உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, March 25, 2011

பார்முலா குதிரை





இந்த படத்தை எதோ ஒரு தருணத்தில் பார்த்திருப்போம் .தலையில் அணியும் தொப்பிமுதல் சூ வரை பலர் அணியும் உள்ளாடைகளில் கூட இந்த இலட்சினைஇருக்கும் . பொருளுக்கு விலையும் அதிகமாகச்  சொல்வார்கள்.
அப்படி இதன் முக்கியத்துவம்தான் என்ன .ஏன் ?

வேகத்தை விரும்புவர்களின் அடையாளமாக இந்தகுதிரை சின்னம் தோற்றமளிக்கும் 

 பின்னிரண்டு கால்களை தரையில் பதித்து  முன்னிரண்டு கால்களை தூக்கி பாயும் நிலையில்(Prancing Horse) இருக்கும் .இந்த அழகிய சீறிபாயும் கருப்பு மின்னல் குதிரைக்கு பின்னால்மஞ்சள் நிறமும் குதிரையின் காலுக்கு கீழே SF (Scuderia Ferrari) எழுத்தும் இருக்கும்.மேல் பகுதியில் இத்தாலிய கொடியின் நிறமான சிவப்பு வெள்ளை பச்சை இருக்கும் .


கார்,பஸ் ,இருசக்கர வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் இந்த அடையாளம் இருப்பதை பார்க்கலாம் இதன் பிரபலத்திற்க்கு முன்னணி கார் மட்டும் சில விற்பனை பொருள்கள்தான் காரணம் .ஆனால் 
 முதல் உலகப்போரின் சோகம்அதற்கு பின்னாலே ஒளிந்து கொண்டு இருப்பதை வெகு சிலரே உணர்வார்கள் .

கடந்த 1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப்போரில் இத்தாலிய விமான படை வீரர் கவுன்ட் பிரான்சிஸ்கோ பராக்கா (Count Francesco Baracca.)தன்னுடைய போர்விமானம் Spad XIII ல்
சிலிர்க்கும் குதிரை விமானத்தின் பக்கவாட்டில் வரையப்பட்டு இருக்கும் சின்னத்தை பயன்படுத்தினார் 

இத்தாலியின் மிக சிறந்த ஹீரோவாக முதல் உலகப்போரில் மதிக்கப்பட்டவர் .சுமார் 34 வெற்றிக்குமேல் அடைந்தவர் அவரின் பலவேற்றிக்கு இந்த லட்ச்சினை காரணம் என நம்பினாராம் .முடிவில் இத்தாலிய நாட்டுகாகஎதிரி படையால் கொல்லப்பட்டார் என்றாலும் தலையில் குண்டு துளைக்கப்பட்டு கையில் பிஷ்டலுடன் கண்டு எடுக்கப்பட்ட அவர் உடல் ,மரணத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தினாலும்  அந்த வீரமரணம் இத்தாலிக்காக தியாகத்தை விதைத்தது இருக்கிறது


1923 ஆம்ஆண்டு ஜூன் மாதம் 17 நாள்  பெர்ராரி நிறுவனர் என்ஜோபெர்ராரி Enzo AnselmoFerrari)

 தனது ராவேன்னாவில் உள்ள செவீயோ ட்ராக்கில் Savio track)வெற்றி பெற்றபோது ,கவுன்ட் பிரான்சிஸ்கோ பராக்காவின் தாய் போயோளினாவை  (Countess Paolina) சந்தித்தார் அப்போது அவர்கள் தன்னுடைய மகன் இறந்தபோது பயன்படுத்திய விமானத்தின் குதிரை படம் உள்ள  ஒருபகுதியை கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுமாறு சொன்னதாக  சொல்லப்படுகிறது .
அதனை சில மாற்றங்கள் செய்து அதிகார பூர்வமாக 1929 ஆண்டிலிருந்து லட்டர்  பேடாக பயன்படுத்த தொடங்கினார்.1932 ஆம் ஆண்டில்ஜூலை 9  ஆம் நாள்  நடைபெற்ற போட்டியில் ஸ்குடெரியா ஃபெராரி போட்டியிட்ட ஆல்ஃபா ரோமியோக்களில் பயன்படுத்தப்பட்டது
ஆனால் பல மாற்றங்களுடன் 

முதல் மாற்றம் குதிரையின் வண்ணம்   மேகம் போல சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்பூசப்பட்டு வரையப்பட்டு இருந்ததை கருப்பு வண்ணத்திற்கு மாற்றினார் 

இரண்டாவதாக ,பின் புலம் மஞ்சளாக தன்னுடைய பிறந்த மடோனா நகரத்தின் வண்ணத்தில் கொண்டுவந்தார் 
மூன்றாவதாக  குதிரையின் வால் கீழே தொங்கிய நிலையில் இருப்பதை மேல் நோக்கி உயர்த்தினார்.

நான்காவதாக பிரான்சிஸ்கோ பராக்கா குதிரைப் பின்னங்கால்களை  மண்ணில் வலுவாக ஊன்றியிருக்கும்ஆனால் ஃபெராரியின் காவாலினோ போல் ஊன்றியிருக்காது.

பழைய நாணயங்களில் ஜெமனியின் ஒரு நகர அரசு சின்னமாக விளங்குகிறது .பென்ஸ் காரின் வடிவைம்ப்பு மற்றும் போர்சே கார் கம்பெனிகளின் குதிரைகளின் வடிவத்திலிருந்து வேறுபடுத்திட விரும்பியே மேற்படி மாற்றங்களை என்ஜோபெர்ராரி செய்தார்  .

இன்றைய பளீர் பெர்ராரி குதிரை வடிவத்தை பார்முலா போட்டிகளில் நிரம்பி வழிகிறது . 

பலவகையான கார் உற்பத்தியில் இந்த குதிரை வடிவம் கண்ணை அல்லாமல் விடுவதில்லை 
 ஆனால், இனி நம் கண் இந்த குதிரை வடிவத்தை இரண்டு காரணத்திற்க்கு பார்ப்போம் .ஒன்று அதன் தியாகம் மற்றொண்டு அதன் அதிஷ்டத்தின் பயணத்தில் முடியாத தொடர்வை ...






மீண்டும் ரேசில் சந்திக்க வேகம் எடுக்கும் முன் 
 யார் நம்மை பார்ப்பது ?

2 comments:

Chitra said...

very interesting facts. Thank you.

Sugumarje said...

தேடலுக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்...ஆர்வத்தை தூண்டும் முயற்சி... வாழ்த்துக்கள் :)

Word Verification Off செய்துவிடவும்... அனானிமசுக்கு இல்லை அனுமதி :)