உங்கள் உலகுக்கு சொல்லுங்கள்!


Friday, January 6, 2012

Check to the F1 Sport


MADE IN INDIA  கதை.


இந்தியர்களின் திறமையை பற்றி மிக அற்புதமான உதாரணங்கள் சொல்வார்கள் .

நன்றி சுகுமார் ( www.sugumarje.com )

சாதாரண கண்ணுக்கு தெரியாத ஊசி ஒன்றை கண்டறிந்த ஒரு வெளிநாட்டுக்காரர் கர்வத்துடன் வந்து நம் இந்தியரிடம் கேட்டாராம்  எங்களின் திறமை உங்கள் நாட்டுக்கு உண்டா என்பதாக .அதர்க்கு நம் இந்தியர் அந்த ஊசியை வாங்கிப் பார்த்து விட்டு கொஞ்ச நேரத்தில் தந்து விட்டாராம் .கர்வத்துடன் அதை பெற்றுக்கொண்ட அந்த வெளிநாட்டுக்கரர் இதே கதையை சொல்லி வேறு ஒரு நாட்டுக்காரருக்கு காட்டினாராம் .அதை நுண்ணோக்கியில் பார்த்த அவர் கேட்டராம் ஏன் இந்தியர்களின் கண்டுபிடிப்பை உங்களுடையது என சொல்லுகிறீர்கள் என்றாராம் .அதை கேட்ட நம் கர்வத்துக்கு சொந்தக்காரர் , தான் கண்டுபிடித்த  ஊசியை  நுண்ணோக்கியில் பார்த்தபோது அந்த ஊசியில் " MADE IN INDIA" என பொறிக்கப்பட்டு இருந்ததாம் .அப்படி ஒரு விஷயம் நம் ரேஸ் போட்டியில் நடந்தேறியுள்ளது .

அதர்க்கு பெயர் i1 Super Series .


ஆசிய கண்டத்தின் வளர்ந்து வரும் நாடுகளின் மையமாக இந்தியாவை கருதி இங்கு பார்முலா 1 ரேஸ் நடத்த மிக ஆர்வாமாக FIA கால் பதித்தது .மேலும் இந்திய கிரிகெட் மோகம் FIA மேலிடத்தை கவர்ந்தது காரணம் இந்திய உலக கிரிகெட் போட்டியின் இறுதி போட்டியை தொலைகாட்சி மூலம் ரசித்தவர்கள் மொத்தம் 67 மில்லியன்உலக மக்கள் .ஆனால் இன்று இந்திய மோட்டார் போட்டிகளின் கணக்கு அதே பார்முலா 1 போட்டியின் உலக ரசிகர்கள் 527 மில்லியன் மக்கள் மேல் பதிந்துள்ளது .எனவேதான் இந்த திட்டம்

அறிமுக இடம்  Trident Hotel



பார்முலா 1  போட்டி இந்தியாவிற்கு வரும் முன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் மும்பையின் - நாரிமன் பாயிண்டில் உள்ள Trident Hotel வளாகத்தில்


 Machdar Motorsports Pvt. Ltd. மூலம் இந்திய மோட்டார் உலகத்திற்கு ஒரு புதிய பரிமாணம் அறிமுகபடுத்தபட்டது

அதன் பெயர் ரேடிகல் SR3 ஸ்போர்ட்ஸ் கார் .


அறிமுகமே அதிரவைத்தது. வண்ணமிகு ஒளி வெள்ளத்திற்கு மத்தியில் இந்திய ராஜாக்களின் ரதம் போல கம்பீரமாய் காட்சி தந்தது .

இந்தியா இங்கும் புறகணிக்கபடுமா ?



இந்திய ரேஸ் வீரர்கள் ஒவ்வொருவராய் திறமை இருந்தும் புறகணிக்கப்படும் நிலை முற்றிலுமாய் நீக்கப்பட்டு மொத்தமுள்ள ஒன்பது அணிகளிலும் கட்டாயமாக ஒரு இந்திய குடிமகன் இருப்பார் .ஒன்பது அணிகளும் இந்தியர்களுக்கு சொந்தமானதாகவும் இருப்பது இன்னொரு அருமையான விஷயம் .பத்து போட்டிகளில் இந்தியாவில் இரண்டும் மற்றும் எட்டு போட்டிகள் மலேஷியா ,பக்ரைன் ,கத்தார் மற்றும் அரபு எமிரேகதிலும் நடக்க விருக்கிறது .

இன்னொரு IPL (Indian Premier League ) போட்டி போல அழகிய திட்டமிடப்பட்டு FIA Federation International de l'Automobile அங்கீகாரத்துடன் நடக்கிறது ..

           ஆனால் IPL அணியின் ஆயிரம் கோடி ,ஆயிரத்து ஐநூறு கோடிகள் என்ற குதிரை பேரம் இங்கு ( நல்லவேளை) இல்லை. ஆரம்பத்தில் 365 - 400 கோடிகள் ஒன்பது அணிகளின் மொத்த பங்காக இருக்க போகிறது .ஒவ்வொரு அணியும் சுமார் 40 கோடிகள் மதிப்பு பெரும் .

கிரிக்கெட் கடவுளின் புது அவதாரம் 


மட்டுமொரு அம்சம் இந்திய புத் இன்டர்நேஷனல் களத்தில் கோடி அசைத்து போட்டியை முடித்து வாய்த்த நம் சச்சின் இந்த போட்டியின் ‘Brand Ambassador மற்றும் ஆலோசகராகவும் இருப்பார் . IPL வாசனை இங்கும் இருக்கிறது அந்த அணிகளின் ஷாருக் ,மோஹித் பர்மன் (பஞ்சாப் அணி ) அணிகளுக்கு சொந்தக்காரகள் .எது எப்போடியோ இந்திய மோட்டார் போட்டியாளர்களின் திறமை தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக விசுவரூபம் எடுக்க இது பாதையாக அமையட்டும் .



இன்று பிறந்தவர் .




பார்முலா 1 ன் 2008 ஆம் ஆண்டின் மெக்லரண் -மெர்சீடிசின் சாம்பியன் , லீவிஸ் ஹேமில்டன் தன்னுடைய 27 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் .நாம் சொல்லும் வாழ்த்து அவரை சென்று அடையட்டும் .

வாழ்த்துக்கள் லீவிஸ்


இந்த ஆண்டு இனிய ஆண்டு .


i1 Super Series  வலைத்தளத்திலிருந்து எனக்கு வந்த புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இன்னும் பல விசயங்களை பகிர்ந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது .இது அறிமுகம் மட்டுமே !

 வேகம் தொடரும் ...








1 comment:

Sugumarje said...

நல்ல பகிர்வு... கூடுதல் செய்திகளுடன்... :)