணம் சொல்ல எனக்கே பிடிக்கவில்லை .ஆனால் காரணம் இருக்கிறது .நேரடி போட்டி தமிழக மின்சார பற்றாகுறையால் தவிக்க ,நான் ரேஸின் எதோ ஒரு பகுதியை மறு ஒளிபரப்புக்காக காத்து அறிந்து கொள்ள வேண்டுமாக  இருக்கிறது .


நான் தாமதம் .ஆனால் போட்டியன்றே இவர்கள் ஒய்யாரமாக நடந்து ரசிகர்கள் மனதில் கலவரம் மன்னிக்கவும் ஊர்வலம் வந்து போனார்கள் .கலவரம் என்றவுடன் இப்போதைக்கு நினைவுக்கு வருவது நம் அடுத்த ரேஸ் நடக்க இருக்கும் Bahrain Grand Prix பல அரசியல் சூழலால் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது .இன்றைய முதல் பிசி போட்டியில் கலந்து கொண்ட நம் சஹாரா போர்ஸ் இந்தியா அணி இரண்டாவது பயிற்சி  போட்டியில் பாதுகாப்பின் பொருட்டு கலந்து கொள்ளவில்லை .சென்ற வருடம் இங்கு போட்டி கைவிடப்பட்டது எல்லோருக்கும் நினைவு இருக்கும் இங்கு சில கலவர காட்சிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன் ..கலவரக்காரர்களை சமாளிப்பது எங்கள் பொறுப்பு என பஹ்ரைன் நிர்வாகம் பொறுப்பு எடுத்துள்ளது .ஆனால் இதை பார்முலா கூட்டமைப்பு மறு பரிசீலினை செய்திருக்கலாம் .மனதில் கலவரத்தோடு ஓட்டுபவர்களும் . ரசிகர்களும் எப்படி தன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என தெரியவில்லை .


3 comments:

தமிழ்மகன் said...

கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !

http://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.html

Caricaturist Sugumarje said...

அருமை!
நல்ல வர்ணனை!!

மின் தடை எல்லாவற்றையுமே பாதிக்கிறது என்பது உண்மை!

AUTOMOBILE தமிழன் said...

நுணுக்கமான தொகுப்பு