உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Wednesday, March 23, 2011

F1 களம் இந்தியாவில்


.இந்தியாவில் F1 களம் அமைப்பது குறித்து கடந்த 1997 லிருந்து உருவாக்க திட்டம் பேசப்பட்டது.அப்போது கொல்கத்தா நகரம் பரிந்துரைக்கப் பட்டது.ஆனால் செலவுக்கும் ,சில அரசியல் நிலைப்பாடும் காரணமாக தள்ளிப்போடபட்டது .2003 ல் நமது சென்னை இருங்காட்டு கோட்டையிலும் ,கோவை காரி நினைவு வேக களம் மட்டுமே  இருந்தது .பங்களூருவில்  நிலம்  சோதிக்கப்பட்டது .அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு உடனே 6.1கீ .மீ(1500 ஏக்கர் ) நில பரப்பை ஒதுக்கி 7 வருட ஒப்பந்தமும் செய்து  2007 ல்   சிவப்பு கம்பளம் விரித்து  வரவேற்றார் .அங்கேயும் தேர்தல் பிரசாரத்தில் இது அதிகம் பேசப்பட்டது (விவசாய நிலம் அபகரிக்க பட்டதாக ) ஆட்சி மாற்றத்திற்கு கூட F1 காரணமாக இருந்தது .முமபையில் அமைக்கவும் மிகவும் எதிர்பார்கபட்டது துறைமுகம் ,மற்றும் சிறந்த சுற்றுலாத்தலம் என்பதாலும் .டெல்லி விஜய் மல்லயாவால் Street Circuit பரிந்துரைக்க பட்டது .ஆனால் முடிவு?
2007 ல்  Indian Olympic Association - IOA ஆல் முறையாக் அறிவிக்கப்பட்டதுதான் இப்போதைய Jaypee International Race Circuit .அப்பாடா என்றாகிவிட்டது F1தலைமையாளர் பெர்ண்ணீ எக்லேஸ்டோனுக்கு (Bernie Ecclestone)

நமது தலை நகர் புது டெல்லியில்லிருந்து 40 கீ .மீ .தூரத்தில்உத்தர் பிரதேசத்தில் கிரேட்டர்  நொய்டாவில் உருவாகிவரும் ஜெய்பீ ஸ்போர்ட்ஸ் இண்டர்நேசனல் (jaypee Sports International)களம் 3.6 சதுர கீ .மீ பரப்பளவில் 5.14 கீ .மீ நீளத்தில் 10 முதல் 14 மீட்டர் அகலத்தில் தோரயமாக $350 மில்லியன் செலவில் உருவாக்கபடுகிறது .தரத்தில் மற்றைய உலகநாடுகளுடன் போட்டி போடும் சிறப்பான களம் என்பதற்கு மிகப்பெரிய சாட்சியே இதை உருவாக்கியவர் ஹெர்மன் டில்கே ( Hermann Tilke)என்பதால்தான் 
உலகின் மொத்த பயன்படும் அமைப்பில் உள்ள 68 ரேஸ் தளங்களில் 17 தளங்களின் உருவாக்கத்திற்கு சொந்தகாரர் .அதுமட்டுமல்லாமல் இந்தியாவை போல மேலும் அமெரிக்காவிலும் இரண்டு களம்  ( Austin Formula One circuit,Atlanta Motorsports Park) உருவாக்கத்தின் மூளையும்  இவரே .
 
உலகத்தில் உள்ள நான்கு வகையான ( Hybrid, ,Street circuit ,Road circuit Race circuit,)
Hypride-(Abu dhabi)


Street Circuit (SPAIN)

Road circuit(France)

Race circuit(India)


 ரேஸ் சாலை சாலை அமைப்புகளில் நமது ஜெய்பீ ஸ்போர்ட்ஸ் இண்டர்நேசனல்(Jaypee Group Circuit)
F1 மற்றும் GP போட்டிகள் நடத்தும்  வகையாகும் 16 வளைவுகளுடன் (corners) உருவாக்க படுகிறது .போட்டிகளை சுமார்ஒரு லட்சத்து பத்தாயிரம் ரசிகர்கள்   உட்கார்ந்து 
ரசிக்கும் விதமாக உருவாக்க படுகிறது 

மிக சிறந்த ஓட்டுனர் அதிக பட்ச வேகத்தில் 1.27 நிமிசத்தில்  5.14 கீ .மீ நீளத்தை கடந்து விடுவாராம்

மேலும் இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சிக்கும், 10000  மேற்ப்பட்டவர் வேலைவாய்ப்புக்கும் மிக பயனுள்ள வகையில் ௧  F1 வருகை 170 மில்லியன் பண புழக்கத்திற்கும் வழிவகை செய்கிறது .
எதிர்கால இந்திய F1 சாம்பியன் களுக்கு நீண்ட நம்பிக்கை பாதை காத்திருக்கிறது 
வரும் அக்டோபர் மாதம்30 ல்  F1 திருவிழா தொடங்க போகிறது 
வாருங்கள் .இவர்களோடு கார்திருப்பேன்

அடுத்த வேகம் எப்போது ?


No comments: